Tuesday, November 25, 2014

முடியுமா ? முடியாதா ? நதி நீர் இணைப்பு ? - INTERLINKING OF RIVERS IS POSSIBLE




நதி நீர் 
இணைப்பு

முடியுமா ? முடியாதா ?

நதி நீர் இணைப்பு ?



மோடி அரசு வந்த பின்னால் இந்த எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. முடியுமா முடியாதா நதி நீர் இணைப்பு ?

இந்த கேள்விக் குறியை அப்படியே அந்தரத்தில் விட்டுவிட்டு இந்த இணைப்பு ஏன் வேண்டும் ? அதற்கு என்ன அவசரம் ? என்ன அவசியம் ? அடிப்படையான சிலவற்றைப் பார்க்கலாம்.

மிகவும் தட்டுப்பாடான மழை, வேண்டாத விருந்தாளியாக அடிக்கடி வரும் வறட்சி, வெள்ளம், மழைப் பொழிவில் ஏற்படும் ஏற்றதாழ்வு, இதனால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்கள், இந்திய துணைக்கண்டத்தில் எட்டு மாநிலங்களில் 'மெகா சீரியல்' ஆகிவிட்டது.

தமிழ்நாடு, கர்னாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், அரியானா, ராஜஸ்தான் - இவைதான் அந்த துரதிருஷ்டசாலி எட்டு மாநிலங்கள்.

எடுப்பதற்கு எட்டாத ஆழத்திற்குப் போய்விடும் நிலத்தடி நீர், குழாயடியில் எப்பொதும் காத்திருக்கும் குட வரிசைகள், வருஷத்தில் ஒரு பயிர் எடுக்கவே பெருமூச்சு விடும் மானாவாரி நிலங்கள், இவை எல்லாம் இந்த எட்டு மாநிலங்களின் சாமுத்ரிகா லட்சணங்கள்.

இந்திய துணக்கண்ட்த்தின் 85 % வறண்ட பிரதேசங்கள் இந்த எட்டுக்குள்தான் அடக்கம்.

இந்தியாவில் ஏற்படும் சராசரி ஆண்டு வெள்ள சேதாரம் மட்டும் 1343 கோடி ரூபாய், 1998 ம் ஆண்டின் சேதாரம் மட்டும் 5846 கோடி ரூபாய், என்கிறது மத்திய அரசின் 'நேஷனல் வாட்டர் டெவெலப்மென்ட் ஏஜென்சி புள்ளிவிவரம்.

இவ்வளவு சேதாரத்திற்கு பொறுப்பேற்கும் இரண்டு புண்ணிய நதிகள் கங்கை, பிரம்மபுத்திரா. வெள்ளங்கள் ருத்ரதாண்டவம் ஆடுவது இந்த நதிகள் பாயும் 60 % நிலப்பரப்பில்தான்.

வருஷம் தவறாமல் இப்படி வெள்ளத்தின் பேரில் நஷ்டக் கணக்கெழுதும் மாநிலங்கள் அஸ்ஸாம், பீஹார், மேற்குவங்காளம் மற்றும் உத்தரப்பிரதேசம்.

தற்போது 200 மில்லியன் டன்னாக இருக்கும் நமது உணவு உற்பத்தி 2050 ல் 450 மில்லியன் டன்னாக உயர வேண்டும்.

தற்போது 95 மில்லியன் எக்டராக இருக்கும் நமது பாசனப் பரப்பும் 160 மில்லியன் எக்டராக அதிகரிக்க வேண்டும்.

தற்போது கைவசம் உள்ள நீரின் மூலம் 140 மில்லியன் எக்டர் நிலப் பரப்பிற்குப் பாசனம் அளிக்கவே 'உன்னைப்பிடி என்னைப்பிடி' என்று இருக்கும். 160 மில்லியன் எக்டர் என்றால் முழி பிதுங்கிவிடும்.

கங்கை, பிரம்மபுத்திரா கோதாவரி, மகாநதி, ஆகியவைதான் உபரியான தண்ணீருடன் நம்மை உருட்டி மிரட்டும் நதிகளாக உள்ளன.

இந்த பணக்கார நதிகளுடன் நம்முடைய 'அன்றாடம்காய்ச்சி' நதிகளை இணைக்க முடியும்.

அப்படி முடிந்தால் விவசாயம் பார்த்துக்கொள்ளலாம், தொழிற்சாலைகளுக்கும் தாராளம் காட்டலாம், குடம் இங்கே 'குடி நீர் எங்கே' 'சிந்துபாத் தொடர்' க்கு சுபம் போடலாம். மின்சாரம் தயாரிக்கலாம், ஜனங்களுக்கு 'பவர்கட் ஷாக்' அடிக்காது, நீர்வழி போக்குவரத்தை ஏற்படுத்தி பேருந்துகளில் படிக்கட்டு பயணத்தையும் , கூரைமேல் பயணத்தையும்  மட்டுப்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

வடநாட்டின் வெள்ள நதிகளை நல்ல நதிகளாக மாற்றிவிட முடியும்.
உபரி நீரோடு ஓடிப்போய் உருப்படி இல்லாமல் கடலில் குதிக்கும் இந்த நதிகளை ஓட்டிக்கொண்டு வந்து  நமது தொண்டை வறண்ட நதிகளோடு இணைப்பது முடியும்தான் என்கிறது, இந்திய அமைச்சகத்தின் 'நேஷனல் வாட்டர் டெவெலப்மென்ட் ஏஜென்சி'

ஆனால் இப்போதைக்கு அதிரடி மோடி அரசு நினைத்தால்தான் முடியும்  என்று பரவலாக மக்கள் நம்புகிறார்கள்.

இன்னொன்று இந்த வறண்ட பிரதேசங்களான எட்டு மாநிலங்களூம் ஒற்றுமையாக ஒரு கூட்டமைப்பை உருவாக்கலாம்.

தண்ணீர் இல்லாத 'டார்க் மாநிலங்கள்' கூட்டமைப்பு' உருவாக்கலாம், சார்க் நாடுகள் கூட்டமைப்பு மாதிரி.

ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது ? என முடிவு செய்ய வேண்டும்.

யார் பூனை ?  யார் மணி ?  
 

Sunday, November 23, 2014

THIRUKKURAL ANCIENT TAMIL LITERATURE - 2000 ஆண்டுகளுக்கு முன் ஹைக்கூ எழுதியவர் திருவள்ளுவர்

2000 ஆண்டுகளுக்கு முன்

ஹைக்கூ எழுதியவர்

          திருவள்ளுவர்          

 


டி வி கே வி உயர் நிலைப் பள்ளியில்
வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றம்
 

நல்லாசிரியர் விருது பெற்ற கோ.வீரமணி' க்கு பாராட்டு
   
வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் திருக்குறள் நெறிபரப்பும் விழாவின் 5 ம் ஆண்டின் நிகழ்ச்சியாக 20.11.2014 அன்று கோட்டை வணியம்பாடி டி வி கே வி உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடி திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற  பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

திருக்குறள் போட்டிகளில்

பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்



திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளை தட்டிச் சென்ற மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும்
திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

சுமார் 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளும், பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

தலைவர் ஜனார்தனன், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்ட 'ஹைக்கூ' திருக்குறள் என்றார்.  

முன்னிலை வகித்த செயலாளர் ரவிச்சந்திரன், 'தெய்வத்தால் ஆகாதது எனினும்' என்ற குறளும், ' காலம் கருதினும் கைகூடும்' என்ற குறளும்தான் தனது வாழ்வின் வழிகாட்டியாக உள்ளன' என்று கூறினார்.
நல்லாசிரியர் வீரமணி' யிடம் படித்த பழைய மாணவர்கள் அவருக்கு பரிசு வழங்கி அவருடைய தன்னலமற்ற கடமையுணர்வை  பாராட்டி மகிழ்ந்தனர்.

பள்ளியின் பழைய மாணவர்களும், வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் பொறுப்பாளர்களுமான ஏ சி.வெங்கடேசன், முல்லை ஆகியோர் தங்களின் கடந்தகால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர், புலவர் மு.சுப்பிரமணியம், நல்லாசிரியர் விருது பெற்ற வீரமணி' க்கு புதுக்கவிதை பாராட்டு மடலை வாசித்து வழங்கினார்.
எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கோ, மதத்திற்கோ, மக்களுக்கோ   எழுதப்பட்டதல்ல திருக்குறள், அது மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்குவதற்கு பொருத்தமான நூல் என்றார், வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் நெறியாளர் புலவர் மு சு தங்கவேலனார்,  

ஓய்வுபெற்ற வனச் சரகர் மற்றும் வாணியம்பாடி மத்திய நகர் சுழற் சங்கத்தின் செயலாளர் ஆ.வேலாயுதம், தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் செயலாளர் நா.மதனகவி, பொருளாளர் ந.முகம்மது நயீம், துணத்தலைவர் இரா.கருணாகரன், துணைச் செயலாளர் சீனி பழனி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பூமி அறக்கட்டளை இயக்குநர் தேவ. ஞானசூரிய பகவான், கடவுளுக்கு அடித்தபடியாக மழை' யைத்தான் போற்றுகிறார் என்றும், உலக நாடுகளில் பெறும் மழையைவிட வேலூர் மாவட்டத்திலும் தமிழ்நாட்டிலும் கிடைக்கும் மழை அதிகம். நமது தண்ணீர்; பிரச்சினை தீர,  'காற்றுள்ள போதே தூற்றிக்கொள்' என்பது போல மழை வரும்போதே பிடித்துக் கொள்ள வேண்டும்' என்றார். 

பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.உமாபதி வரவேற்புரையற்ற தமிழாசிரியை ஆர்.மலர்கொடி நன்றி சொன்னார்.


Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.




SERICULTURE BRINGS SUSTAINABLE LIVELIHOOD DEVELOPMENT TO JAVVADHU HILL TRIBES - மலைவாழ் மக்களின் அதிர்ஷ்ட தேவதை பட்டுப் புழு

SERICULTURE BRINGS

SUSTAINABLE LIVELIHOOD DEVELOPMENT

TO  JAVVADHU HILL TRIBES


Sri. Rishikesh Pondey, Secretary, Schedeuled Caste and Scheduled Tribe Development Department, Government of India and Smt. Kannagi Bagyanathan, the Secretary, Department of Scheduled Caste and Scheduled Tribes and Sri.Kannappan, the District Forest Officer visited our Tribal Development Fund  Project village, Alanjanur in Javvadhu Hills of Eastern Ghats in Thiruvannamalai District, on 21.11.2014, and requested the officials to take necessary action to expand the area under sericulture, and bring needed infrastructurefacilities to bring sustainable Livelihood Development for the tribal people.     

   
VISIT BY THE SECRETARIES OF GOVT. OF INDIA & GOVT. OF TAMILNADU
TO NABARD'S TRIBAL DEVELOPMENT FUND PROJECT  VILLAGE
The secretaries of   Govt. of India and Govt, of Tamilnadu arrived Alanjanur the Tribal Development Fund project village,  in the afternoon along with a team of officials of Sericulture Department and Forest Department. They had visited Sri.Venkatesan's Silk Worm Rearing shed. The shed was filled with the White Silk Worm Cocoons of 50 layings, ready for harvest. The Netrikas (the latest device used for spinning of cocoons) to carrying the un-harvested Cocoons and a sample harvested Cocoons were shown to them.
VENKATESAN, THE TRBAL SILK FARMER

The secretary had a brief discussion with Sri.Venkatesan, the Silk Farmer of our Tribal Development Project, Alanjanur,  said the following.

"I have raised only half an acre of Mulberry at the beginning. I was impressed by the income I got. Now I have enhanced the Mulberry area to one acre. From now onwards I could get monthly income regularly"
Then the secretary turned down to the Sericulture Department officials.

SERICULTURE DEPARTMENT
OFFICIALS

A team of Sericulture Department officials, Sri. Abdul Faruk, Technical Asst. Thiruvannamalai, Sri.K.S.Mohan, Junior Inspector, Kadaladi, Sri.M.Murugan, Asst. Inspector,Jamnamarathur and Sri.Arockiasamy, Junior Inspector, Pattaraikkadu were also present, in the venue and explained about the feasibility of expanding Sericulture area and also bringing the other infrastructure facilities in Javvadhu Hills.

NABARD'S TRIBAL DEVELOPMENT PROJECT
IMPLEMENTED BY BHUMII


Sri.D.Gnana Suria Bahavan, Director, BHUMII Trust welcomed the Secretaries, and explained about the Nabard's TDF project as detailed below.

"BHUMII is implementing Nabard's  Tribal Development Project in this area.  The department of  Sericulture is providing the subsidy support to the project beneficiaries. The project is supporting 110 tribal families. The project helps to construct the Scientific Silk Worm Rearing sheds. The size of of shed is  714 sq.ft. Now the project has opened an opportunity to earn an average income of  Rs.10000 in 25 days. The  highest income recorded is Rs.30000/ per harvest in 25 days. Sericulture proved here as better livelihood option for the tribals of Javvadhu hills. The department of Sericulture is supplying layings, Chakkies and technical know-how to our project beneficiaries. Now Nabard has sanctioned  its second project to extend the benefit to another 100 families in Javvadhu Hills. The area and the climate is conducive for further expansion too."

JAVVADHU HILL TRIBES

Before leaving the Alanjanur village the Secretary requested the Sericulture and Tribal Development Department to take necessary action to increase Sericulture area and infrastructure facilities to produce Silk Worm Eggs, Chakkies, and Reeling units. In further he said, Sericulture will bring  sustainable development in the life of Javvadhu Hill tribes. 

Later on Sri.D.Gnana Suria Bahavan, Director, BHUMII Trust thanked the Secretaries, for having visited the TDF project village in Javvadhu Hills.





Wednesday, November 19, 2014

THIRUKKURAL FOR CHILD DEVELOPMENT - குழந்தைகள் மேம்பாட்டிற்கு திருக்குறள் நெறி



புதுநகர் மோகன்ராஜ் ஆங்கிலப் பள்ளியில்

வாணியம்பாடி 

குழந்தைகள் மேம்பாட்டிற்கு 

திருக்குறள் நெறி



வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் திருக்குறள் நெறிபரப்பும் விழாவின் 5 ம் ஆண்டின் 5 ம் நிகழ்ச்சியை 18.11.2014 அன்று புது நகர்ஆங்கிலப் பள்ளியில் கொண்டாடி திருக்குறள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற 59 பள்ளிக் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி, மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று பரிசுகளை தட்டிச் சென்ற 23 மாணவ மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப் பட்டுள்ளன. போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப் பட்டன.

விழாவிற்கு தலைமை வகித்தார், ஆங்கிலப் பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி சுரேஷ், முன்னிலை வகித்தார் கிருபராஜ் சுரேஷ், ஆசிரியை வரவேற்புரையற்றினார். சுமார் 200 க்கும் மேற்பட்ட குழந்தைகளும், பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
  




வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர் புலவர் மு.சுப்பிரமணியம், மன்றத்தின்  நோக்கம், செய்துள்ள பணிகள் ஆகியவற்றை தொகுத்துக் கூறி, ' மாணவர்களுக்கு எதிர்கால வாழ்க்கையின் வழிகாட்டியாக விளங்குவதற்கு பொருத்தமான நூல் திருக்குறள் மட்டுமே' என்றார்.  


  



வாணியம்பாடி தமிழ் சிந்தனையாளர் மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் புலவர் தமிழ்தாசன் நன்றி நவில விழா இனிது நிறைவு பெற்றது.

Authored By: Gnanasuria Bahavan, Editor, Vivasaya Panchangam, Expert in Agriculture, Conservation of Natural Resources, Development Communication & authoring books for the rural people.



Thursday, November 13, 2014

JOINT LIABILITY GROUPS - கூட்டுப்பொறுப்பு குழுக்களை உறுவாக்கும் வழிமுறைகள்


கூட்டுப்பொறுப்பு குழுக்களை

உறுவாக்கும்
வழிமுறைகள்

தொழில் செய்ய 
கேரன்ட்டி இல்லா கடன்

JOINT LIABILITY GROUPS



நபார்டு வங்கியின் திட்டம்

கூட்டுப் பொறுப்புக் குழுக்கள்




ஒருவருக்கு ஒருவர் 
கைகொடுத்து உதவும்  திட்டம்


 கடன், தனித்தனியாகவும் பெறலாம்


தேவைக்கு ஏற்ப கடன்


குழுக்களை உருவாக்க

ஊக்கத் தொகை


தெரிந்தவர்களுக்கு

சொல்லுங்கள் 


WE CLEANED SCHOOL PREMISES IN JAVVADHU HILLS - தூய்மை இந்தியா


தூய்மை 
இந்தியா 

WE CLEANED 

SCHOOL PREMISES IN

JAVVADHU HILLS

ALANJANUR

TRIBAL VILLAGE
-----------------------------

Our Prime Minister's  "Thooimai India Iyakkam" (Mission Swachh Bharat), in commemoration of the birth anniversary of Mahthma Gandhi, launching was done in Alanjanur villages of  TDF Javvadhu Hills Project, of Thiruvannamalai District, on 07.10.2014 at 11.00 AM.

BHUMII Trust organized a small awareness meeting in the premises of the Primary School Building of Alanjanur village. Around 60 members took part in the meeting including the school children. 
Sri.S.T.Sudharsan  presided over the programme and addressed the school children and explained about the objectives of the Prime Minister's 'SWACH BHARAT'  and the need for keeping the houses and village neat and clean.

Sri.Gnana Suria Bahavan, Director, BHUMII Trust,  introduced the launching of the "Mission Swachh Bharat" and requested the people for their active participation to keep every part of their village hygienically. One of the school teacher thanked the NABARD, villagers and BHUMII.The meeting was organised by Sri.Selvaraj, and the Tribal Youth Leader of Alanjanur the Community Organizer of BHUMII Trust.

The Sericulture farmers of the Nabard's Tribal Development Project from Alanjanur, the members of the women Self Help Groups , the school children and the village community took part in cleaning  the  primary school premises in Alanjanur. The selected images taken are displayed here.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...