Thursday, December 11, 2014

MASTERS OF DEVELOPMENT COMMUNICATION - டி.கனபதி, டி.பி. தாண்டவராயன்


பிபிசி வெள்ளைக்காரர்


OPENING BATSMEN 

D.GANAPATHY,  T.P.THANDAVARAYAN




தமிழ்நாட்டின் பண்ணை இல்ல ஒலிபரப்பு அகில இந்திய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் பேசப்பட்டதற்குக் காரணமாக இருந்த முன்னோடிகள் டி.கணபதி, டி.பி. தாண்டவராயன்,;; துகிலிசுப்பிரமணியன்.; அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் முருகானந்தம், பைம்பொழில் நாகூர் மீரான்.
;

டி.கணபதி


தமிழ்நாட்டில் திருச்சி வானொலியில் முதல் விவசாய ஒலிபரப்பின் பண்ணை வானொலி அலுவலராக (FARM RADIO OFFICER) 1966 ல் பொறுப்பேற்று 1970 ஆம் ஆண்டுவரை பணிசெய்த டி கணபதி அவர்களின் சொந்த ஊர், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கொல்லிமலை அடிவார அழகுகிராமம் சிறுநாவலூர்.
;
1970 ம் ஆண்டில் இந்திய அரசின் மதறாஸ் உர நிறுவனத்தில் (MADRAS FERILIZERS) விற்பனைத் துறை மேலாளராக (MARKETING MANAGER)) சுமார் 18 ஆண்டுகள் பணியாற்றிய கணபதி 1988 ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.


டி. பி. தாண்டவராயன்


வானொலியைவிட்டு; சென்ற பின்னரும் கூட அவர் வானொலி தொலைக்காட்சியின் விவசாய நிகழ்ச்சிகளில் 15 முதல் 20 ஆண்டுகள் தொடர்ந்து விவசாயிகளுக்கு தகவல் தரும் பணி செய்துள்ளார்.
டி. பி. தாண்டவராயன்

டி. பி. தாண்டவராயன், முதலாம் பசுமைப்புரட்சி (FIRST GREEN REVOLUTION) காலகட்டத்தில் ஆடுதுறை 27 நெல் ரகம் ரேடியோநெல் (RADIO PADDY) என்று பெயர் எடுத்தது, பண்ணை வானொலியின் முன்னோடி, நிருபராகச் சேர்ந்து அகில இந்திய அளவில் பண்ணை வானொலி ஒலிபரப்புக்கு தலைமைப் போறுப்பேற்றவர்.

திருச்சி வானொலி மூலம் தமிழ் நாடு முழுவதையும் தமது விவசாய நிகழ்ச்சிகளால் கலக்கியவர்.

பண்ணை வானொலி ஒலிபரப்பில் பல வடிவங்களை அறிமுகம் செய்து வைத்தவர், தமிழின் மீது பற்றும் பாசமும் கொண்ட வேளாண்மை அறிவியல் எழுத்தாளர்.

தமிழகம் முழுவதும் செய்யாறு ஆடலரசன் என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டவர் டி.பி.தாண்டவராயன்.

பிபிசி (BRITISH BROADCASTING CORPORATION) ல் இருந்து மேசன் என்ற வெள்ளைக்காரர் பண்ணை வானொலி பணிகளைப் பார்வையிட திருச்சி வானொலிக்கு வந்திருந்தார்.

மேசன் விருப்பத்திற்கு ஏற்ப திருவையார் என்ற இடத்தில் விவசாயிகளை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார், தாண்டவராயன்.

மேசன் விவசாயிகளிடம் உரையாடும் போது திருவையாறு விவசாயிகள் நாங்கள் ரேடியோநெல் சாகுபடி செய்கிறோம்என்று சொன்னார்.

வெள்ளைக்காரர் என்ன ரேடியோநெல்லா? உங்கள் ரேடியோ நிலையத்தில் நெல் பற்றிய ஆராய்ச்சி எல்லாம் செய்கிறீர்களா ?என்று தாண்டவராயனிடம் கேட்டார்.

அவர் வானொலி மூலம் அந்த நெல்ரகம் பிரபலம் ஆனதால் விவசாயிகள் வைத்தபெயர் அதுஎன்று விளக்கம் சொன்னார்;.

இதுதான் ஆடுதுறை 27 நெல் ரகம், ரேடியோநெல்லாக பரிணாமம் பெற்ற கதை.

அய்யாகொஞ்சம் பாருங்க

அய்யார் எட்டுபயிருங்க

நாலேமாத பயிருங்க

நல்லா விளையும் நெல்லுங்க

குருவைப் பட்டம் தானுங்க

குன்றா விளைச்சல் காணும்ங்க


இந்தியாவின்; பசுமைப் புரட்சிக்கு அச்சாரம்; போட்டநெல் ரகம்.

ஆர் 8 என்ற நெல் ரகத்திற்கு பட்டுக் கம்பளம் விரிக்க வானொலியில் பாட்டுக் கம்பளம் விரித்தவர்; தாண்டவராயன்.

பயிரின் பெயர், வயது, விளைச்சல், பட்டம், பொருனாதாரம் ஆகிய 5 செய்திகள், விவசாயியிடம் நேரடியாக பேசும்வடிவம், நம்பிக்கைஊட்டும்; உணர்வு, எளிமையான சொற்கள்,; கேட்போர்; மனசில் பசைபோட்டு ஒட்டிக் கொள்ளும் தன்மை அத்தனையும் அடங்கிய தாண்டவராயனின் அக் மார்க்விவசாய வானொலிப் பாட்டு.

வடாற்காடு மாவட்டத்தில் செய்யாறு என்ற கிராமத்தைச் சேர்ந்த தாண்டவராயன்; தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் விவசாய பட்டப்படிப்பு (B.Sc (Agri) படித்தவர்.

ஆறு ஆண்டுகள் வேளாண்மைத் துறையில் பணியாற்றிய பின்,  1996 ம் ஆண்டு திருச்சி வானொலியில் பண்ணை இல்ல நிருபராக (FARM RADIO REPORTER) சேர்ந்தார்.

30 ஆண்டுகள் பலபொறுப்புகளில் பணியாற்றி  1997 ம் ஆண்டு பண்ணை இல்ல ஒலிபரப்பின் அகில இந்திய தலைவராக (JOINT DIRECTOR OF FARM AND HOME)  பணியில் இருந்தபோது ஓய்வுபெற்றவர்.

தேவ.ஞானசூரியபகவான், ஆசிரியர், விவசாயப்பஞ்சாங்கம் வலைத்தளம், பூமி அறக்கட்டளை, தெக்குப்பட்டு கிராமம் &  அஞ்சல், நாட்றம்பள்ளி வட்டம், வேலூர் மாவட்டம் - 635 801 தொலைபேசி: 91 / 8526195370 மின்னஞ்சல்: gsbahavan @gmail.com வலைத்தளம்: www.vivasayapanchangam.blogspot.in 





No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...