ஒரு புதிய வானொலி வடிவம்
பால் கறந்தால் மட்டும் போதாது
பால் கறந்தால் மட்டும் போதாது
பணத்தையும் கறக்க வேண்டும்
RADIO RURAL FORUM & FARM SCHOOL ON AIR
பண்ணை இல்ல ஒலிபரப்பில் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைகளில் ஒலிபரப்பாகும ;இந்த கேள்வி பதில் நிகழ்ச்சி.
விவசாய வல்லுநர் ஒருவரின் உரை
(EXPERTS' TALK) அதாவது பேச்சு அதனைத் தொடரும். வல்லுநரின் உரையில் ஏற்படும் சந்தேகங்களை விவசாயிகள் ஒரு கடிதத்தில் எழுதி வானொலி நிலையத்திற்கு அனுப்ப, அவற்றை வேளாண்மைத் துறைக்கு அனுப்பி வைக்க, அதற்கான பதில்களை தயாரித்து வானொலிக்கு அனுப்பி வைப்பார்கள்.
இந்த கேள்வி பதில்கள்தான் செவ்வாய் வெள்ளிகளில் கிராம வானொலி மன்ற
(RADIO RURAL FORUMS) நிகழ்ச்சிகள் என்ற தலைப்பில் ஒலிபரப்பாகும்.
அந்த காலகட்டத்தில் வானொலி கேட்கும் விவசாயிகளின் குழுக்கள் கிராமங்களில் உருவாக்கப் பட்டன. அதற்கு பெயர் கிராம வானொலி மன்றங்கள். பின்னாளில் அவை உழவர் ஆய்வு மன்றங்களாக (FARMERS'
DISCUSSION GROUPS) மாற்றப்பட்டன.
உழவர் ஆய்வு மன்றங்கள் மாவட்டம் தோறும் உருவாக்கப்பட்டு உழவர் பயிற்சி நிலையங்களின் (FARMERS
TRAINING CENTRES) கீழ் இயங்கின.
உழவர் ஆய்வு மன்றங்களுக்கு உழவர் பயிற்சி நிலையங்கள் இலவசமாக அஞ்சல் அட்டைகள் வழங்கி வானொலியில் கேள்விகள் கேட்க உற்சாகப் படுத்தினர்.
கிராம விவசாயிகள் தவறாமல் வானொலி கேட்டு தங்கள் விவசாய முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்பதில் அகில இந்திய வானொலியும் தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையும் தோளோடு தோள் சேர்த்து செயல்பட்டன.
( குறிப்பு: 1.கட்டுரை ஆசிரியர் 1976 ம் ஆண்டு முதல் 1978 ம் ஆண்டு வரை வேளாண்மை இயக்ககத்தில் விவசாயிகளின் கேள்விகளுக்கான பதில்களை எழுதி அகில இந்திய வானொலிக்கு அனுப்பும் பணியை செய்தார். 2. கட்டுரை ஆசிரியர் 1975-76 ம் ஆண்டில் தென்னாற்காடு மாவட்டம் திண்டிவனம் உழவர் பயிற்சி மையத்தில் உழவர் ஆய்வு மன்றங்களை அமைத்தல் மற்றும் விவசாயிகளுக்கு வேளாண்மை பயிற்சி அளிக்கும் அலுவலராக பணி செய்தார்.)
வானொலி வேளாண்மைப் பள்ளி (FARM SCHOOL ON AIR)
இது தமிழக வானொலிகளில் விவசாயிகளுக்காக தொடங்கப்பட்ட சிறப்புப் பள்ளிக் கூடங்கள்.
மூன்று மாதங்களுக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பில் 13 பாடங்கள், வாரம் ஒரு பாடம் என 13 வாரங்களுக்கு ஒலிபரப்பாகும்.
இதனை அகில இந்திய வானொலியும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் அல்லது தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும்.
வானொலிதான் பள்ளிக்கூடம்.; பல்கலைக் கழக வாத்தியார்கள் பாடங்களை நடத்துவார்கள். விவசாயிகள்தான் மாணவர்கள். கிராமங்களில் இருந்தபடியே பாடங்களை கேட்கலாம்.
மூன்று மாதங்களில் 13 பாடங்களும் முடிந்த பின்னால் ஒரு நாள் நேரடிப் பயிற்சி நடைபெறும். அதில் விவசாயிகள் பெருமளவில் கலந்து கொள்ளுவார்கள்.
நேரடிப் பயிற்சியில் பாடங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள் நிவர்த்தி செய்வதுடன், வானொலி வேளாண்மைப் பாட திட்டத்தில் பங்கேற்றதற்கான ஒரு சான்றிதழும் பாடங்கள் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகமும் வழங்கப்படும்.
பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் எப்படி பாடம் நடத்துவாரோ அது போல இந்த பாடங்களை வல்லுநர்கள் நடத்துவார்கள். பாடங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயே எளிய தமிழில் நடக்கும்.;
உதாரணத்திற்கு ‘பாலும் பால் பொருட்களும்’ என்ற பாடத்தின் ஒரு பகுதி.
‘ பதப்படுத்தப் பட்ட பாலை பாக்கெட்டுகளி;ல் நிரப்புவதற்கு தனியாக ஒரு இயந்திரம் வேண்டும்.
பாலை குளிருட்டுவதற்கு குளிருட்டும் சாதனம், குளிருட்டப்பட்ட அறை, ஒரு புறம் இருக்க வேண்டும்.
பாலை சூடுபடுத்துவதற்கு நீராவியை உண்டு பண்ணும் கொதிகலன்கள் ஒரு புறம் இருக்க வேண்டும்.
குளிர் நீரையும் நீராவியையும் எடுத்து செல்வதற்கு பாதுகாக்கப்பட்ட குழாய்கள் வேண்டும்.
பாலை சேமித்து வைக்க தெர்மாஸ்பிளாஸ்க் அமைப்பைக் கொண்;ட டேங்குகள் வேண்டும்.
பாலை ஓரிடத்திலிருந்தோ மற்ற இடத்திற்கோ எடுத்துச் செல்ல பம்ப்பகள் வேண்டும்.’
இந்த பாடங்களில் இயன்றவரை தொழில் நுட்ப சொற்களை மொழி பெயர்த்திருப்பார்கள். உதாரணத்திற்கு சில.
1.பதப்படுத்தும் இயந்திரம் (PASTEURIZER)
2.பாலேடு பிரிப்பான் (CREAM
SEPERATOR)
3.வெண்ணெய் கடையும் இயந்திரம் ;(BUTTER CHURN)
4.சுவையூட்டப்பட்ட பால் (FLAVOURED
MILK)
5.உறையூட்டப்பட்ட இனிப்புத் தயிர் (YOGHURT)
6.பாலடைக்கட்டி (CHEESE)
7.பாலேடு (CREAM)
8.ஐஸ்கிரீம (ICE
CREAM)
ஐஸ்கிரீம் என்ற சொல்லிற்கு ‘பனிக்குழைவு’ என்ற தமிழாக்கம் இருப்பினும் பாடத்தில் ஐஸ்கிரீம் என்ற சொல்லே புரிதல் பொருட்டு பயன்படுத்தப்பட்டது.
புரியாத ‘பனிக்குழைவு’ ஐஸ்கிரீம் மாதிரி இனிக்காது.
‘பாலும் பால் பொருட்களும்’ பாடப் புத்தகத்தில் அன்றைய தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் ச.சண்முகசுந்தரம் அவர்களின் அணிந்துரையிலிருந்து ஒரு பகுதி.
‘ இது நாள் வரை பண்ணையாளர்களுக்குப் பயன் தரும் வகையில் பல வானொலி பாடத்திட்டங்கள் நடத்தப்பட்டன.
பால் பண்ணையாளர்களுக்குப் பயன்படும் வகையில் பராமரிப்பு பற்றியும், கறவைமாடு பராமரிப்பில் தீவனத்தின் முக்கியத்துவம் பற்றியும், கறவை மாடுகளின் இனவிருத்திப் பராமரிப்பு மற்றும் மாடுகளைத் தாக்கும் நோய்கள் பற்றியும் தனிப்பட்ட முறையில் பாடங்கள் நடத்தப்பட்டன.
பாலை, பால் பொருட்களாக மாற்றி விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். இதைக் கருத்தில் கொண்டுதான் இந்த வானொலி வேளாண்பள்ளி பாடத்திட்டம் நடத்தப்பட்டுள்ளது.’
இந்த வானொலி வேளாண்மைப் பாடத் தொகுப்பு நூலுக்கு சென்னை வானொலியின் நிலைய இயக்குநராக இருந்த விஜய திருவேங்கடம் அவர்களின் முன்னுரையை வானொலி தமிழில் படிக்கலாம்.
‘கறந்த பாலில் காப்பி போட்டுக் குடிக்க சிக்கலான தொழில்நுட்பங்கள் ஏதும் இல்லை.
சுத்தமான பாலை சுண்டக் காய்ச்சி குடிப்பதற்கும் கூடுதலான தொழில்நுட்பங்கள் ஏதும் தேவை இல்லை
.
ஆனால் பாலில் இருந்து, பாலடைக்கட்டி, பால்கோவா, வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சுவை ஊட்டிய பால், பால் பவுடர் இப்படி எல்லாம் விதவிதமாய் செய்ய தொழில் நுட்ப உத்திகள் தேவை.
பாலாக விற்பதைவிட, இப்படிப் பதப்படுத்தப்பட்ட பால் பொட்களாக விற்பனை செய்தால் பணம் அதிகம் கிடைக்கும். பால் விற்கவில்லை என்றால் நஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இதைச் சொல்லத்தான் இந்த பாடங்கள்.
இதைச் சொல்லத்தான் இந்த பாடங்கள்.
பால் கறந்தால் மட்டும் போதாது. பணத்தையும் கறக்க வேண்டும். அதற்கு வழி சொல்லித் தந்தன இந்த பாடங்கள்.
இந்த பாடங்களை எல்லாம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் நடத்தினார்கள்.
பாடங்கள் பாலடைக்கட்டி போல, விஷய கனமாக சற்று இறுக்கமாக இருந்தால் கூட நம் வல்லுநர்கள் அவற்றை எளிமையான பால்பவுடர் போல, சுவையான பால்கோவா போல, மனதிற்கும் நாவிற்கும் இதம் கூட்டும் ஐஸ்கிரீம் போல நமக்குக் கொடுத்தார்கள். பாடங்களின் கருத்துக்கள் நெய் போல வெண்ணெய் போல நம் மனதில் இறங்கின.
அவர்களுக்கு சென்னை வானொலியின் சார்பில், விவசாயிகளின் சார்பில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
’
’
அன்புடன்
விஜய திருவேங்கடம், நிலைய இயக்குநர், அகில இந்திய வானொலி நிலையம், சென்னை.
இந்த இலக்கணத்திற்குள் அடங்காத பல நூறு வடிவங்களை உருவாக்க முடியும்.
அதற்கு நமது புராண இதிகாச நாட்டுப்புற கலை வடிவங்கள் நமக்கு உதவும்.
அதற்கு நமது புராண இதிகாச நாட்டுப்புற கலை வடிவங்கள் நமக்கு உதவும்.
No comments:
Post a Comment