ரேடியோ நெல்
(HISTORY
OF FIRST FARM BROADCAST IN TAMILNADU)
1920 ம் ஆண்டு, இந்தியாவில் காலடி எடுத்து வைத்த மார்கோணியின் ரேடியோ, பசுமைப் புரட்சிக்காக தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் 1966 ல் தனது வாய் திறந்தது.
விவசாயிகள் ஆடுதுறை 27 (ADT.27) நெல் ரகத்தை ‘ரேடியோ நெல்’ என்று அழைக்க பசுமைப்புரட்சிக்கு பச்சைக்கொடி காட்டியது.
1936 ல் ஆல் இந்தியா ரேடியோ ஆன வானொலி, 1947 ல் இந்தியாவில்
25 % நிலப்பரப்பையும், 11 % மக்களையும் சென்றடைந்தது.
தற்போது ஒலிபரப்பு செய்யும் வானொலி நிலயங்கள் 225, சென்று சேரும் நிலப்பரப்பு 91.78 % மக்கள் தொகை 99.14 % ஒலிபரப்பு செய்யும் 24 பிரதான மொழிகள் 24 உள்ளுர் மொழிகள் 146.
வானொலியின் முக்கிய மூன்று நோக்கங்கள் தகவல், கல்வி மற்றும் பொழதுபோக்கு, அத்துடன் வளர்ச்சிக்காக வானொலி’ என்ற அடிப்படையில்
1966 ல் 4 வது நோக்கமாக அத்துடன் சேர்ந்துள்ளது ‘வாழ்வாதாரம்’.
(Source:
Development of Mass Media and its extension in Agriculture: A Feed back Review
of Audience Research Survey in AIR Murshidabad West Bengal – By Proggya Ghatak
JRF – VGG, Department of Anthropology University of Culcutta West Bengal,
India, Email:proggyaghatak@ymail.com)
பசுமைப் புரட்சிக்கு பாய்விரித்தது
(PRELUDE TO GREEN REVOLUTION)
1966
ல் ஜூன் 7 ம் தேதி தமிழ்நாட்டில் விவசாய ஒலிபரப்பிற்கு பிள்ளையார் சுழி போட்டது, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து ஒலிபரப்பியது.
இந்தியாவின் பசுமைப் புரட்சிக்கு பாய்விரித்தது, என்ற பெருமையை உடையது திருச்சிராபள்ளி வானொலி நிலையம்.
திருச்சிராபள்ளியின் தினசரி நிகழ்ச்சிகள
(DAILY BROADCAST)
விவசாயிகள் கண்விழித்ததும் காலை 6.30 மணி முதல் 6.45 வரை 15 நிமிடங்களுக்கு அறிவிப்புகள், வேளாண்மைச் செய்திகள், கேள்வி பதில், திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என நான்கு நாட்களுக்கு மதியம் 2.30 மணி முதல் 2.45 வரை, 15 நிமிடங்களுக்கு கூட்டுறவு, மகளிர் நலம், கல்வி, வேளாண்மை சார்புடைய தொழில்கள், சுய முன்னேற்றம், கோவில்கள், விழாக்கள், போன்றவை தொடர்பான ‘கிராம சமுதாயம்’ பிற்பகல் நிகழ்ச்சி, வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனைத்துறை, விதைச்சான்றுத் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பட்டுப்புழு வளர்ச்சித் துறை, மீன்வளத்துறை, வனத்துறை, இப்படி கிராமங்களில் செயல்படுத்தப்படும் அனைத்துத் துறைகளின் திட்டங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் தினசரி இரவு நிகழ்ச்சி ‘உழவர் உலகம’;;- அனைத்தும் திருச்சி வானொலி, விவசாயிகளுக்கு அளித்த / அளிக்கும் கொடை.
அதிகாரிகளும் ஆராய்ச்சிக்காரர்களும்
(GOVT. OFFICERS & RESEARCH SCHOLARS)
கிராமங்களில் செயல்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் அரசுத்துறை அலுவலர்கள், வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை அறிவியல் பல்கலைக் கழகம், வேளாண்மைக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள், வேளாண்மை அறிவியல் நிலையங்கள் ஆகியவற்றின் விஞ்ஞானிகள், மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்கள் பங்குபெறுவர்
இரவு நிகழச்சிகளின் உள்ளடக்கம்
CONTENT OF NIGHT BROADCASTS
விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய திட்டங்கள், அவற்றின் நோக்கம் செயல்பாடுகள், செயல்படுத்தும் அலவலர்கள், அவற்றால் கிடைக்கும் பயன்கள் குறித்த செய்திகள், பயிர் சாகுபடியில் அதிக மகசூலும் லாபமும் தருவதற்கு ஏற்ற உயர் விளைச்சல் ரகங்கள், நிலத் தயாரிப்பு, விதைப்பு, நடவு, எரு மற்றும் உரமிடுதல், பாசனம் அளித்தல், பூச்சிகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முறைகள் போன்ற நவீன பயிர் சாகுபடி முறைகள், ஆராய்ச்சி நிலையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் கண்டுபிடிப்புகள், புதிய பயிர் சாகுபடி தொழில் நுட்பங்கள் ஆகியவை இரவு நேர நிகழ்ச்சிகளில் இடம்பெறும்.
வானொலி வடிவங்கள்
(RADIO FORMATS)
அறிவிப்புகள், பேச்சு, செய்தி, உரையாடல், கலந்துரையாடல், கருத்தரங்கம், கேள்வி பதில், பேட்டி, வானொலி வேளாண்மைப் பள்ளி, உரைச்சித்திரம், விளக்கச்சித்திரம், இசைச்சித்திரம், பல்சுவை நிகழ்ச்சி,; வினாடிவினா, சலங்கைக் கதிர், வில்லுப்பாட்டு, கதைப்பாட்டு போன்ற நாட்டுப்புற கலை வடிவங்கள், புராண இதிகாச கதை வடிவங்கள், போன்ற 20 க்கும் மேற்பட்ட வடிவங்களில் ஒலிபரப்பாகின்றன.
ஆரம்ப காலத்தில், தமிழ்நாட்டின் அனைத்து வானொலி நிலயங்களும் திருச்சிராப்பள்ளி வானொலியின் பண்ணை இல்ல நிகழ்ச்சிளை அப்படியே அஞ்சல் செய்தன.
திருச்சி வானொலியின் பண்ணை இல்ல ஒலிபரப்பிற்கு அடித்தளம் அமைத்த மறக்க முடியாத மூன்று பெயர்கள், டி.கணபதி, தாண்டவராயன், துகிலி சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment