Friday, December 12, 2014

THREE RADIO STALWARTS - மூன்று ரேடியோ ஜாம்பவான்கள்


மூன்று ரேடியோ ஜாம்பவான்கள்

THREE RADIO STALWARTS 

"நீ படிச்சதை சொல்லிஅவனைக் கெடுத்துடாதே"


PAIMBOZHIL NAGOOR MEERAN




1971 ம் ஆண்டு ஜூலைமாதம் 7 ம் நாள் கள நிருபராக (FEILD REPORTER)   திருச்சி வானொலியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று பின்னாளில் கோவை மற்றும் திருநெல்வேலி வானொலி நிலையங்களில் 2003 ம் ஆண்டுவரை 32 ஆண்டுகள் பண்ணை இல்ல ஒலிபரப்பில் (FARM BROADCAST)  பணியாற்றிய பைம்பொழில் நாகூர் மீரான் நிகழ்ச்சிக்கு எழுதுவது, நிகழ்ச்சி தயாரிப்பது, அவற்றில் பங்கேற்பது எல்லாவற்றிலும் கெட்டிக்காரர்.

பத்து ஆண்டுகள் தொடராக ஒலிபரப்பான ஆலோலம் பயிர்பாதுகாப்பு நிகழ்ச்சி, 10 ஆண்டுகள் ஒலபரப்பான மாயக்கண்ணாடி (திருநெல்வேலி), விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு சொன்ன நிகழ்ச்சி, அகில இந்திய அளவில் ஆகாஷவாணி விருது (AKASHVANI AWARD) பெற்ற நிகழ்ச்சிகள், அர்த்தமுள்ள அழைப்புகள் ;;(MEANINGFUL CALLS OF ANIMALS)  பொன்னாரம் ;;(EFFECTIVE WAYS OF FARM BROADCAST) மற்றும் ஆழிவளம் (EDIBLE GREEN MUZZLES)   ஆகியவை பைம்பொழிலின்; எழுத்திற்கு கட்டியம் கூறிய நிகழ்ச்சிகள்.

திருச்சி வானொலியில் சேர்ந்த இவர் திருநெல்வேலி பண்ணை இல்ல ஒலிபரப்பின் தலைவராக 1988 முதல் 2003 ம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை 15 ஆண்டுகள் பணி செய்தார்.

இந்த வேலை நமக்கு சரிப்படுமா ? நம்மால் சமாளிக்க முடியுமா ? என்று சிந்தித்தேன்என்று சொல்லும் இவர், தனக்கு பண்ணை இல்ல ஒலிபரப்பின் பிதாமகர்கள் என்று கருதப்படும் டி கணபதி, டி. பி. தாண்டவராயன், துகிலி சுப்பிரமணியன் ஆகியோர் தன்னை வழி நடத்தியதாக நன்றியுடன் நினைவு கூர்கிறார்;.

மஞ்சள் பை இளைஞர்


அவர் தனது ஒலிபரப்புப் பணியில் மறக்க முடியாத சம்பவமாக ஒன்றைக் குறிப்பிட்டார்.
" நான் அப்போது திருநெல்வேலி வானொலியில் வேலைபார்த்த சமயம்.; வழக்கம் போல காலையிலேயே ஆபீஸ் வந்திருந்தேன். மஞ்சள் பையும் கையுமாக திருதிருன்னு விழித்தபடி ஒரு இளைஞர் வந்தார். நான் உடனே என்ன விஷயம்னு கேட்டேன்."

துகிலிசாரப் பாக்கணும்

என்னவிஷயம்?

இல்லஅவரத்தான் பாக்கணும்.

டீ சாப்டறீங்களா ?

சரி

எனக்கு வந்த டீயை அவருக்கு கொடுத்தேன். அவர் வாங்கி உடனே குடிக்க ஆரம்பித்துவிட்டார்.

நான் எனக்கு மட்டும்தான் டீ கொண்டுவரச் சொல்லி இருந்தேன்.

இன்னொரு டீ கொண்டுவரச் சொல்லிவிட்டு அந்த ஆளையே பார்த்தேன்.

அவர் எதைப்பற்றியுமே கவலைப்படாமல் டீ குடிப்பதில் மும்முரமாக இருந்தார்.

நான் டீ குடிச்சனா ? இல்லையா ? எதைப்பத்தியும் கவலைப் படாதஆள் ம் . எரிச்சலாக இருந்தது.

அதற்குள் எனக்கும் டீ வந்தது. துகிலியும் வந்துவிட்டார். அவர்தான்; அப்போதைய பண்ணை வானொலி அலுவலர்.

வந்தவர் துகிலிக்கு வணக்கம் வைத்தார்

சார் வணக்கம்

வாங்க வாங்க

என்ன இவரைத் தெரியாது ? நல்லகவிஞர். நல்லா கவிதை எழுதுவார். என்றார் துகிலி என்னிடம்.

அப்படியா ? என்று கடுப்பாக அவரைப் பார்த்தேன்.

அவர் தன் மஞ்சள் பையிலிருந்து ஒருகட்டு பேப்பரை வெளியில் எடுத்தார். அத்தனையும் வாங்கி என்னிடம் கொடுத்தார் துகிலி.

அம்புட்டும் கவிதை. அவர் எழுதியதாம்

அப்புறம் துகிலிதான் அவரிடம் கேட்டார்.

என்னாவிஷயம் சொல்லுங்க ?

எதாச்சும் ஒரு வேலை வேணும்

பழையவேலை என்னாச்சு ?

எங்க அப்பா வேணாம்னு சொல்லிட்டார்

ஏனாம் ?

விவசாயி அவனே நல்லா விவசாயம் செய்வான். நீ படிச்சதை சொல்லிக் குடுத்துக் அவனைக் கெடுத்துடாதே அப்படீன்னார.; அதான் வேலைய விட்டுட்டேன்

துகிலியும் நானும் வாய்விட்டு சிரித்தோம். ஆனால் அவர் சிரிக்கவே இல்லை. பிறகுதான் சொன்னார் துகிலி,  அவர் பி எஸ்ஸி அக்ரி படித்த பட்டதாரி என்று.

சரி இப்பொ என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க ?

இப்பொ எங்க ஊர்ல ஊராட்சிமன்ற தலைவரா இருக்கேன்

ஆச்சரியமாகக் கேட்டேன். எந்த ஊர்ல நீங்கபிரசிடெணட் ?

அவர் ஊரைச் சொன்னார்;;.

தென்கச்சி

அவர்தான் சென்னை வானொலிக்கு வந்து பின்னாளில் இன்று ஒரு தகவல; தந்த தென்கச்சி சுவாமிநாதன் என்று சொல்லத் தேவை இருக்காது.

அதற்குப் பிறகு துகிலி, நாகூர் மீரான், தென்கச்சி மூவரும் சேர்ந்து திருநெல்வேலி வானொலி பண்ணை இல்ல ஒலிபரப்பில் கலக்கியது தனிக்கதை.

திருநெல்வேலி வானொலியின் இரட்டையர்கள் என்று அழைக்கும் அளவிற்கு பைம்பொழில் நாகூர் மீரான், தென்கச்சி கோ.சுவாமிநாதன் இருவரும் நெருக்கம்.

அவருடைய சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் செங்கோட்டை தாலுக்காவில் மேற்குமலைத் தொடரின் மடியில் அமர்ந்துள்ள அழகிய கிராமம் பைம்பொழில். 1943 ஆண்டு பிறந்த இவர், வானொலிக்கு வருவதற்கு முன்  தமிழ்நாட்டில் ஊரக வளர்ச்சித்துறையில் ஊர் நலஅலுவலராக (GRAM SEVAK / RURAL DEVELOPMENT OFFICER)  1964 ஆண்டு முதல் சுமார் 6 ஆண்டுகள் வேலை பார்த்தார்.

தேவ.ஞானசூரியபகவான், ஆசிரியர், விவசாயப்பஞ்சாங்கம் வலைத்தளம், பூமி அறக்கட்டளை, தெக்குப்பட்டு கிராமம்& அஞ்சல், நாட்றம்பள்ளி வட்டம், வேலூர் மாவட்டம் - 635 801 தொலைபேசி: 91 / 8526195370 மின்னஞ்சல்: gsbahavan @gmail.com வலைத்தளம்: www.vivasayapanchangam.blogspot.in 

  .


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...