Friday, December 12, 2014

MASTERS OF RADIO COMMUNICATION - துகிலி சுப்பிரமணியன்


வலி தெரியாமல்ஊசி போடும்டாக்டர்


THUGILI SUBRAMANIAN


அமரர் துகிலிசுப்பிரமணியன் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் துகிலி என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் கிராம நல அலுவலராக பணியாற்றியவர்.

விவசாயிகளிடையே அவருக்கு இருந்த செல்வாக்கு வேறு எவருக்கும் இருந்ததில்லை.

சாதாரண மக்களிடம் பேட்டி எடுப்பதில் அவர் அசகாய சூரன். அவருக்கென்று ஒரு பாணியை வைத்திருந்தார்.

தம்பி உம் பேரு என்ன ? எங்கபடிக்கற ? என்றுகேட்டுக் கொண்டே வலி தெரியாமல் ஊசி போடும் டாக்டர்கள் ரொம்ப குறைச்சல்.

அந்த மாதிரி துகிலி, அவர் பேட்டி எடுக்கிறார் என்ற உணர்வே இல்லாமல் பேட்டியை பதிவு செய்து விடுவார்.

பேட்டியைத் தொடங்கும்போது சுழல் பந்துமாதிரி எதிர்மறையான               Nகள்வியைத் தூக்கி வீசுவார்.

பேட்டியாளர்களை உசுப்பிவிட்டு உணர்ச்சிமயமாக செய்திகளை உருவிவிடுவதில் எமக்ராதகன்.

ஒருமுறை வெண்பன்றி வளர்ப்பு பற்றி துகிலி ஒரு பேட்டி கண்டார்.
நீங்க என்ன செய்றீங்க ?

வெண் பன்றி வளக்கறேன்

பண்ணியா வளக்கறீங்க ?; என்று குரலில் கிண்டலாக ஒரேஒரு கேள்விதான்.

பேட்டியாளருக்கு வந்தது கோபம் (ன்) சார் பன்றி வளக்கறது கேவலமா ?

அது எவ்ளோ வருமானம் குடுக்குது தெரியுமா? வேற எது இவ்ளோ லாபம் குடுக்கும் ?என்று கேட்ட அவர் வெண் பன்றி வளர்ப்பு பற்றி மளமள வென்று முழுசாய்; சொல்லி முடித்தார்.

மனுஷன் ஒரேஒரு துணை கேள்வி கேட்க வேண்டுமெ ! மூச் !

மிக நுணுக்கமான புகைப்பட கலைஞர் .பயிர்களில் பார்க்க சிரமப்படும் அளவுக்கு சிறிய பூச்சிகளைக் கூட தனது கேமராவில்; மடக்கிப் பிடித்து விடுவார்.

பல ஆய்வுக் கூடங்களில், விவசாய அலுவலகங்களில் மாட்டி வைக்கப்பட்டுள்ள பூச்சிகளின் குளோசப் படங்கள் துகிலியின் கைவண்ணம்தான்.

நிழலுக்குக் கூட பள்ளிக்கூடத்தில் ஒதுங்காத பாமரர்களுக்குக் கூட புரியும்படியான பேச்சுத் தமிழ் அவருடையது.

எவ்வளவு பெரிய மேடை என்றாலும் எத்தனை பெரிய அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் என்றாலும் கூட தான் சொல்லவந்ததை தேங்காய் மாதிரி போட்டு உடைக்கும் தைரியசாலி.

விஞ்ஞான வீராச்சாமி, கறார்கந்தசாமி, வாத்தியாரய்யா ஆகியவை வானொலிக்காக பிரபலமான கதாபாத்திரங்களில் கூடுவிட்டு கூடு பாய்ந்தவர்.

உருட்டாமல் மிரட்டாமல் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் கீழே இறங்கிப் போய்  வேலை வாங்கி விடுவதில் சாமர்த்தயசாலி;.

வானொலி மீதும் விவசாயிகள் மீதும் அவர் வைத்திருந்த வெறித்தனமான அன்பை எந்த ஒரு கருவியினாலும் அளந்துவிட முடியாது.

தேவ.ஞானசூரியபகவான், ஆசிரியர், விவசாயப்பஞ்சாங்கம் வலைத்தளம், பூமி அறக்கட்டளை, தெக்குப்பட்டு கிராமம் &  அஞ்சல், நாட்றம்பள்ளி வட்டம், வேலூர் மாவட்டம் - 635 801 தொலைபேசி: 91 / 8526195370 மின்னஞ்சல்: gsbahavan @gmail.com வலைத்தளம்: www.vivasayapanchangam.blogspot.in 




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...