வருசம் 365 நாளும்
பட்டுப் பூச்சி
வேலை குடுக்குது
SERICULTURE EMPLOYED US ROUND THE YEAR
சி.செல்வராஜ், வீரப்பனூர்,
ஜவ்வாதுமலை, திருவண்ணாமலை மாவட்டம்
(31.10.2014 அன்று அகில இந்திய வானொலி பேட்டிக்காக எடுத்த ஒலிப்பதிவின் சுருக்கம்)
என் பெயர் செல்வராஜ்.
எனக்கு 40 வயசு ஆச்சி. எனக்கு நாலு குழந்தைங்க. வீரப்பனூர் எங்க ஊர். ஜம்னமரத்தூர் வட்டாரத்துல திருவண்ணாமலை மாவட்டத்தில இருக்கு.
மாசத்துக்கு ரெண்டாயிரம் ரூபா கூட பாக்காத நான், பட்டுப் பூச்சி வளத்து மாசம்
அஞ்சாயிரத்துக்கு மேல சம்பாதிக்கிறேன். இப்போ வேலை தேடி வெளியூர் போறதில்ல. வருசம்
365 நாளும் பட்டுப் பூச்சி வேலை குடுக்குது.
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் ரொம்ப கஷ்டம்தான். கேரளா, கர்னாடகா
போய் கூலி வேலை பாத்தேன். 10 ரூபா சபாதிச்சா 5 ரூபா செலவாயிடும். சாண் ஏறினா முழம்
சறுக்கிடும்.
சம்பாதிக்கற காசு வயித்து பாட்டுக்கே சரியா இருந்தது. பிள்ளைங்கள படிக்க வைக்க
ரொம்ப கஷ்டப்பட்டேன்.
மானாவாரி நிலத்துல வருசத்துக்கு ஒருவாட்டி சாமை போட்டா என்னா வருமானம் வரும் ?
யோசிச்சி பாருங்க. ஜவ்வாது மலையில 100 க்கு 90 குடும்பத்துல இதான் நெலமை.
2011 ல ஜம்னமரத்தூர்ல பூமி ஆபீஸ் ஒரு கூட்டம் போட்டங்க. அதுக்கு நாங்க எல்லாரும்
போய் இருந்தோம். பட்டு பூச்சி ஆபீஸ்ல இருந்தும், நபார்டு பேங்க்ல இருந்தும்
ஆபீசருங்க வந்திருந்தாங்க. நபார்ட் வங்கியும் பட்டு ஆபீசும் பூமி ஆபீசும் சேந்து
மலை வாழ் மக்கள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தப் போறதா சொன்னாங்க.
பட்டு பூச்சி வளக்க ஷெட் கட்டிக் குடுக்கறதா சொன்னங்க. எங்களுக்கு சம்மதமான்னு
கேட்டாங்க. நாங்க சரி'ன்னு சொன்னோம். ஆனா எங்களுக்கு நம்பிக்கை வரல்லிங்க.
ஆனா சொன்ன மாதிரியே திட்டம் வந்ததுங்க. எனக்கு 42 அடி நீளம் 17 அடி
அகலத்துக்கு ஷெட் கட்ட 55000 ரூபா மானியமா குடுத்தாங்க. என்னோட கைக்காசு 45000
போட்டு ஷெட்'டை கட்டி முடிச்சேன்.
அதுக்கு முன்னடியே அரை ஏக்கர்ல மல்பெரி செடி போட்டேன். மல்பெரி செடி, பட்டுப்
பூச்சி முட்டை எல்லாம் குடுத்தாங்க.
மல்பெரி செடியெ எப்பிடி வள்க்கறது ? பட்டு பூச்சி எளம் புழுவ எப்பிடி வளக்கறது
? வளந்த புழுவ எப்பிடி வளக்கறது ? எப்பிடி புழுவுக்கு ஏத்தபடி தழை போடறது ?
ஷெட்'டை பரமரிக்கறது எப்பிடி ? எல்லாம் சொல்லிக் குடுத்தாங்க.
பட்டுப் பூச்சி ஆபீஸ்லருந்து வீரன் சார், வெங்கடகிருஷ்ண்ன் சார், சுலைமான் சார், ஆரோக்கியம் சார், முருகன் சார்
எல்லாம் வந்து எங்களுக்கு நிறைய சொல்லி குடுத்தாங்க. பட்டுப் பூச்சி டைரக்டர் கூட
எங்க ஷெட்'டை தோட்டத்தை பாத்து இருக்காங்க.
நபார்டு ஏஜிஎம் சுதர்சன் சார் அடிக்கொரு தடவை வருவாங்க. பேசுவாங்க.
உற்சாகப்படுத்துவாங்க. இந்த ஷெட் மூலமா மாசம் 50000 ரூபா சம்பாதிக்கலாம்னு
சொல்லுவாங்க.
உண்மைய சொல்லணும் சார். பட்டுப் பூச்சி வந்த பின்னாடிதான் எங்க மலை ஜாதி மக்களுக்கு
ஒரு விடிவுக்காலம் பொறந்திருக்கு
நபார்டும் பட்டுப் பூச்சி ஆபீசும் சேந்துதான் இந்த திட்டத்துக்கு பணம்
குடுத்தாங்க. ஆனா திட்டத்தை பூமி ஆபீஸ் மூலமாதான் செயல்படுத்தினாங்க.
ஷெட்'டை கட்டி முடிங்கப்பா, பணம் உங்க வீடு தேடி வரும்னு சொல்லி சொல்லி எங்களை
கட்டி முடிக்க வச்சாங்க, பூமி ஆபீஸ்காரங்க.
நபார்டும் பட்டுப் பூச்சி ஆபீசும் உங்க கிராமத்துக்கு வந்தா அது மஹாலட்சுமி
வந்த மாதிரி' ன்னு அடிக்கடி சொல்லுவாங்க. நிஜம் சார் அது.
நன்றி;
திரு.எஸ்.டி.சுதர்சன்,
உதவி பொது மேலாளர், நபார்டு வங்கி, திருவண்ணாமலை மாவட்டம்.
திரு.ராகவராஜகோபால்,
நிகழ்ச்சி நிர்வாகி, பண்ணை இல்ல ஒலிபரப்பு, அகில இந்திய வனொலி, சென்னை
செய்தித்
தொகுப்பு:தேவ.ஞானசூரியபகவான், இயக்குநர், பூமி அறக்கட்டளை, இயற்கை வள பயிற்சி & ஆய்வு நிலயம், தெக்குப்பட்டு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
Contact: email;bhumii.trust@gmail.com, gsbahavan@gmail,com
No comments:
Post a Comment