Sunday, November 9, 2014

CLEAN INDIA MOVEMENT - பெரியகடம்பூர் ஊராட்சியில் 'தூய்மை இந்தியா' தொடக்க விழா


தூய்மை
இந்தியா


பெரியகடம்பூர் ஊராட்சியில்
'தூய்மை இந்தியா'
தொடக்க விழா


பெரியகடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.சூரியகுமார், பூமி அறக்க்ட்டளை இயக்குநர் தேவ.ஞானசூரிய பகவான், கிராம வன பாதுகாவலர் ரவி

நமது தேசப் பிதா மகாத்மா காந்தி நினைவு தினமான 02.10.2014 அன்று 'தூய்மை இந்தியா' திட்டப் பணி, திருவள்ளூர் மாவட்டம் சின்னகடம்பூர் பெரியகடம்பூர் நீர்வடிப் பகுதியில் பெரியகடம்பூர் கிராமத்தில் குழந்தைகள் மையம் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப் பட்டது.

இந்த விழாவிற்கு பெரியகடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கே.சூரியகுமார் தலைமை வகித்தார். பூமி அறக்கட்டளையின் இயக்குநர் தேவ.ஞானசூரிய பகவான் 'தூய்மை இந்தியா' திட்டப் பணியை தொடங்கி வைத்தார்.

10000 மரக் கன்றுகள்

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சூரியகுமார் பேசியதாவது.
நம்முடைய கிராமத்தின் சுற்றுச் சூழலுக்கு உதவும் வகையில் நம்முடைய கிராமத்தில் நபார்டு வங்கியின் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் இதுவரை தேக்கு, நாவல், ஜம்பு நாவல், மகாகனி, புங்கன், ஆச்சா, மற்றும் நீர்மத்தி, உட்பட 10000 மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளது.

இதைப் போற்றி பாதுகாப்பதையும் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளுகிறேன்.

மரம் வளர்க்க 60 ஏக்கர் நிலம்

தற்போது மேலும் 15 ஆயிரம் மரக் கன்றுகள் நட ஏற்பாடு செய்துள்ளோம்.இதற்காக ஊராட்சியின் மூலம் 60 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டுள்ளது.

இந்த மரக் கன்றுகளை பாதுகாத்து பரமரிக்க நமது கிராமத்தின் அம்பேத்கர் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளுகிறேன்.

நபார்டு வங்கிக்கும் பூமி அறக்கட்டளைக்கும், ஊராட்சி மன்றத்தின் சார்பிலும் பெரியகடம்பூர் கிராம மக்கள் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், என்று கூறினார்.

பூமி அறக் கட்டளை

பூமி அறக் கட்டளையின் இயக்குநர் தேவ.ஞானசூரிய பகவான் பேசும்போது, 'தூய்மை இந்தியா' தொடக்க விழாவில் மட்டும் வேலை பார்த்தோம் என்று இல்லாமல், கிராமத்தின் சாலைகள், பொது இடங்கள், நமது வீடுகள், குழந்தைகள் மையம், பள்ளிக்கூடம், ரேஷன்கடை, ஊராட்சி மன்றக் கட்டிடம், நூலகக் கட்டிடம், பொதுக் கழிப்பறை, போன்ற அனைத்து இடங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறையாவது நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொடர்ந்து செய்ய வேண்டும் என்று உங்களை அன்புடன் வேண்டுகிறேன்.

உங்கள் பொது நிலத்தில் நபார்டு நீர்வடிப் பகுதித் திட்டத்தின் மூலம் நடப் பட்டுள்ள மரங்கள் உங்கள் சுற்றுச்சூழலுக்கு உதவுவதுடன் உங்கள் கிராமப் பொருளாதாரத்தையும் மேம்படுத்த உதவும்,

விழாவின் தொடக்கப் பணியாக குழந்தைகள் மையத்தை சுத்தம் செய்த அம்பேத்கர் இளைஞர் மன்ற உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள், என்று கூரினார். 

பூமி நிறுவனத்தின் திட்ட மேலாளர் எம்.வெங்கடேசன் நன்றி நவில விழா நிறைவு பெற்றது.

குழந்தை மையத்தை சுத்தம் செய்யும் காட்சிகள்




மகளிர் குழு உறுப்பினர்கள் 


அம்பேத்கர் இளைஞர் சங்க உறுப்பினர்கள்


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...