உலகம் முழுவதும் கொண்டாடும்
பொங்கல் திருவிழா
AROUND THE WORLD
HARVEST FESTIVALS
AROUND THE WORLD
HARVEST FESTIVALS
IN SIX COUNTRIES
பொங்கல் விழா
நமக்கு சொல்லும் சேதி
பொங்கல் திருவிழாவை
உலகம் முழுவதும்
கொண்டாடுகிறார்கள்
தமிழர்களின்
பண்டிகை எது என்று கேட்டால் பொங்கல் என்றுதான் பதில் வரும்.
போகிப்பண்டிகை,
பெரும் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் என்று கிட்டத்தட்ட
ஒருவார காலத்திற்கு இன்றும் நமது
கிராமங்கள் களைகட்டும்.
பழையன
கழிதலும் புதியன புகுதலும் என்பதுதான் போகி பண்டிகையின் அடிப்படை.
பெரும்பொங்கல்
விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் சூரியன், மழை, மற்றும் நிலத்திற்கு நன்றி
தெரிவிக்கும் விழா.
உழவுத்
தொழிலுக்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்கு எடுக்கும் விழாதான் மாட்டுப்
பொங்கல்.
முதியவர்களையும்,
மூததையர்களுக்கும் மரியாதை செய்யும் விழாவாக கொண்டாடுவது கன்றுப்பொங்கல்.
விவசாய
நிலங்களில் உற்பத்தி ஆகும் முதல் விளைச்சலை அதற்கு காரணமாகவும் உதவியாகவும் இருந்த
கடவுளர்க்கும், இயற்கை வளங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாதான் இந்த பொங்கல் திருவிழா.
ஆப்பிரிக்கா
கருணைக்கிழங்கு
திருவிழா
ஆப்பிரிக்காவில் இதன் பெயர், "யாம்
பெஸ்டிவல்" (YAM
FESTIVAL). மழைப்பருவம் முடிந்ததும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடக்கும் திருவிழா.
'யாம்' தான் அவர்களுடைய முக்கிய உணவு. நம்ம
ஊரில் கருணைக்கிழங்குதான் அங்கு யாம். முதல் அறுவடை செய்ததும்
கடவுளுக்கும், மூதாதையர்களுக்கும் படைத்த பிறகுதான் யாம்' ஐ சமைக்கவோ விற்பனையோ
செய்யணும்.
மேற்கு
ஆப்பிரிக்காவில்
முதல்
பழங்கள் திருவிழா
மேற்கு
ஆப்பிரிக்காவில் வசிக்கும் 'கானா' நாட்டு ஆப்பிரிக்கர்கள் கொண்டாடும்
பிரம்மாண்டமான அறுவடைத் திருவிழா, "ஹோமோவா திருவிழா (HOMOVO FESTIVAL).
முதல்
பழங்கள் திருவிழா (FIRST FRUITS FESTIVAL)முதலில்
அறுவடை செய்யும் விவசாயப் பொருட்களை கடவுளுக்கு படைத்து சாப்பிட்டால், அவற்றை அது
புனிதப்படுத்துகிறது என்பது அவர்களின் நம்பிக்கை.
திராட்சை
மற்றும் இதர பழவகைகளையும் படைக்கும் விழா இது.
இஸ்ரேல்
சுக்கோத்
திருவிழா
இஸ்ரேலியர்களின்
வேதப்புத்தகம் "தோரா" வின் படி ஏகப்பட்ட அறுவடைத் திருவிழாக்களை அவர்கள்
கொண்டாட வேண்டும்.
இவற்றுள்
முக்கியமான திருவிழா சுக்கோத் (SUKKOT FESTIVAL). இந்த
திருவிழா 7 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.
இந்த
திருவிழாவில் அறுவடை செய்யும் திராட்சை மற்றும் இதர பழவகைகளை படைப்பார்கள். அறுவடைக்
காலங்களில் வயல்களிலேயே தங்கி கொண்டாடுவது, இவர்களுடைய பழக்கம்.
ஆப்ரிகன்
அமெரிக்கன் அறுவடைத் திருவிழாக்கள்
க்வான்சா
அறுவடைத் திருவிழா
க்வான்சா
என்றால் முதலில் அறுவடை செய்த பழங்கள் என்று பெயர். ஆப்ரிகாவிலிருந்து
அமெரிக்காவில் குடியேறியபோது அவர்களுடைய கலாச்சார ரீதியிலான இந்த திருவிழாவும்
இங்கு குடியேறியது.
க்வான்சா
(KWANZAA) திருவிழாவை டிசம்பர் 26 ம் தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை
கொண்டாடுகிறார்கள். இந்த திருவிழாவின் முக்கியமான அம்சம், டிசம்பர் 31 ம் தேதி
நடைபெறும் 'கராமு' என்னும் விருந்து.
கருணைக்கிழங்கு,
எள், கொல்லார்ட் கிரீன்ஸ் மற்றும் மிளகாய் போன்றவை இந்த விருந்தின் முக்கியமான
அயிட்டங்கள்.
தென்
அமெரிக்கர்களின் (பிரேசில்) அறுவடைத் திருவிழா
'க்வான்சா
அறுவடைத் திருவிழா
தென்
அமெரிக்காவின் பூர்வீக்க் குடிகளும் இந்த 'க்வான்சா அறுவடைத் திருவிழாவை டிசம்பர்
26 ம் தேதி முதல் ஜனவரி முதல் தேதி வரை கொண்டாடுகிறார்கள்.
க்ரீன்
கார்ன் பெஸ்டிவல் (GREEN CORN FESTIVAL)
புதிய
மக்காச்சோள திருவிழா, 'க்ரீன் கார்ன் பெஸ்டிவல்' என்றால் அதுதான் அர்த்தம். இது
இன்னொரு 'க்வான்சா அறுவடைத் திருவிழா.
கிரீக்
(CREEK0, செரோக்கி (CHEROKEE), செமினால் (SEMINOL), யூச்சி (YUCHI), இரோகோயிஸ் (IROQUOIS) ஆகிய அமெரிக்காவின் பூர்வீகக் குடிகள் இந்த திருவிழாவை விமரிசையாகக்
கொண்டாடுகிறார்கள்.
முதல்
மக்காச்சோளம் அறுவடைக்கு முன் இதைக் கொண்டாடுகிறார்கள். பல நாட்கள் நடைபெறும் இந்த
திருவிழாவை சில இடங்களில் ஜூலை 26 ம் தேதி கொண்டாடுகிறர்கள்.
ஹார்வஸ்ட்
மூன்
இயற்கை
வளங்களுக்கு நன்றி சொல்லும் வகையில் ஹார்வஸ்ட் மூன் (HARVEST MOON),
துனினூடி(DUNINUDI), நோவாட்டிக்குவா (NWATEQUA), சீனோ இ ஈக்குவா (CHENO E EQUA), ரைப்
கார்ன் பெஸ்டிவல் (RIPE CORN FESTIVAL) போன்ற திருவிழாக்களும் இவர்கள் கொண்டாடும்
இதர பொங்கல் விழாக்கள்.
அனினூடாவேஜி
ஓடைகள்,
சதுப்பு நிலங்கள், ஏரிகள், குளங்கள் ஆகிய பகுதிகளில் அறுவடை செய்யும் சமயம்
'அனினூடாவேஜி' என்னும் விழாவையும் கொண்டாடுகிறார்கள்.
ப்ரஷ்
பீஸ்ட் பெஷ்டிவல்
காடுகளில்
உள்ள புதர்கள், மற்றும் மரங்களிலிருந்து சேகரிக்கப்படும் பழங்கள், கொட்டைகள்
ஆகியவற்றை இந்த "ப்ரஷ் பீஸ்ட் பெஷ்டிவல்" (BRUSH FEAST FESTIVAL)
திருவிழாவில் படைக்கிறார்கள்.
இந்த
திருவிழாவிற்குப் பிறகுதான் அவர்கள் தங்கள் வேட்டையைக் கூட தொடங்குகிறார்கள்.
பொதுவாக
பூர்வீகக் குடியினர் இந்த விழாக்களின்போது வண்ணமயமான பூர்வீக ஆடைகளை அணிவர். பல
வண்ண மணிகள், பறவைகளின் இறக்கைகள், உயரமான தலையணிகள் கொண்டு தங்களை அலங்காரம் செய்துகொள்வார்கள்.
வட
அமெரிக்காவில் அறுவடைத் திருவிழா (யூ எஸ் ஏ)
கிரான்பெரி
ஹார்வெஸ்ட் பெஸ்டிவல்
தேங்ஸ்
கிவிங் பெஸ்டிவல்'
கிரான்பெரி
ஹார்வெஸ்ட் பெஸ்டிவல் (CRANBERRY HARVEST FESTIVAL) என்ற
திருவிழாவை மாசாசூசெட்ஸ் (MAASSACHUSETS) பகுதியில் 1949 ம் ஆண்டிலிருந்து கொண்டாடி
வருகிறார்கள். இந்த திருவிழாவின் முக்கியமான அம்சம், கிரான்பெரி பழங்களை அறுவடை
செய்வதுதான்.
வட அமெரிக்காவிலும்,
கனடாவிலும் தேங்ஸ் கிவிங் பெஸ்டிவல்' (THANKS GIVING FESTIVAL) ன் ஒரு பகுதியாக மிகவும் பிரபலமாக இதனைக்
கொண்டாடுகிறார்கள்
.
கிரேக்கர்களின்
திருவிழா
'தெஸ்மோஸ்போரியா'
'தெஸ்மோஸ்போரியா'
என்பது கிரேக்கர்களின் பொங்கல் திருவிழா. டிமீட்டர் என்பது தானியங்களுக்கான
கிரேக்க தேவதை. 'தெஸ்மோஸ்போரியா' திருவிழாவை நடத்துவதால் தானிய உற்பத்தி
அதிகரிக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. விதை மக்காச்சோளம், பழங்கள், கேக்குகள்,
பன்றி ஆகியவை டிமீட்டர் தேவதையின் படையல் பொருட்கள்.
ஆங்கிலேயர்களின்
திருவிழா
'ஹார்வெஸ்ட்
ஹோம்'
எல்லா
பயிர்களின் அறுவடையையும் முடித்த கையோடு
செப்டெம்பர் மாதத்தில் 'ஹார்வெஸ்ட் ஹோம்' என்ற பெயரில் விவசாயத் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
அன்று
தங்கள் மாதா கோவில்களை அலங்கரித்து அதில் அறுவடை செய்த தானியங்கள், பழங்கள்,
காய்கறிகள் அனைத்தையும் படைக்கிறார்கள்.
அப்படி
படைத்த பொருட்களை மருத்துவமனைகளுக்கும், வசதி குறைந்தவர்களுக்கும், தங்கள் விவசாய
நிலங்களில் வேலை பார்த்தவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கிறார்கள்.
இது,
கடவுளுக்கும், தங்கள் விவசாய நிலங்களில் வேலை பார்த்தவர்களுக்கும் நன்றி
பாராட்டும் விழா என்கிறார்கள்.
"பிளெசிங்
ஆப் வாட்டர்"
பிளெசிங்
ஆப் பிரட்
மீன்
பிடிக்கும் தொழிலை பிரதானமாக செய்யும் பஹுதிகளில் "பிளெசிங் ஆப் வாட்டர்"
என்ற திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள்.
ரொட்டியை
முக்கிய உணவாகக் கொள்ளும் இடங்களில், பிளெசிங் ஆப் பிரட் என்றும் இந்த விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
முடிவுரை
இயற்கை வளங்களைபாதுகாத்து,பராமரித்துமேம்படுத்த வேண்டும்.
பொங்கல்
திருவிழா என்றும் அறுவடைத் திருவிழா என்றும் உலகம் முழுவதும் கொண்டாடும் இந்த
விழாவின் முக்கிய செய்தி இதுதான்.
No comments:
Post a Comment