பதினாறு
மா
ரகங்கள்
SIXTEEN
MANGO
VARITIES
பீட்டர் (அ) நடுசாலை,(அ) பீட்டர்பசந்த், (அ) ராஸ்புரி(அ), பெய்ரி,(அ) கிரேப், (அ)எர்ர கோவா:
மேற்கு இந்தியாவின் வியாபார ரகம்
•ஹிமாயுதீன் (அ) இமாம்பசந்த்:
ஒரு காலத்தில் மொகலாய அரசர்களின் தோட்டங்களில் வாசம் செய்த ரகம்
•ஜெகாங்கீர்: எலுமிச்சை நிற பெரிய சைஸ் பழங்கள் கொண்ட நாரில்லா ரகம்
ஓளுர்
ஒன்றுக்கு மேற்பட்ட செடிகள் வளரும் விதை (POLY EMRYONIC SEEDS), கொண்டது, கேரளாவின் பிரபல ரகம்.
•பாப்பக்காய் மற்றும் சந்திரகாரன்:
ஒன்றுக்கு மேற்பட்ட செடிகள் வளரும் விதை கொண்ட ரகங்கள்.
தாஷிஹரி
நல்ல தோற்றம், சுவை, மணம்,கொண்ட வட இந்தியாவின் பிரபலமான மா ரகம்.
லங்ரா
15 ஆண்டுகளுக்குப் பின்னால் சக்கைப்போடு போடும் புகழ் மிக்க வட இந்திய பிரபலம்.
•சவுசா (அ) காஜ்ரஜ் (அ) சாமர் பாஹிஸ்ட்:
மென்மையான மஞசள் நிற பெரிய சைஸ் நார் மிகுந்த தசை உடைய பழங்கள் தரும்.
ரத்னா
அற்புதமான சுவை, அட்டகாசமான மணம்,நீலம் மற்றும் ரத்னகிரி ரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட ஒட்டு ரகம், மகாராஷட்ரா மாநிலம் கொங்கன் கிரிஷி வித்யாபீத் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.
மல்லிகா
நடுத்தர சைஸ், கேட்மியம் நிற பழங்கள், நிறைய நாள் வைத்திருந்து சாப்பிடலாம், ஆண்டு தோறும் ஏமற்றாமல் காய்க்கும் குணம (சுநுபுருடுயுசு டீநுயுசுஐNபு);;ரூபவ் நீலம் மற்றும் தாஷிஹரி ரகத்தை ஒட்டு சேர்த்து, புதுடில்லி இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தால் (ஐ ஊ யு சு) உருவாக்கப்பட்டது.
அமரபாலி
:
குட்டை மரங்கள், ஒரு எக்டரில் 1600 மரங்கள் நடலாம். ஆண்டு மாறாமல் காய்க்கும், பின்பட்ட காய்ப்பு தரும்ரூபவ் தாஷிஹரி, நீலம் ரகங்களை ஒட்டு சேர்த்து,புதுடில்லி இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தால் (ஐ ஊ யு சு) உருவாக்கப்பட்டது, 16 டன் வரை பழங்கள் தரும்.
மஞ்சிரா:
நடுத்தரமான சைஸ், வெளிர் மஞ்சள் நிற பழங்கள், நாரில்லாத அழுத்தமான தசை, இனிமையான சுவை, ஆண்டு தவறாமல் காய்க்கும் குணம், ருமானி நீலம் ரகங்களை ஒட்டு சேர்த்து, புதுடில்லி இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்தால் (I C A R) உருவாக்கப்பட்ட ரகம்.
நிரஞ்சன்
165 கிராம் எடை, மரத்திற்கு 600 பழங்கள், பிப்ரவரியில் பூத்து அக்டோபரில் அறுவடைக்கு வரும். பர்பானியில் உள்ள மரத்வாடா வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தால் தேர்வு செய்யப்பட்ட ரகம்.
அர்க்கா அருணா
ஆண்டுக்கு ஆண்டு காய்ப்பு, கிரீம் நிறத்தில், நாரில்லா தசை (FIBRELESS FLESH) , 400 கிராம் எடையில் பெரிய சைஸ் பழங்கள், அல்போன்சோவுக்கு இணையான தரம், அல்போன்சோ, பங்கனபள்ளி இரங்களை சேர்த்து ஐ ஐ எச் ஆர் (INDIAN INSTITUTE OF
HORTICULTURAL RESEARCH) பெங்களுரில் உருவாக்கிய வீரிய ஒட்டு ரகம்,
அர்க்கா புனித்;
செவ்வரி ஓடிய அழுத்தமான மஞசள் நிற பழங்கள், பல நாள் கெடாத பண்பு, நாரில்லாத, பஞ்சுத்திசு இல்லாத (WITHOUT SPONGE TISSUE) பழரூடவ் தாக்குதல் இல்லா (RESISTANCE TO FRUIT FLY) சிறப்பு, 20 முதல் 22 பிரிக்ஸ் இனிப்பு, நடுத்தர சைஸ், 200 முதல் 300 கிராம் எடை, ஆண்டு
Nதூறும் காய்ப்பு, பெங்களுர் ஐ ஐ எச் ஆர், அல்போன்சோ, பங்கனபள்ளி ரகங்களை இனக்கலப்பு செய்து உருவாக்கிய ரகம்.
அர்க்கா அன்மால்
ஏற்றுமதிக்கு (EXPORT VARIETY) ஏற்றது, சீரான மஞ்சள் நிறத்தால், ஆரஞ்சு வண்ண பழத்தசை, நடுத்தர சைஸ், பழங்களின் சராசரி எடை 200 கிராம், ஆண்டுதோறும் காய்ப்பு, ரகத்தின் பெற்றோர் அல்போன்சோ மற்றும் ஜனார்தன் பசந்த், ரகத்தை உருவாக்கியது பெங்களுர் ஐ ஐ எச் ஆர் (I I H R) ஆராய்ச்சி நிலையம்.
அர்க்கா நீலிகிரன்ஸ் (ARKA NEELIKIRES)
• நீலம் அல்போன்சோ ரகங்களை ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்டது, நீலம் ரகத்தைவிட தரத்தில் உயர்வானது, அடர் நடவுக்கு (HIGH DENSITY PLANTING) ஏற்றது, ஒரு எக்டரில் 204 செடிகள் நடலாம். சீரான தங்க நிறத்தில் பழங்கள் ஜொலிக்கும்;, பழுக்கத் தொடங்கியதும் பழங்களின் கன்னக் கதுப்பில் செவ்வண்ணம் படரும், பழத்தசையின் நிறம் அழுத்தமான மஞ்சள். நார், பஞ்சுத்திசு இல்லாத சிறப்பு, இனிப்பின் அளவு 19.5 பிரிக்ஸ், சராசரி பழ எடை 260 கிராம், 67 சதம் பழக்கூழ், தரம் சிறப்பு அத்தனைக்கும் சொந்தமானது இந்த ரகம்.
சிந்து (SINDHU)
விதையில்லா மாம்பழம் (SEEDLESS) என்ற சிறப்புக்கு உரிய ஒரே ரகம், பேப்பர் மாதிரி மெல்லிய விதையுடைய இதனை கண்டுபிடித்தது வெங்குர்லா ஆராய்ச்சி நிலையம் (VENGURLA RESEARCH
STATION)
No comments:
Post a Comment