Sunday, November 9, 2014

TREE FESTIVAL IN PERIYAKADAMBUR - மரம் நடும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்



நபார்டு 
திட்டங்கள் 

மரம் நடும் விழாவில் 
மாவட்ட ஆட்சித் தலைவர்

THIRUVALLUR DISTRICT COLLECTOR IN 
TREE FESTIVAL 
(கொ.வீரராகவராவ், மாவட்ட ஆட்சித் தலைவர், கோ.அரி, நாடாளுமன்ற உறுப்பினர், அ.ரவி, ஒன்றியக் குழு பெருந்தலைவர், தேவ,ஞானசூரியபக்வான், இயக்குனர், பூமி அறக் கட்டளை, கே.சூரியக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்)

நபார்டு வங்கியின்
சின்னகடம்பூர் பெரியகடம்பூர் நீர்வடிப் பகுதியில் 


பெரியகடம்பூர் ஊராட்சிக்கு பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம் பெரியகடம்பூர் ஊரட்சியில் 07.11.2014 அன்று 25000 மரக் கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் மரம் நடும் விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்து மரம் நடவு செய்து விழாவைத் தொடங்கி வைத்து  சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது.

25000 மரக்கன்றுகள்

25000 மரக் கன்றுகளை நடவு செய்யும் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியகடம்பூர் ஊராட்சி முதன்மையானதாக விளங்குகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பெரியகடம்புர் ஊராட்சி மன்ற தலைவரையும் இந்த கிராமத்து மக்களையும் பாராட்டுகிறேன்.

மழை வளம் காக்க மரங்கள் வேண்டும்

பெருமளவு விவசாயிகளைக் கொண்ட நமது நாட்டில் மரங்கள் குறைந்துவிட்டதால் மழை சீராக பெய்வதில்லை. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது. மழை வளத்தையும் சுற்றுச்சூழலயும்  பாதுகாக்க நாம் அனைவரும் மரங்களை நட வேண்டும்.

ஆளுக்கு 2 மரம்

நமது மாவட்டத்தில் 526 ஊராட்சிகள் உள்ளன. பெரியகடம்பூர் மாதிரி மரங்களை நட்டு கிராமக் காடுகளை உருவாக்கும் முயற்சியில் அனத்து ஊராட்சிகளும் ஈடுபட்டால் திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாட்டிலேயே  முதன்மையான மாவட்டமாக விளங்கும்.


ஒரு ஆண்டில் 80 லட்சம் மரங்கள்

நமது மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 40 லட்சம். ஆளுக்கு இரண்டு மரம் நட்டால் ஓர் ஆண்டில் 80 லட்சம் மரங்களை நம்மால் நட முடியும்.

மரங்கள்தான் மாவட்டத்தின் வளர்ச்சி ! மரங்கள்தான் மனிதர்களின் வள்ர்ச்சி ! இயற்கை வளங்கள்தான் இந்த பூமியின் சொத்துக்கள். அவற்றை பாதுகாப்பதும் பராமரிப்பதும் நமது கடமை என்று கூறினார்.

விழாவில் வரவேற்புரை ஆற்றிய பெரியகடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.சூரியகுமார் பேசியதன் சுருக்கம்.

இன்றைக்கு பருவ நிலை மாற்றத்தால் மழை சரியாகப் பெய்வதில்லை. ஒருபக்கம் கடுமையான வறட்சி, ஒரு பக்கம் வெள்ளப் பெருக்கு. இதற்கு முக்கியமான காரணம் மரங்கள் இல்லாததுதான். ஒரு காலத்தில் எங்கள் கிராமம் பெரிய வனமாக இருந்தது. இப்போது மரங்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது.
மரம் நட 60 ஏக்கர் பொது நிலம்

அதனால் எங்கள் கிராமத்தின் 60 ஏக்கர் பொது நிலத்தில்  மரங்களை வளர்ப்பது என முடிவு செய்தோம். நமது வனத்துறை எங்களுக்கு 12000 மரக்கன்றுகள் நடவு செய்து தருவதற்கு இசைந்துள்ளது. அதன் முதற் கட்டமாக இன்று 2300 மரக்கன்றுகள் நடவு செய்யப் படுகிறது. ஏற்கனவே நபார்டு வங்கியின் நீர்வடிப் பகுதித் திட்டத்தின் மூலம் 12500 மரக் கன்றுகளை நட்டுத் தந்துள்ளது பூமி அறக்கட்டளை. தற்போது எங்கள் கிராமத்தில் 14800 மரக் கன்றுகள் உள்ளன, என்று கூறி விழாவிற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.




No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...