Sunday, November 2, 2014

நாலு காசு பாக்கணும்னா பட்டு பூச்சி வளக்கணும்ங்க GROW SILK WORM MAKE FORTUNE

நாலு காசு பாக்கணும்னா
பட்டு பூச்சி வளக்கணும்ங்க


டி.சின்னபையன், மோழயனூர்,ஜவ்வாது மலை

(31.10.2014 அன்று ஒலிப்பதிவு செய்யப்பட்ட அகில இந்திய வானொலி பேட்டியின் சுருக்கம்)

செய்தி எண்.83
என்னொட பெயர் சின்னப்பையன். எனக்கு 36 வயசு ஆச்சு. எங்க ஊர் ஜவ்வாது மலையச் சேர்ந்த மோழையனூர். திருவண்ணாமலை மாவட்டத்துல ஜம்னாமரத்தூர்லருந்து 30 கிலோமீட்டர் தொலைவில இருக்கு.

 ஆனா ஒரு வருசத்துல பத்தாயிரத்துக்கு மேல பாக்க முடியாது. ஆனா இப்போ பட்டுப் புழு வளத்து ரெண்டு மாசத்துல பத்தாயிரம் ரூபாய்க்கும் கம்மி இல்லாம சம்பாதிக்கிறேன்.

வருசத்துல 50000 மல்பெரி நாத்து உற்பத்தியும் செய்யறேன். ஒரு நாத்து ஒரு ரூபாய்க்கு விக்கறேன். செலவு போக 30000 ரூபாய் நிக்கும். எல்லாம் இந்த திட்டம் வந்த பிற்பாடுதான் சார்.

பட்டு பூச்சி சம்பாத்தியத்துல ஒரு டூவீலர் வாங்கி இருக்கேன்: சம்சாரத்துக்கு நகை வாங்கி போட்டிருக்கேன். குடும்பத்துல பசி பட்டினி இல்ல சார்.

நபார்டு வங்கியோட மலைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்ட்த்தின் மூலமா 714 சதுர அடிக்கு பட்டுப் புழு வளக்க வீடு கட்டி குடுத்தாங்க. அது கட்ட 93000 ரூபாய் மானியமும் குடுத்தாங்க. அதுலதான் இப்போ பட்டுப் புழு வளக்கறேன்.

இண்ணக்கி நாலு காச கண்ணுல பாக்கக் காரணம் பட்டு வளர்ச்சித் துறைதாங்க. அந்த அதிகாரிங்க மல்பெரி செடி வளக்கறதுக்கும், பட்டுப் புழு வளக்கவும் சொல்லிக் குடுத்தாங்க.

நபார்டு ஏஜிஎம் சுதர்சன் சார் அடிக்கடி எங்களை வந்து பாப்பாங்க. எங்கள உற்சாகப் படுத்துவாங்க. இந்த திட்ட உதவிகள் எங்களுக்கு சிரமம் இல்லாம கிடைச்சதுங்க. அதனாலதான் எங்களால சுலபமா இந்த பட்டு வளர்ப்பு மனய கட்ட முடிஞ்சது. அதுக்கு முக்கிய காரணமா இருந்தது பூமி அறக்கட்டளைங்க.

இப்போ என் மூலமா, இதுவரைக்கும் 25 பேர் என்னை பாத்துட்டு மல்பெரி போட்டு பட்டு பூச்சி வளக்க ஆரம்பிச்சி இருக்காங்க. மலையில இருக்கற ஜனங்க முன்னுக்கு வரணும்னா அவுங்க பட்டு பூச்சி வளக்கணும்னு நான் எல்லாருக்கும் சொல்லிகிட்டு இருக்கேன்.

நன்றி:

திரு.எஸ்.டி.சுதர்சன், உதவி பொது மேலாளர், நபார்டு வங்கி, திருவண்ணாமலை மாவட்டம்

 திரு.ராகவராஜகோபால், நிகழ்ச்சி நிர்வாகி, பண்ணை இல்ல ஒலிபரப்பு, அகில இந்திய வானொலி, சென்னை

செய்தித் தொகுப்பு: தேவ.ஞானசூரிய பகவான், இயக்குநர், பூமி அறக்கட்டளை (இயற்கை வள பாதுகாப்பு பயிற்சி & ஆய்வு மையம்), தெக்குப்பட்டு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...