Sunday, August 24, 2014

புற ஊதாக் கதிரே பூமிக்குள் நுழையாதே ! DO NOT ALLOW UV RAYS INTO EARTH

POLLUTION POLLUTION GO AWAY - SERIAL 

காற்றே காற்றே மாசு நீக்கி வா - தொடர் 

புற ஊதாக் கதிரே

 
பூமிக்குள் நுழையாதே !

 

LET US NOT ALLOW

ULTRA VIOLET RAYS 

INTO EARTH


சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்

கேள்வி பதில் - பகுதி 2


11. "ப்ளூமார்பிள்". என்றல் என்ன ?

நாம் வசிக்கும் இந்த பூமியின் செல்லப் பெயர்  "ப்ளூமார்பிள்". சூரிய குடும்பத்தில் சூரியனுக்கு, நான்காவதாக ரொம்பப் பக்கமாய் இருக்கும் கிரகம்.

12.பூமியின் சிறப்பு என்ன ?

நிலம், நீர், காற்று, உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அனைத்தையும் சரியான அளவில் சேர்த்து "பாஸ்ட்ஃபுட்" மாதிரி ரெடியாய் வைத்திருப்பது பூமி மட்டும்தான்.

13. பூமி என்பது என்ன ? அறிவியல் ரீதியாக சொல்லவும் ?
நிலம் + நீர் + காற்று + மனிதர்கள் + விலங்குகள் + இதர உயிரினங்கள் + தாவரங்கள் = பூமி.

14.நிலம் என்பது என்ன ?

மலைகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள், அனைத்தும் சேர்ந்தது நிலம்.

15. காற்று என்பது என்ன ?

கூடுதலான நைட்ரஜன், கொஞ்சம் உயிர் வாயு, சில்லரை வாயுக்கள் சில சேர்ந்தது காற்று.

15. நீர் என்பது என்ன ?

கடல், சமுத்திரங்கள், ஆறுகள், ஏரிகள், ஓடைகள், மழை, பனி, புகைப்பனி, பூம்பனி, கட்டிப்பனி எல்லாம்தான்  நீர்.

14. பூமி மட்டத்திற்குக் கீழே என்ன இருக்கிறது ?

பல அடுக்குகளில் பாறைகள் மற்றும் உலோகங்கள். செங்கல் மாதிரி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப் பட்டுள்ளது..

15 பூமியின் கீழே வெப்பம் அதிகம் இருக்கும் என்கிறார்களே ?

உங்க வீட்டு வெப்பம் எங்க வீட்டு வெப்பம் இல்ல. 12000 டிகிரி பாரன்ஹீட், பூமியின் அடி ஆழத்தின் நடுப் பகுதியில்.

16. பூமியை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது யாருடைய பொறுப்பு ?

பசித்த வயிற்றுக்கு சோறு, தவித்த வாய்க்கு தண்ணீர், நாசி சுவாசிக்க காற்று, அத்தனையும் யார் தருவார் ? ஆக பயனாளிகள்தான் பாதுகாக்க வேண்டும். நமது அடுத்த சந்ததிகளுக்கு பூமியில் இடம் பிடிக்க யார் துண்டு போடுவார்கள் ? கொஞ்சம் யோசிங்க சாமி !

17. தட்ப வெப்ப நிலையை தீர்மானிப்பது எது ?

வாயு மண்டலம்

18. வாயு மண்டலம் எங்கே இருக்கிறது ?
பெரிய பெல்லாரி வெங்காயம் மாதிரி பூமியைச் சுற்றி பல அடுக்கா இருக்கு.

19. வாயு மண்டலத்தோட வேலை என்ன ?

"இன்று இடியுடன் கூடிய மழையோ, மழையுடன் கூடிய இடியோ, லேசானது முதல் மிதமான மழையோ, மிதமானது முதல் கனமான மழையோ, கனமானது முதல் மிக கனமான மழையோ வரும் அல்லது வராது" இப்படி வானொலி மற்றும் தொலைக் காட்சிகளில் வரும் வானிலை அறிக்கை எல்லாம் வாயு மண்டல வேலைகள் தானுங்க. புற ஊதாக் கதிர்கள் பூமிக்குள்ள நுழையாம தடுக்கறதும் இந்த லிஸ்ட்ல ஒண்ணுதாங்க. ஏன்னா, ஓசோன் படலமும் இங்கதான் இருக்கு.


19. வாயு மண்டலத்தில் என்ன  இருக்கிறது ?

வாயுக்கள்தான். நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கன், கார்பண்டை ஆக்சைட், இதர சில்லரை வாயுக்களின் தொகுப்புதாங்க வ.ம.

20. வாயு மண்டலத்தில் எத்தனை அடுக்குகள் உள்ளன ?

நாலு அடுக்கு. ட்ரோப்போஸ்பியர், ஸ்ட்ரேட்டோஸ்பியர், மீசோஸ்பியர், தெர்மோஸ்பியர் அல்லது அயனோஸ்பியர்.

21. இதில் எந்த அடுக்கு நமது தட்ப வெப்ப நிலையை தீர்மானிக்கிறது ?

பூமிக்கு மேல் 8 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ட்ரோப்போஸ்பியர். இதுதான்  தட்ப வெப்ப நிலையை தீர்மானிக்குது.  துருவ மண்டலப் பகுதியிலிருந்து 17 கிலொமீட்டர் வரை பரந்துள்ளது.

22. சூரியனின் புற ஊதாக் கதிர்களை தடுத்து நிறுத்தும் ஓசோன் எந்த அடுக்கில் உள்ள்து ?

ஓசோன் உள்ளதால் இந்த , 'ஸ்ட்ரேட்டோஸ்பியர்,' ஸ்பெஷல் அடுக்கு. 'ட்ரோப்போஸ்பியர்' க்கு மேல் 50 கிலோமீட்டர் வரை உயர்ந்துள்ளது இது.

23. வாயு மண்டலத்தின் உயரமான அடுக்கு எது ?

'மீசோஸ்பியர்' தான் எவரெஸ்ட் மாதிரி வாயு மண்டலத்தின் மிக உயரமான சிகரம், ஆனால் குறைவான வாயுக்களைக் கொண்ட நான்காவது அல்லது கடைசி அடுக்கு. 'ஸ்ட்ரேட்டோஸ்பியர்' அடுக்குக்கு மேல் 90 கிலோமீட்டர் வரைக்கும் அதன் அதிகார எல்லை பரவியிருக்கு.



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...