Sunday, November 23, 2014

THIRUKKURAL ANCIENT TAMIL LITERATURE - 2000 ஆண்டுகளுக்கு முன் ஹைக்கூ எழுதியவர் திருவள்ளுவர்

2000 ஆண்டுகளுக்கு முன்

ஹைக்கூ எழுதியவர்

          திருவள்ளுவர்          

 


டி வி கே வி உயர் நிலைப் பள்ளியில்
வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றம்
 

நல்லாசிரியர் விருது பெற்ற கோ.வீரமணி' க்கு பாராட்டு
   
வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் திருக்குறள் நெறிபரப்பும் விழாவின் 5 ம் ஆண்டின் நிகழ்ச்சியாக 20.11.2014 அன்று கோட்டை வணியம்பாடி டி வி கே வி உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடி திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற  பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

திருக்குறள் போட்டிகளில்

பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்



திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளை தட்டிச் சென்ற மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும்
திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

சுமார் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளும், பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

தலைவர் ஜனார்தனன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட 'ஹைக்கூ' திருக்குறள் என்றார்.  

முன்னிலை வகித்த செயலாளர் ரவிச்சந்திரன், 'தெய்வத்தால் ஆகாதது எனினும்' என்ற குறளும், ' காலம் கருதினும் கைகூடும்' என்ற குறளும்தான் தனது வாழ்வின் வழிகாட்டியாக உள்ளன' என்று கூறினார்.
நல்லாசிரியர் வீரமணி' யிடம் படித்த பழைய மாணவர்கள் அவருக்கு பரிசு வழங்கி அவருடைய தன்னலமற்ற கடமையுணர்வை  பாராட்டி மகிழ்ந்தனர்.

பள்ளியின் பழைய மாணவர்களும், வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் பொறுப்பாளர்களுமான ஏ சி.வெங்கடேசன், முல்லை ஆகியோர் தங்களின் கடந்தகால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர், புலவர் மு.சுப்பிரமணியம், நல்லாசிரியர் விருது பெற்ற வீரமணி' க்கு புதுக்கவிதை பாராட்டு மடலை வாசித்து வழங்கினார்.
எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, மதத்திற்கோ, மக்களுக்கோ   எழுதப்பட்டதல்ல திருக்குறள், அது மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்குவதற்கு பொருத்தமான நூல் என்றார், வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் நெறியாளர் புலவர் மு சு தங்கவேலனார்,  

ஓய்வுபெற்ற வனச் சரகர் மற்றும் வாணியம்பாடி மத்திய நகர் சுழற் சங்கத்தின் செயலாளர் ஆ.வேலாயுதம், தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் செயலாளர் நா.மதனகவி, பொருளாளர் ந.முகம்மது நயீம், துணத்தலைவர் இரா.கருணாகரன், துணைச் செயலாளர் சீனி பழனி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பூமி அறக்கட்டளை இயக்குநர் தேவ. ஞானசூரிய பகவான், கடவுளுக்கு அடித்தபடியாக மழை' யைத்தான் போற்றுகிறார் என்றும், உலக நாடுகளில் பெறும் மழையைவிட வேலூர் மாவட்டத்திலும் தமிழ்நாட்டிலும் கிடைக்கும் மழை அதிகம். நமது தண்ணீர்; பிரச்சினை தீர,  'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது போல மழை வரும்போதே பிடித்துக் கொள்ள வேண்டும்' என்றார். 

பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.உமாபதி வரவேற்புரையற்ற தமிழாசிரியை ஆர்.மலர்கொடி நன்றி சொன்னார்.


Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.







No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...