புதுநகர் மோகன்ராஜ் ஆங்கிலப் பள்ளியில்
வாணியம்பாடி
குழந்தைகள் மேம்பாட்டிற்கு
திருக்குறள் நெறி
திருக்குறள் நெறி
வாணியம்பாடி
தமிழ் சிந்தனையாளர் திருக்குறள் நெறிபரப்பும் விழாவின் 5 ம் ஆண்டின் 5 ம்
நிகழ்ச்சியை 18.11.2014 அன்று புது நகர்ஆங்கிலப்
பள்ளியில் கொண்டாடி திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற 59 பள்ளிக்
குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் பேச்சுப்
போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளை தட்டிச் சென்ற 23 மாணவ மாணவிகளுக்கு
திருக்குறள் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. போட்டியில்
பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.
விழாவிற்கு தலைமை வகித்தார், ஆங்கிலப்
பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி சுரேஷ், முன்னிலை வகித்தார் கிருபராஜ் சுரேஷ்,
ஆசிரியை வரவேற்புரையற்றினார். சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளும், பள்ளியின்
ஆசிரியப் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர் புலவர்
மு.சுப்பிரமணியம், மன்றத்தின் நோக்கம்,
செய்துள்ள பணிகள் ஆகியவற்றை தொகுத்துக் கூறி, ' மாணவர்களுக்கு எதிர்கால
வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்குவதற்கு பொருத்தமான நூல் திருக்குறள் மட்டுமே'
என்றார்.
வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் புலவர் தமிழ்தாசன் நன்றி நவில விழா இனிது நிறைவு பெற்றது.
Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.
No comments:
Post a Comment