Monday, December 1, 2014

முள்ளில்லாத சப்பாத்தி - ஆடு மாடுகளுக்கு அல்வா மாதிரி THORN-LESS CACTUS DELICIOUS CATTLE FEED


பிரேசில் நாட்டில்  
எனது அனுபவம்    

முள்ளில்லாத  சப்பாத்தி - 
ஆடு மாடுகளுக்கு 
அல்வா மாதிரி 



THORN-LESS CACTUS 

DELICIOUS CATTLE FEED 




பச்சை நிற ரொட்டித்துண்டு மாதிரி முள்ளில்லாத சப்பத்திக்கள்ளியை (சக) வெட்டி வைத்திருந்தார்.

மீண்டும் அவற்றை 'க்ராக்ஜாக்' பிஸ்கட் மாதிரி ஒரு மிஷின் மூலம்  சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கினார்.




அவர் வைத்திருந்தது பவர் மிஷின். அது நிமிஷத்துல 'மடக் மடக்' என்று வெட்டித் தள்ளியது.

வெட்டித் தள்ளிய ச.க. துண்டுகளை ஒரு சிறிய கைவண்டியில் ஏற்றினார். அது ஒரு தள்ளு மாடல் வண்டி.  இரண்டு சக்கரம், பிடித்துத் தள்ள இரண்டு நீளமான கைப்பிடி,

யார் வேண்டுமானாலும் தள்ளிக்கொண்டு போகலாம்.

அந்த வண்டியை பக்கத்திலேயே இருந்த
ஆட்டுக்கொட்டடிக்கு தள்ளிகொண்டு போய் நீளவசத்தில் இருந்த, அந்த மரத் தொட்டியில் அந்த ச.க. துண்டுகளைக் கொட்டினார்.

அல்வா மாதிரி, ஆடுகள் தலையை ஆட்டி ஆட்டி  சாப்பிட்டன.

கருப்பும் காவி நிறக் கலப்புமாய் இருந்த ஆடுகளைப் பார்த்ததும் எனக்கு தமிழ்நாட்டு பழமொழி  ஒன்று ஞாபகத்துக்கு வந்தது.

"ஆட்டுக்கு வாலை அளந்து வச்சிருக்கான்'

ஆனால் அந்த பழமொழி அந்த ஆடுகளுக்குப் பொருந்தாது. காரணம் அந்த ஆடுகள் 'வெல்வட்' வால் வைத்திருந்தன.


ஆனால் மாட்டு வால் மாதிரி நீளமாக இருந்தது. ஆனால் நுனியில் குஞ்சம் இல்லாத வால்.

ஆச்சரியமாய் இருந்தது.




(நபார்டு வங்கி ஏற்பாடு செய்திருந்த பிரேசில் பயணத்தின் அனுபவத் திரட்டு)

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...