Friday, December 26, 2014

தொழிற்சாலைக்கு ஏற்ற பழப்பயிர் - CACTUS GIVE BUSINESS OPPORTUNITIES


தொழிற்சாலைக்கு போகும் சப்பாத்தி கள்ளி  பழங்கள்

CACTUS GIVE
BUSINESS
OPPORTUNITIES

தொழிற்சாலைக்குப் போகும்  
சப்பாத்திக்கள்ளிகள்


பிரேசிலில் வறட்சியை ஜெயிக்க சப்பாத்திக்கள்ளி உதவியாக இருக்கிறது என்று பார்த்தோம்.

"ஆமாம், இந்த முள்ளில்லாத சப்பாத்தி (THORNLESS CACTUS) எப்படி உங்களுக்கு கிடைத்தது ?" என்று எங்களுடன் வந்த பிரேசில்காரரைக் கேட்டேன்.

அவர் இந்த முள்ளில்லாத சப்பாத்தியின் நதி மூலம் சொன்னார்.

" இந்த முள்ளில்லாத சப்பாத்தி மெக்சிகோவிலிருந்து இங்கு வந்தது. 1987 ல் எங்களுக்கு அறிமுகம் ஆனது. ஒரு என் ஜி ஓ தான் இதை கொண்டு வந்தது "

அதன் பிறகு  மெக்சிகோகாரர்கள் எப்படி இதைப் பயன்படுத்துகிறார்கள் ?

வலைத்தளத்தில் துழாவினேன். வண்டி வண்டியாய் கொட்டிக் கிடந்தது.

"எங்கள் நாட்டின் அடையாளமே சப்பாத்திகள்ளிதான்' என்கிறார்கள் மெக்சிகோகாரர்கள்.

கற்றாழை, மக்காச்சோளம், சப்பாத்திக் கள்ளி ஆகியவைதான் ஒரு காலத்தில் மெக்சிகோவின் முக்கிய உணவு.

மெக்சிகோவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிய்ல் வசிக்கும் "சிக்கிமெக்கா (CHICHIMECA)என்னும் சமூகத்தினரின் உணவு இவைதான்.

1970 ஆண்டு கணக்கெடுப்பின்படி 50 சத மாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகள் 90 சதமும் மெக்சிகோவின் வறண்ட பகுதில்தான் வளர்க்கப்படுகின்றன.

இந்த கால்நடைகளின் பசி மற்றும் தாகம் தீர்ப்பவை சப்பத்திக் கள்ளிகள்தான்.

ஏறத்தாழ 20 ம் நூற்றாண்டின் மத்தியக்காலத்தில் மெக்சிகோவின் அடையாளமான பல அரியவகை சப்பத்திக்கள்ளிகள் மாயமாகி விட்டன.

அதற்குக்காரணம் பல தேவைகளுக்காக சப்பத்திக்கள்ளிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த உள்ளூர் வியாபாரிகள்தான்.

திடீரென விழித்துக் கொண்ட அரசாங்கம் சட்டம் போட்டு  சப்பத்திக்கள்ளின் ஏற்றுமதியைத் தடை செய்தது.

சட்டம் போட்ட பின்னாலும், அதன் ஓட்டைகளின் வழியாக இந்த காரியம் தொடர்ந்து நடந்துகொண்டுதான் உள்ளது என்று பொறுப்புள்ள பல குடிமக்கள் வருத்தப்படுகிறார்கள்.

பின்னர் ஒரு காலகட்டத்தில் அரசாங்கமே களத்தில் குதித்து "ச க" சாகுபடியை தீவிரப்படுத்தியது.

அதே சமயம், 4 மாநிலங்களில் அதனைத் தீவனமாக பயன்படுத்த தடை போட்டது. தொழிற்சாலைகளுக்கு ஏற்ற பழப்பயிராக மாற்றுவதற்கு ஏற்ற முயற்சிகளை எடுத்தது.

1961 ல் "ச க" வில் பழம் ரகங்களையும், கால்நடைத்தீவன ரகங்களையும் தனித்தனியாக உருவாக்க ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டது, அரசு.

ஆனால் பலநூறு "ச க" ரகங்கள் இங்கு பல நூறு ஆண்டுக்காலம் பரவி இருந்தது, என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

சான் லூயிஸ் போட்டாசி, டமாலிபாஸ், நுவோலியான் - இதெல்லம் என்ன ? மெக்சிகோவின் சில பகுதிகளின் பெயர்கள்.

இந்த பகுதி கால்நடை விவசாயிகள் சில முக்கிய "ச க" ரகங்களை தெரிவு செய்து வைத்திருக்கிறார்கள்.

அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

1.நோப்பல் ரோஸ்ட்டிரோ (NOPAL RAESTRO) கொடிபோல படர்ந்து வளரும். ஆடுகளுக்கு பிடித்தமான அயிட்டம்.

2.நோப்பல் குயோ (NOPAL CUYO): ஒல்லியான ஒடிசலான ஒருவகை கள்ளி, கால்நடைகளின் சாய்ஸ் வெரைட்டி..

3.நோப்பல் கார்டான் (OPUNTIA STREPTACANTHA): பழங்களும் தரும். அகலமால இலைமடல் கொண்டது, கோடையில் மட்டும் கால்நடைகள் இதனை வெளுத்துக்கட்டும். 'சம்மர் ஸ்பெஷல்'. இதிலிருந்து தயாரிக்கும் 'பீர்' 'செம கிக்' தருமாம்.

4. நோப்பல் செகாடர் (NOPAL CEGADER) : அபாயகரமான ரகம். இதன் முட்கள் கண்ணில் பட்டால் பார்வை போய்விடும். மாடுகளுக்கும் சரி, மனுஷாளுக்கும் சரி.

5. கார்டன்ச்சி (CARDENCHE) அல்லது ஜோகோன்ஸ்டில் (JOCONOSTLE): 'உங்களுக்கு எந்த ரகம் பிடிக்கும் ?' என்று மாடுகளைக் கேட்டால் அவை சொல்லும் பெயர் 'கார்டன்ச்சி' உலக்கை மாதிரி உயரமாக வளரும் தண்டுகளைக்கொண்டது.

6.சாஜிஸ்லோ (TASAJILLO): கார்டன்ச்சி (SAJILLO') யின் சின்னதம்பி இது. சின்ன உலக்கை மாதிரித் தண்டுகளைக் கொண்டது. தரத்தில் அது 22 என்றால், இது 18 காரட். இது ஆடுகளுக்கு பிடிச்ச அல்வா.
சப்பத்திக்கள்ளி பற்றி ஒரு போனஸ் செய்தி !

'பீனிக்ஸ்' என்னும் பறவை, இறக்கும் சமயம் அது தானாக எரிந்து சாம்பலாகும். அந்த சாம்பலிலிருந்து இளம் பீனிக்ஸ் உருவாகும். அது போல சப்பாத்திக்கள்ளியின் முதிர்ந்த இலை கீழே உதிரும். உதிர்ந்த இலையில் இளஞ்செடிகள் முளைத்தெழும். அதனால் இவற்றை பீனிக்ஸ் செடிகள் என்கிறார்கள் மெக்சிகோகாரர்கள்.

எழுதியவர்;தேவ.ஞானசூரிய பகவான் 

புகைப்படம்: விக்கிபீடியா வலைத்தளம்

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...