Saturday, December 6, 2014

தெலுங்கு கங்கை இணைப்பு - INTERLINKING OF RIVERS


தவித்த வாய்க்குத் தண்ணீர்


 கொடுக்கும்

ஆந்திரா கர்னாடகா

 மகாராஷ்ட்ராவுக்கு 

நன்றி   

(நதி நீர் இணைப்பு)

பகுதி - 3

INTERLINKING OF RIVERS


தெலுங்கு கங்கை இணைப்புத் திட்டம்


சென்னை பெரு நகரின் குடிநீர் பஞ்சத்தை போக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டத் திட்டம் இது.

கிருஷ்ணா நதியின் நீர் ஸ்ரீசைலம் நீர்தேக்கத்திற்கும், பெண்ணை ஆற்றுப் படுகையில் உள்ள சோமசீல நீர்தேக்கத்திற்கும், கண்டலேறு அணைக்கும் வருகிறது.

அங்கிருந்து 200 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய் மூலம் சென்னையை அடுத்த பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து சேருகிறது.

இந்த நீ ண் ட கால்வாய்கள் மூலம் 2.3 லட்சம் எக்டருக்கு பாசன வசதியைப் பெறுகிறது, ஆந்திரா மாநிலம்.

சென்னைக்கு குடிநீரும் கொடுத்தாயிற்று, ஆந்திராவுக்கு பாசன வசதியும் அதிகம் ஆயிற்று.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா ஆகிய 3 மாநிலங்களுக்கு இந்த தண்ணீர்  உரிமையானது.

ஒவ்வொரு மாநிலமும் தங்கள் உரிமையிலிருந்து 5000 மீட்டர் கியூப் தண்ணீரை இத் திட்டத்திற்கு தாரைவார்த்து வருகின்றன.

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா மாநிலங்களுக்கு நமது நன்றி.

மாநிலங்களின் ஒற்றுமைக்கு இது உதாரணம்.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...