Friday, December 12, 2014

AGRICULTURAL BROADCASTING IN RADIO - வானொலியில் விவசாய ஒலிபரப்பு




விவசாயஒலிபரப்பு

AGRICULTURALBROADCASTING


பண்ணை இல்ல ஒலிபரப்புப் பணி
சகலகலா வல்லமை 



ஒலிபரப்பு தொடர்பான செய்தி 
சேகரிப்பு (INFORMATION GATHERING) 

விவசாயிகளின் தேவைகளை 
கண்டறிந்து (EXPLORING FARMERS' NEED)  
பயிர்கள் மற்றும் பருவங்கள் 
அறிந்து கொள்ளல் (LEARNING CROP & 

SEASON) தேவைக்கேற்ப 
நிகழ்ச்சிகளைத் திட்டமிடுதல் (DEMAND 

DRIVEN BROADCAST PLANNING)  
கிராமங்களில் செயல்படும் வளர்ச்சித் 

துறைகள் (LINE DEPARTMENTS)  
ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் 

பலகலைக் கழகங்களுடன் 
தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளல் 

(RAPPORT BUILDING), 
எல்லாவற்றிற்கும் மேலாக 
விவசாயிகளின் 
அனுவப் பகிர்வு (EXPERIENCE SHARING 
OF FARMERS), நிகழ்ச்சிகளை 

பல்வேறு வடிவங்களில் 
எழுதுதல்; (DESIGNING DIFFERENT FORMATS),  

நிகழ்ச்சி பங்கேற்பில் படித்தல் 
(READING ANNOUNCEMENTS & NEWS)  

நடித்தல் (ACTING IN DRAMAS 
AND DRAMATISED FORMATS) நிகழ்ச்சி 

வழங்குதல் ;;(PRESENTATION OF 
PROGRAMMES)> நிகழ்ச்சியை நடத்துதல் 

(ANCHORING OF PROGRAMMES) 
ஆகியவற்றிற்கு ஏற்ற குரல்வளம் (VOICE 

SUITABILITY) ஆகிய சகலகலா 
வல்லமை ஒரு பண்ணை இல்ல 

ஒலிபரப்பாளரின்  
அவசியத் தேவைகள்.


நகாசுவேலைகள்


நிகழ்ச்சி தயாரிப்பில் 
கவர்ச்சியாக தலைப்பிடுதல் (TITLING); 

இணைப்பு உரைகளை 
வண்ணமயமாக எழுதுதல் 
(WRITING COLOURFUL 

LINKS) ஊடாக பொருத்தமான 
இசை ஒட்டுதல் (MIXING WITH 

APPROPRIATE MUSIC) சேகரித்த 
தகவல்களில் தேவையற்றவை 
மற்றும் மிகையானவை மற்றம் 
தவறானவற்றை வெட்டுதல்

(EDITINGபோன்ற நுட்பமான 
நகாசு வேலைகளில் இவர்கள் 
திறமைசாலிகளாக இருந்தனர்.

குடும்ப உறவுநிலை

ஆரம்பகால பண்ணை 
இல்ல ஒலி பரப்பில் வேலை 
பாரத்தவர்களில் 100 க்கு 99 பேர் 
ஒலிபரப்பக் கலையில் ஆல்ரவுண்டர்களாக 
இருந்தார்கள்.

பொதுவாக படைப்புத் துறையில் 
இருப்பவர்கள் தனித் தீவுகளாக 
இருப்பார்கள். பெரும்பாலும் அவர்களிடம் 
குழுவாக சேர்ந்து பணி செய்யும் 
மனப்பான்மை அதிகம் இருக்காது.

பண்ணை இல்ல ஒலிபரப்பில் 
வேலை பார்த்தவர்களிடையே 
ஒரு குடும்பத்தைச் செர்ந்தவர்களிடையே 
காணப்படும் உறவுநிலை உள்ளது.

அவர்கள்; எப்போதாவது ஒருமுறை 
சந்தித்தால் கூட பண்ணை இல்ல 
நிகழ்ச்சிகள் பற்றிய அனுபவங்களைப் 
பற்றிதான் பேசிக் கொள்ளுவார்கள்.

புதியதாக ஒரு நபர் சேரும்போது 
குடும்பத்தின் இன்னொரு நபராக 
சேர்த்துக் கொள்ளுவார்கள்.

அவர்களிடம் போட்டி 
இருந்தது. பொறாமை இல்லை.

அதனால் ஒவ்வொரு 
வானொலி நிலையத்திலிருந்தும் 
பண்ணை இல்ல ஒலிபரப்புகள் 
விவசாயிகளுக்கும் கிராமப்புற 
மக்களுக்கும் பயனுள்ள நிகழ்ச்சிகள் 
கிடைத்தன
.

பண்ணை இல்ல 
ஒலிபரப்புத் தமிழ்

வானொலிக்கான மொழி 
எளிமையாக இருக்க வேண்டும்
புத்தகங்களைப் போல, புரியவில்லை 
என்றால் மீண்டும் ஒரு முறை படித்துப் 
பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை.

அந்தந்த பகுதி மக்களின் 
வட்டார சொற்களை பயன்படுத்தும்போது 
நேயர்கள் அந்த நிகழ்ச்சியை 
விரும்பிக் கேட்பார்கள்.

வானொலி நிகழ்ச்சிக்கு 
எழுதும்போது நேயர்களை 
மனதில் கொள்ள வேண்டும்.

மலைபடுகடாம்

கூடுமான வரை ஆங்கில 
சொற்களை தவிர்க்க வேண்டும்
ஆனால் அவர்களுக்கு மலைபடுகடாம் 
தமிழில் று த ல் கூடாது.

ஆங்கிலத்தைவிட தமிழ் 
கடினமாக இருக்கக் கூடது.

துவிச்சக்கர வண்டி என்பதை விட 
சைக்கிள் என்றும், வழலையம் 
என்பதற்கு பதில் சோப்பு என்றும், 
கொட்டைவடிநீர் சாப்பிடுகிறீர்களா ?  
என்பதற்கு பதில் காப்பி சாப்பிடுகிறீர்களா
என்றே எழுதலாம்.

வட்டார சொற்களையும், 
வழக்கு சொற்களையும் 
பயன்படுத்துகிறேன் பேர்வழி 
என்று முகம் சுளிக்கும் 
சொற்களை முகர்ந்துகூட 
பார்க்கக் கூடாது.
 
குறிப்பாக பழமொழிகளைக் 
கையாளும்போது மிகுந்த 
எச்சரிக்கையுடன் பயன்படுத்த 
வேண்டும். சில சமூகத்தை 
சில தொழில்களை கொச்சையாக 
சித்தரிக்கும் சொற்றொடர்களையும் 
தவிர்க்க வேண்டும்.

அவர்களை பயமுறுத்தாத 
மொழியில், சிறுசிறு 
வாக்கியங்களாக மொழியை 
செதுக்கி எடுத்தால்தான் சிறந்த 
நிகழ்ச்சி என்னும் சிற்பம் சித்தியாகும்.

அறிவியல் சொற்களை 
கையாளும்போது சரியான 
சொற்களை கையாளுவது ஒரு புறம் 
இருந்தாலும் கேட்பவர்களுக்கு 
புரியுமா என்று உணர்ந்து 
அதனைப் பயன்படுத்த வேண்டும்.

இரட்டைப் பொருளும் 
அர்த்தமும் தரக்கூடிய சொற்களை 
எச்சரிக்கையுடன் பயன்படுத்தக் கூடாது.

செய்திகள் மற்றும் அறிவிப்புகளைப் 
படிக்கும்போது இலக்கண சுத்தமாக 
தமிழைப் பயன்படுத்துவதும்
இதர நிகழ்ச்சிகளில் பேச்சுத் தமிழ்
யன்படுத்துவதும் மரபாக உள்ளது.

லத்தீன் மற்றும் கிரேக்கம் 
(LATIN & GREEK)

அறிவிப்புகளில் பயன்படுத்தப்படும் 
தமிழ் இலக்கண சுத்தமாக இருக்கும்.

இந்த அறிவிப்புகளை சரிபார்த்து 
தேவைப்பட்டால் எளிமையாக 
மொழி மாற்றம் செய்து பின்னர் 
நிலைய அறிவிப்பாளர்களைக் 
(ANNOUNCERS) கொண்டு அறிவிக்கப்படும்.

கை தேர்ந்த நிலைய 
அறிவிப்பாளர்களுக்குக் கூட 
பண்ணை இல்ல ஒலிபரப்பின் 
அறிவிப்பில் உள்ள 
உரங்களின், பூச்சிப் பூசணங்களின் 
பெயர்கள் 'லத்தீன்கிரேக்கம்' ஆக 
தடுமாறுவார்கள்.

அவர்களுக்கு சரியான 
உச்சரிப்பை பண்ணை இல்ல 
அலுவலர்கள் சொல்லித்தர வேண்டும்.





No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...