M
மாவில் பூச்சி நோய்களை
கட்டுப்படுத்துவது எப்படி
CONTROL
PEST & DISEASES
IN MANGO TO EARN
PROFIT
மாவில் பயிர் பாதுகாப்பு
தத்துப்பூச்சி (JASSIDS)
இவை சாற்றை உறிஞ்சி பூக்களை உதிரச் செய்யும்.
இவற்றைக் ;கட்டுப்படுத்த பாஸலோன் 35 இசி 1.5 மிலி (அ) கார்பரில் 50 சத நனையும் தூள் 2 கிராம் (அ) நனையும் கந்தகம் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவும்.
பூக்கும் சமயம், 15 நாட்கள் கழித்து ஒரு முறை தெளிக்க வேண்டும். கிளைகள், தண்டுகள், மற்றும் இலைகளில் படுமாறு தெளிக்க வேண்டும்.
அசுவணி, THRIPS)
டைமெதோவேட் அல்லது மிதைல்டெமட்டான் 2 மில்லியை ஒரு லிட்டருடன் கலந்து தெளிக்கவும்.
பூங்கொத்துப் புழு: (FLOWER WEBBER)
இவை பூக்கும் தருணத்தில் பூங்கொத்துக்களில் கூடு பொல கட்டிக் கொண்டு பூ மொட்டுக்களைத் தின்று சேதப்படுத்தும்.
இவற்றைக் கட்டுப்படுத்த பாஸலோன் 2 மில்லியை ஒரு லிட்டருடன் கலந்து தெளிக்கவும்.
மாங்கொட்டை வண்டு (அ) மூக்கு வண்டு;: (MANGO NUT WEEVIL)
மரத்தின் கீழ் விழும் காய், சருகுகள், குச்சிகள் ஆகியவற்றை சேகரித்து எரிக்கவும்.
மேலும் பென்தியான்; 2 மில்லியை ஒரு லிட்டருடன் கலந்து காய் பிடிக்கும் சமயம், மற்றும் 15 நாட்கள் கழித்து ஒரு முறை தெளிக்கவும்.
தண்டு துளைப்பான் (STEM BORER)
வண்டுகள் மரத்தின் பட்டைகளில் முட்டை இடும்.
முட்டைகள் புழுவாக மாறி பட்டையின் உட் பாகத்தை சுரண்டித் தின்னும்.
இதனால் கிளைகளும், மரங்களும் கூட வாடி காய்ந்து விடும்.
தரை மட்டத்திலிருந்து 1 மீட்டர் உயரத்தில் பட்டையை நீக்கி, 10 மிலி மானோகுரோட்டோபாஸ் நனைத்த பஞ்சினை வைக்க வேண்டும்.
அதன் மேல் பட்டையை வைத்து களி மண்ணால் பூசி விட வேண்டும்.
இவற்றைக் கட்டுப்படுத்த ஐந்து கிராம் குருணை மருந்தை மரத்தின் தண்டுப் பகுதியில் உள்ள ஓட்டையில் போட்டு களிமண்ணால் மூட வேண்டும்.
அல்லது கார்போபியூரான் 5 கிராம் குருணை மருந்தை மரத்தின் தண்டுப் பகுpயில் உள்ள ஓட்டையில் போட்டு களிமண்ணால் மூடி விட வேண்டும்.
பழஈக்கள் (FRUIT FLY)
பழஈக்கள் வெளிறிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
தாக்கப்பட்ட பழங்களின் மேல் மஞ்சள் நிற புள்ளிகள் தெரியும்;.
அதன் மத்தியில் கருப்புப் புள்ளிகள் தோன்றும்.
பழத்தை அழுத்தும் போது அதிலிருந்து ஒரு திரவம் வெளிவரும்.
இதற்கு கோடை உழவு (SUMMER PLOUGHING) செய்து கூட்டுப் புழக்களை வெளிப்படுத்தி அழிக்க வேண்டும்.
தாக்கப்பட்ட பழங்களை சேகரித்தும் அழிக்கலாம்.
மிதைல் யூஜினால் (METHYL EUGYNOL) ஒரு மிலியை ஒரு லிட்டர் நீருடன் கலக்க வேண்டும்.
அத்துடன் மாலத்தியான் ஒரு மிலி கலந்து ஒரு பாட்டிலுக்கு 10 மிலி என்ற அளவில் ஒரு எக்டரில் 25 இடங்களில் வைத்து பூச்சிகளைக் கவர்ந்து சேகரித்து அழிக்கலாம்.
நோய்கள் (DISEASES)
சாம்பல்நோய்: (POWDERY MILDEW)
இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 2 கிராம் தூளை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்.
இலைப்புள்ளி நோய்: (LEAF SPOT)
இதைத் தடுக்க மான்கோசெப் 2 கிராம் (அ) கார்பெண்டாசிம் 1 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து அறுவடைக்கு முன் 15 நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்கவும்.
கரும்பூசண நோய்: (SOOTY MOULD)
இந்த நோயைக் தடுக்க பாஸ்போமிடான் 2 மிலியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்து நோயைப் பரப்பும் பூச்சிகளை அழிக்கலாம்.
(அ) 5 சத மைதா கரைசலை தெளிக்கவும். ஒரு கிலோ மைதாவை 5 லிட்டர் நீரில் கரைத்த கரைசலுடன் 4 லிட்டர் நீருடன் கலந்து இலைகளின் மீது நன்கு நனையுமாறு தெளிக்கவும்.
அறுவடைக்குப்பின் தொழி;ல்நுட்பம் (POST HARVEST
TECHNOLOGY)
அறுவடை செய்தவுடன் பழங்களை 52 டிகிரி செல்சியஸ் வெப்பமுள்ள சுடு நீரில் 5 நிமிடம் நனைத்து எடுக்க வேண்டும். பின் 8 சதம் தாவர மெழுகில் (வேக்ஸால் (அ) புரூட்டாஸ்) நனைக்க வேண்டும். இதனால் பழம் அழுகல் நோய் (குசுருஐவு சுழுவு) தாக்காது.
மகசூல் (YEILD)
10 முதல் 15 ஆண்டு மரங்கள்: 10 முதல் 15 டன்
15 முதல் 20 ஆண்டு மரங்கள்: 15 முதல் 20 டன்
No comments:
Post a Comment