பிரேசில் நாட்டில்
எனது அனுபவம்
சப்பாத்திக்கள்ளி சாகுபடிக்கு
சொட்டு நீர்ப்பாசனம்
சொட்டு நீர்ப்பாசனம்
1965 முதல் 2000 ம் ஆண்டு
வரை 35 ஆண்டுகளுக்கு வட கிழக்கு பிரேசில்காரர்களை மழை தொடர்ந்து பழி வாங்கியது.
விவசாயம் அவர்களை
கைவிட்டுப் போனது. அவர்களுக்கு
ஒரு கதவு
மூடியது. கடவுள் அவர்களுக்கு இன்னொரு
கதவைத் திறந்தார்.
நம்பிக்கையோடு,
விவசாயிகள் கல்நடை வளர்ப்பை கையில் எடுத்தார்கள்.
1915 ம் ஆண்டிலிருந்து கால்நடைத் தீவனமாக புழக்கத்தில்
இருந்த சப்பாத்திக் கள்ளி அவர்களின்
நம்பிக்கை நட்சத்திரம் ஆனது.
பாலும்,
இறைச்சியும் அள்ளித் தந்தது, சப்பாத்திக் கள்ளி.
இறைச்சி
ஏற்றுமதியில் உலகின் உச்சாணிக் கொம்பில் ஏறியது பிரேசில்.
.
நபார்டு
வங்கியின் தயவில் ஒரு குழுவாக இந்தியாவிலிருந்து போன நாங்கள், பிரேசிலின்
பின்ட்டடாஸ் என்ற பகுதியில் ஒரு சப்பாத்திக் கள்ளி விவசாயியை சந்தித்தோம்.
அவர்
தன் அனுபவத்தை சந்தோஷமாகச் சொன்னார்.
"மழைக்
காலத்துக்கு கொஞ்சம் முன்னாடி சப்பாத்தி கள்ளிய நடுவோம். மழை ஓய்ந்த பிறகும்
செய்வோம்.
ஒரு எக்டர் நிலத்துக்கு 10000 செடிங்க வேணும். குப்பை உரம், ரசாயன உரம்
போடுவோம்.
களை எடுப்போம்.' என்று சொன்ன அவர், எங்களை அவருடைய வயலுக்கு கூட்டிச்
சென்றார்.
அங்கு நடவு செய்திருந்த சப்பாத்தி செடிகளைக் காட்டினார். அதைப் பார்த்ததும்
எனக்கு 'குப்' பென்று பீப்பி எகிறியது.
அப்படி
என்னதான் அவர் காட்டினார் ?
100 சதவிகிதம்
மானியம் குடுத்தாக் கூட நம்ம ஊரில் பணப்
பயிருக்கு சொட்டு நீர்ப் பாசனம் போடவே
நாளு, கிழமை எல்லாம் பாப்போம்.
' அப்படி இருக்கும்போது சப்பாத்திக் கள்ளிக்கு சொட்டு நீர்ப் பாசனம்
போட்டிருக்கேன்' னு சொன்னா யாருக்குதான் 'பீப்பி' எகிறாது ? நீங்களே சொல்லுங்க !
(நபார்டு வங்கி ஏற்பாடு செய்திருந்த
பிரேசில் பயணத்தின் அனுபவத் திரட்டு)
No comments:
Post a Comment