Thursday, January 9, 2014

மண்புழு உரம் ஏன் வேண்டும் ? VERMI COMPOST WHY IT IS BEST




இயற்கை விவசாயம் 
ORGANIC FARMING,


மண்புழு உரத்தின் 

சிறப்புகள் 


VERMI COMPOST


உங்கள் நிலத்து மண்ணை தொண்டிப்பாருங்கள்> அதில் மண்புழு இருந்தால் அது உயிருள்ள மண். அதில் உயிர் இல்லை என்று அர்த்தம். ரசாயன உரங்களைப்  போட்டு அதில் இருந்த நுண்ணுயிர்களை முற்றிலுமாக அழித்துவிட்டோம். அந்த மண்ணுக்கு மீண்டும் உயிர்தர மண்புழு உரம் நமக்கு வேண்டும். மண்புழு உரத்தின் மகிமைகள் உங்களுக்கு தெரியுமா ?   

அது  மண்ணின் மனசுக்குப் பிடித்தமான உரம்.

மண்ணுக்கு நீர்பிடிப்புத் தன்மையைக் கூட்டும் வரம்.

விஷமான ரசாயன உரங்களுக்கு வேட்டு வைக்கும் கரம் 
 
மகசூலை அதிகரிக்கும் மாயாஜாலம்

பேரூட்டம், நுண்ணூட்டம் அள்ளித் தரும் வள்ளல்

மண்ணின் பௌதீக, ரசாயன, உயிரியல் பண்புகளை மேம்படுத்தும்
டானிக்

நன்மை செய்யும் நுண்ணுயிர்களுக்கு மட்டும் உயிர் தரும்; அன்னப்
பறவை

கழிவுகளை காசாக்கும் மந்திரக்கோல் 

நோய் பூச்சி, மண்அரிப்பு தடுக்கும் இயற்கை வேலி 

ஊட்டமான மண்ணுக்கு அடையாளம் மண்புழுக்கள் 

மண்ணை சுவாசிக்க வைக்கும் நுரைஈரல்கள் 

மக்குப் பொருட்களை சீரணிக்கும் மண்ணின் குடல் 

மண்ணை உரமாக மாற்றித்தரும் உரத் தொழிற்சாலை 

ஆழத்துளை போட்டு ஆவியாய் செல்லும் மழை நீரை மண்ணில்
இறக்கும் மகத்தான இயந்திரங்கள்
 
மண்ணை ருசித்து அதன் மடியில் வசித்து கழிவுகளை காசாக்கும்
மண்புழுக்கள்

3000 வகை புழுக்கள்

இந்தியாவில் 500 ம் உலகம் முழுவதும் 3000 வகை மண்புழுக்களும்; உள்ளன.

யூட்ரில்ஸ் யூஜினோ, ஏஷினியா ஃபோடிடா, லாம்பிடோ மருஷி, பெரியோனிக்ஸ் எக்ஸ்கவேட்டர்ஸ், ஆக்டோகீடானே செராட்டே ஆகிய 5 ரகங்கள் தற்போது புழக்கத்தில் உள்ளன.


யூட்ரில்ஸ் யூஜினோ, ஏஷினியா ஃபோடிடா ஆகிய இரண்டு ரகங்கள் தமிழகத்தின் பிரபலங்கள்


தமிழ் மண்ணின் செல்ல புழுக்கள்

யூட்ரில்ஸ் யூஜினோ - தமிழ்நாட்டின் செல்லம். சிவப்பு மற்றும் பழுப்பு நிற புழுக்கள். வேகமாக வளரும்: அதிக உர உற்பத்தி: 40 நாளில் முழு வளர்ச்சி: 3 முதல் 14 செ.மீ. நீளம், 5 முதல் 8 மிமீ விட்டம்: வாரத்திற்கு 4 முட்டைகள் 46 நாட்கள் தொடர்ந்து இடும்.

ஏஷினியா ஃபோடிடா – சிவப்புப்புழு இதன் பெயர் தமிழகத்தின் இரண்டாவது சாய்ஸ். பழுப்பு ஊதா நிறங்களிலும் தென்படும்: கொஞ்சம் குட்டை – அதிக பட்சம் 13 செ.மீ நீளம்: 3 முதல் 5 மிமீ பருமன்: 1.5 கிராம் எடை


புழுப்பெருக்கம்

இவை இருபால் புழுக்கள்: தற்காலிக ம்யூசிலேஜ் குழரய் மூலம் வித்துக்கள் பரிமாற்றம்: முட்டை தாங்கிய கக்கூன்களில் கருத் தரிப்பு: 3 முதல் 7 இளம் புழுக்கள் 3 வார வளர்ச்சி பெற்று ஒன்று ஆறாகி, ஆறு நூறாகும் அதிசயப்பெருக்கம்.

கால்நடைச்சாணம், பயிர்க்கழிவு, நகரக்கழிவு, உணவு பதப்படுத்தும், சர்க்கரை தொழிற்சாலைக் கழிவுகள் அத்தனையும் மண்புழுக்களுக்கு விருப்பமான உணவு வகை



மண்புழு உரத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். வீட்டு தோட்டத்தில் ஒரு சிறிய இடம் ஒதுக்கினால் போதுமானது. அதிக காசுபணம் தேவையில்லை.  



உழுகின்ற கைகளையும் மாவுபிசையும் கைகளையும் போற்றி வணங்கவேண்டும் 

ஸ்லோவேனியன் பழமொழி


இதுவரை இந்தியாவில் அதிக எண்ணிக்​கயில்  கூட்டுப் பொருப்புக் குழுக்கள் தொடங்கியுள்ள மாவட்டம் வேலூர். இந்த சாதனை​க்கு உரியது வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி –
தகவல் திருமதி விஜயகுமாரி, தனி அலுவலர்,
வே.ம.கூ.வ 


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...