Saturday, December 13, 2014

மா சாகுபடி எப்படி செய்யலாம் ? - MANGO CULTIVATION HINTS



மா சாகுபடி

எப்படி

செய்யலாம் ?

MANGO CULTIVATION HINTS

 

இடைவெளி (SPACING)

வரிசைக்கு வரிசையும் செடிக்கு செடியும் 6 மீட்டர் முதல் 10 மீட்டர் iர். அடர் நடவு முறையில் வரிசைக்கு வரிசை 10 மீட்டரும் செடிக்கு செடி 5 மீட்டரும் இடைவெளி தர வெண்டும். 

அல்போன்சா, பங்கனபள்ளி, மல்லிகா போன்ற ரகங்கள் இதற்கு ஏற்றவை 

பாசனம்(IRRIGATION)

கன்றுகள் நட்டவுடன் ஒரு முறை, மூன்றாம் நாள் ஒரு முறையும், பின்னர் வாரம் ஒரு முறை மண்ணின் தன்மைக்கு ஏற்ப பாசனம் அளிக்க வேண்டும். 
பாசன வசதி இல்லாதவர்கள் குடங்களில் தண்ணீர் எடுத்து ஊற்றலாம், சொட்டு நீர் (DRIP IRRIGATION) அமைக்கலாம். நல்ல மகசூல் பெற வளர்ந்த மரங்களுக்கு 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனம் அளிக்க வேண்டும்.

பின்செய்நேர்த்தி: (AFTERCULTIVATION)

மானாவாரி நிலங்களில் பருவ மழைக்கு  முன் இடை உழவு செய்தல், கிண்ணங்களை கொத்தி விடுதல் போன்றவற்றை செய்து மண் ரூடவ்ரம் (SOIL MOISTURE) அதிக நாட்கள் இருக்குமாறு செய்ய வேண்டும்.

ஊடு பயிர் சாகுபடி (INTERCROP CULTIVATION)

காய்கறிகள், நிலக்கடலை, பயறு வகை போன்றவற்றை சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்

கிடைக்கும் மழையை அடிப்படையாகக் கொண்டு ஊடு பயிரை நிர்ணயம் செய்யலாம்

மாந்தோப்புகளில் ஊடுபயிர் செய்வது மரங்களின் வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தும்.

கவாத்து (PRUNING)

கவாத்து செய்ய, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில,; மரத்தின் தாழ்வான கிளை, குறுக்கும் நெடுக்குமாக செல்லும் கிளை, ஒன்றின் மேல் ஒன்றாக வளர்ந்த கிளை, காய்ந்த கிளை ஆகியவற்றை நீக்கி மரங்களுக்கு ஊடாக  சூரிய ஒளி மற்றும் காற்று சுதந்திரமாகச் செல்ல வழி செய்ய வேண்டும்.

பூப்பும் காய்ப்பும் (FLOWERING & BEARING)

நடவு செய்த பின், மூன்று ஆண்டுகள் வரை பூக்களை கிள்ளி (REMOVAL OF EARLY FLOWERS)  அப்புறப்படுத்த வேண்டும்

பூக்காத மரங்களுக்கு 5 கிராம் யூரியா () 10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பிப்ரவரி மாதத்தில் தெளிக்க வேண்டும். 
பூ உதிர்வைத் தடுக்க 20 பிபிஎம் (PPM) என் (NAA) மருந்தை தெளிக்க வேண்டும்.

ஒருங்;கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை ( மரம் ஒன்றிற்கு) (INTEGRATED NUTRIENT MANAGEMENT PER TREE)

  நடவு செய்த முதல் ஆண்டு மரம் ஒன்றுக்கு தொழு எரு 10 

கிலோவும் தழைச்சத்து ம்றறும் மணிச்சத்து  0.2 கிலோவும்> சாம்பல்

 சத்து 0.3 கிலோவும் இட வேண்டும்.

அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு தொழு எரு 10 

கிலோவும் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து  0.2 கிலோவும், சாம்பல்

சத்து 0.3 கிலோவும் அதிகரிக்க  வேண்டும்.


6ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு ஆண்டுக்கு மரம் ஒன்றுக்கு தொழு எரு 50 கிலோவும் தழைச்சத்து மற்றும் மணிச்சத்து  1.0 கிலோவும் சாம்பல் சத்து 1.5 கிலோவும் இட  வேண்டும்.

செப்டெம்பர் அக்டோபர் மாதங்களில். இந்த உரங்களை நன்கு கலந்து, செடிகளின் வயதுக்கு ஏற்ப, கன்றுகளின் அடிப் பகுதியிலிருந்து, 45 முதல் 90 செ.மீ. தூரத்தில் இட்டு மண்ணால் மூடி நீர் பாய்ச்ச வெண்டும்.
EZHUTHIYAVAR
தேவ.ஞானசூரியபகவான், ஆசிரியர், விவசாயபஞ்சாங்கம்







No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...