Friday, December 12, 2014

FAMILY DRAMAS - நாடக வாடை வீசும் குடும்ப கலாட்டா


நாடக வாடை வீசும் 

குடும்ப கலாட்டா


CREATIVITY DESIGN
BROADCAST FORMATS



பண்ணை இல்ல ஒலிபரப்பில் பயன்படுத்தும் பிரபலமான சில வடிவங்களைப் (POPULAR FORMATS) பார்க்கலாம்.

பேட்டிகள் (INTERVIEWS)


பேட்டிகளுக்கு இன்னொரு பெயர் நேர்முகம்.

பண்ணை இல்லத்தின் முதுகெலும்பு வடிவம் இந்த பேட்டிகள்.

விவசாயிகளின் பேட்டிகள் (FARMERS INTERVIEW), அரசுத்துறை அலுவலர்களின் பேட்டிகள் (GOVT.OFFICERS' INTERVIEW), மற்றும் ஆராய்ச்சி நிலையம், பல்கலைக்கழகம், வேளாண்மை அறிவியல் மையம், வேளாண்மைக் கல்லூரி ஆகியவற்றில் பணி செய்யும் விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர் பேட்டிகள் (SCIENTISTS' INTERVIEW), என்று  மூவகையாக பிரிக்கலாம்.

விவசாயிகளின் அனுபவப் பகிர்வு (FARMERS EXPERIENCE SHARING),   திட்டங்கள் பற்றிய அலுவலர்களின் விளக்கங்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி வல்லுநர்களின் புதிய கண்டுபிடிப்புகள் (SCIENTIFIC INNOVATIONS) போன்றவை இந்த பேட்டிகளின் முக்கிய தகவல் தானமாக இருக்கும்.

இதில் பெரும்பாலும் விவசாயிகளின் பேட்டிகள் சாதாரண பேச்சுத் தமிழில் சக்கைப்போடு போடும்.

அரசு அலுவலர்களின் பேட்டிகள் மத்திய தரமானதாக விளங்கும் தமிழும் தங்லீஷ_ம் (HYBRIDISATION OF TAMIL & ENGILISH) கலந்த மாதிரியாக இருக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் விளக்க சிரமப் படுவார்கள்.

இதை பொதுவான கருத்தாக கொள்ள முடியாது. வெள்ளத்தில் சில திட்டுக்களாக மிகத் திறமையான, தகவல் தொடர்பாளர்களாக வானொலி நிகழ்ச்சிகளில் பங்கேற்றோர் பலருண்டு.

சில சமயம் பேட்டிகளில் கூட சரித்தி நாடகம் மாதிரி வசனத் தமிழை (HISTORIC TAMIL) சகித்துக் கொள்ள முடியாது.

ஆனால் சில திறமைசாலிகள் இலக்கண சுத்தமான தமிழையே (CHASTE TAMIL) பேச்சுத் தமிழ் (SPOKEN TAMIL) மாதிரி பேசுவார்கள் (உதாரணம்: இலங்கை வானொலி அல்லது சிங்கை வானொலி அறிவிப்பாளர்கள்)

அப்படி பேசச் சொன்னால் நமக்கு தட்டாமாலை சுற்றிவிடும்;.
பண்ணை இல்ல ஒலிபரப்பின் பிதாமகர்களில்; (OPENING BATSMEN OF FARM BROADCAST) பேட்டி காணுவதில் இரண்டு அசகாய சூரர்கள் தாண்டவராயன், துகிலி சுப்பிரமணியன்.

இதில் திடுக்கிடும் கேள்விகளைக் (UN-ASSUMING QUESTIONS) தூக்கிப்போட்டு  உயிரோட்டமான செய்திகளை உருவிவிடும் ஆசாமி துகிலி.

அம்புராத்தோணி அம்புகளாக கேள்விகளை பாய்ச்சுவதில் கெட்டிக்காரர், தாண்டவராயன்.

நாடக வாடை வீசும் குடும்ப கலாட்டா. (DRAMATIZED FAMILY DRAMAS)

உரையாடல்கள்; (DISCUSSIONS)


நாடக முலாம் பூசிய விவசாய தொழில் நுட்ப உத்திதான் பண்ணை இல்ல ஒலிபரப்பின் உரையாடல்கள்.

நேர்முகத்தைப் போல உரையாடல் ஒரு சிறந்த வடிவமாக பண்ணை இல்ல ஒலிபரப்பில் பயன்படுத்தப் படுகிறது.

இதனை வெறும் உரையாடல் என்பதைவிட நாடக வாடை வீசும் குடும்ப கலாட்டா.
பண்ணை இல்ல ஒலி;பரப்பின் உரையாடல்கள் நாடகத்தைக் கூட தூக்கி சாப்பிட்டுவிடும்.

பெரும்பாலான உரையாடல்கள் 10 நிடத்தைத் தாண்டாத கணவன் மனைவி போர்க்களக் காட்சிகளாக இருக்கும்.

ஒவ்வொரு நிலையத்திலும் இதற்கென நிரந்தர பாத்திரங்கள் (STOCK CHARACTERS) கைவசம் இருக்கும்.

அந்தப் பாத்திரங்கள் தான் எல்லா உரையாடல்களிலும் வெளுத்து வாங்குவார்கள்.

திருச்சி வானொலியின் விஞ்ஞான வீராச்சாமி, கறார் கந்தசாமி, வாத்தியாரய்யா எல்லாம் இப்படிப்பட்ட கற்பனைப் பாத்திரங்கள்தான்.

மதுரை வானொலியின் பாஞ்சாலி, கந்தசாமி. 

இந்த பாத்திரங்களெல்லாம் இன்னும் கூட வானொலி நேயர்களின் (RADIO LISTNERS) மனதில் சப்பணமிட்டு உட்கார்ந்திருக்கிறார்கள்.

இந்த நாடகங்களை பண்ணை இல்ல அலுவலர்கள் பெரும்பாலும் சொடக்கு போடும் நேரத்தில் எழுதி விடுவார்கள்.

விளக்கச் சித்திரங்கள் (DOCUMENTARY FEATURES)


ஒரு ஆராய்ச்சி நிலையம் அல்லது ஒரு வேளாண்மை அறிவியல் மையத்தின்  பணிகளை விளக்கமாக எடுத்துக் கூறுவது.

அந்த நிலையம் தொடங்கியதன் நோக்கம், தொடங்கிய ஆண்டு, செய்த பணிகள், பயனடைந்த விவசாயிகள், செய்யவிருக்கும் பணிகள், நிலையத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளும் முறை, இப்படி முதல் அக்கேனா' வரை அனைத்தையும்  அங்குள்ள அலுவலர்கள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் விளக்கிக்; கூற அவற்றை பதிவு செய்வார்கள்.

பதிவுகளை வெட்டியும், ஒட்டியும், (EDITING) இணைப்பு உரை (LINKS) சேர்த்தும் அத்துடன் இசைத் துணுக்குகள் (MIXING OF MUSIC BITS) கொஞ்சம் சேர்த்து கிண்டினால் விளக்கச்சித்திரம் தயார்;.

விளக்கச் சித்திரம் என்பது தினம் தினம் சாப்பிடும் அரிசிச்சோறு அல்ல, எப்பவாச்சும்  சாப்பிடும் பிரியாணி.
கையாளும் வடிவம் சிறப்பாக அமைய வேண்டுமானால் நிகழ்ச்சி தயாரிப்பவரின் படைப்பாற்றல் (CREATIVITY OF THE PRODUCER) சாப்பாட்டிற்கு போடும் உப்பு மாதிரி மிகவும் அவசியம்.





No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...