Friday, January 3, 2014

முடியும் தினசரி வருமான விவசாயம் முயற்சியுங்கள் - TRY DAILY INCOME AGRICULTURE IS POSSIBLE



முடியும் 

தினசரி வருமான 

விவசாயம் 

முயற்சியுங்கள் 


TRY DAILY INCOME 

AGRICULTURE 

IS POSSIBLE




1.  இதற்கு ஒரு ஏக்கர் நிலம் போதும்

2.  இதனை 10 பகுதிகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்

3.  ஓவ்வொரு பகுதியிலும் ஒரு விவசாய முறையைத் திட்டமிட வேண்டும்

4.  விவசாயம் என்பது பயிர்சாகுபடிரூபவ் கால்நடை வளர்ப்பு, மீன்வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, மரப்பயிர் சாகுபடி அத்தனையும் உள்ளடக்கியது.

5.  விவசாயி முழு நேர விவசாயியாக மாற வேண்டும்.

6.  குடும்ப உறுப்பினர்களை முழமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

7.  கூடுமானவரை கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

8.  ரசாயன உரங்கள்,  பூச்சிக்கொல்லி மருந்துகளை தவிர்க்க வேண்டும்.

9.  இயற்கை உரங்களை, பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துதல்.

10. வெற்றிகரமான விவசாயிகளை அடிக்கடி சந்தித்தல்

11. வளரும் வேளாண்மை, பசுமை விகடன், நவீன வேளாண்மை புத்தகங்களைத் தருவித்து. நவீன தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொள்ளல்

12. வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கி தொடர்பினை பலப்படுத்துதல்

13. அரசுத் திட்டங்களை தெரிந்துகொள்ளல்


தினசரி வருமான விவசாயத் திட்டம் (மாதிரி)


1. காய்கறி தோட்டம், 2. பூந் தோட்டம் 3. கறவை மாட்டு பண்ணை 4. கோழி பண்ணை 5. மீன் பண்ணை 6.ஆட்டுப் பண்ண 7. தீவனப் பண்ணை, மரம் / புல்
8. மண்புழு உரத் தயாரிப்பு 9.நெல் + பண்ணை குட்டை 10.பழத் தோட்டம்

இயற்கைவளப் பாதுகாப்பு


எ  மண் அரிப்பு தடுப்பு

எ  தப்பி ஓடும் தண்ணீரைத் தடுத்தல்

எ  பணம் தரும் மரங்களை நடுதல்

எ  நிலத்தின் எல்லையில் நீர் உறிஞ்சு குழிகள்

எ  தாழ்வான பகுதியில் பண்ணைகுட்டை

எ  இயறகை உரம் மறறும் பூச்சீக் கொல்லிகளை பயன்படுத்துதல்


காய்கறி தோட்டம்;


எ  உயர் விளைச்சல் ரகங்கள்

எ  வீரிய ஒட்டு ரகங்கள்

எ  நாட்டு ரகங்கள்

எ  குழித்தட்டு நாற்றங்கால்

எ  நிழல் வலை

எ  பசுமைக்குடில்

எ  சொட்டு நீர்ப் பாசனம்

எ  உரப்பாசனம்

எ  மண்புழு உரம்

எ  பஞ்சகவ்யம்

எ  அமுதக்கரைசல்

எ  வேம்புப் பொருட்கள்

எ  உயிரியல் உரங்கள்

எ  பசுந்தாள் உரங்கள்

எ  கீரைரூபவ் முள்ளங்கி,  வெண்டை, கத்தரி,  மிளகாய், வெங்காயம்ரூபவ் பீன்ஸ்,  கேப்சிகம்

எ  நேரடி விற்பனை, மதிப்பு கூட்டல்


பழமரங்கள்


எ  மா:அல்போன்சா, பெங்களுரா, செந்தூரா,  பங்கனபள்ளி,  ருமானி,  நீலம்

எ  சப்போட்டா: பி கே எம் 2, 3.4.5,  காலிபர்த்தி,  கிர்த்திபர்த்தி,  கிரிக்கட்பால்

எ  நெல்லி: பி எஸ் ஆர் 1.2. சாக்கியா,  கிருஷ்ணா,  காஞ்சன்,  என் ஏ 6, 7

எ  நாவல்: ஜம்பு நாவல்,  சாதா ரகம்

எ  மாதுளை: கணேஷ்,  ஜோதி


பூப் பயிர்கள்


எ  ரோஜா:- எட்வர்ட் ரோஜா,  ஆந்திரா சிவப்பு

எ  மல்லிகை: குண்டு மல்லிகை

எ  முல்லை: கோ 1ரூபவ் கோ 2

எ  ஜாதி மல்லி: கோ 1, கோ 2

எ  சாமந்தி:கோ 1,  கோ 2,  எம் டி யு 1

எ  கனகாம்பரம்: ஆரஞ்சு,  சிவப்பு,  டெல்லி கனகாம்பரம்

எ  கறவைமாடு: ஜெர்சி,  ஹோல்சியன் பிரீசியன்,  சிந்திரூபவ் நாட்டு மாடுகள்

எ  ஆடு பண்ணை: தலைச்சேரி,  ஜம்னபாரி,  சென்னை சிவப்பு,  குரும்பை,  நாட்டு இனங்கள்

எ  கோழிகள்: நாட்டு இனங்கள்- பெருவாய் அசீல்,  கடகநாத்,  கூடை கோழி,  கிரிராஜா, வனராஜா

எ  மீன்: கட்லா,  ரோக்,  மிர்கால்,  கெளுத்தி,  அலங்கார மீன்கள்


தீவனப் பண்ணை மரங்கள்:-


எ  மரங்கள்: சூபாபுல், கல்யாண முருங்கை,  கொடுக்காய்புளி, அகத்திரூபவ் வேம்பு

எ  புல் வகை: கொழுக்கட்டைப்புல்,  எருமைப்புல்,  குதிரை மசால்,  முயல் மசால்

எ  மண்பழு பண்ணை:- சிக்கனமான குவியல் முறை


2 வது

பசுமைப் புரட்சி


விவசாயத் திட்டம்


1.  தினசரி வருமானம்;

2.  நிலம் நீர்; மற்றும் இதர இடுபொருட்களை திறமையாக கையாள முடியும்

3.  நவீன தொழில் நுட்பங்களை சுலபமாக கையாள முடியும்

4.  இதர தொழில்களைப் போல விவசாயம் லாபகரமாக மாறும்

5.  விவசாயிகளுக்கு விவசாயத்தின் மீது நம்பிக்கை ஏற்படும்

6.  விவசாய நிலங்கள் ரீயல் எஸ்ட்டேட்டுக்கு விலை போவது தடைபடும்

7.  படித்த இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள்

8.  இயந்திர மயதமாதல் சுலபமாய் வசப்படும்

9.  ஆராய்ச்சி நிலையங்களிலிருந்து கிராமங்களை வந்டையாத தொழில்நுட்பங்களை விவசாயிகள் தேடி கண்டுபிடிப்பார்கள்

10. விவசாயம் முழு நேரத் தொழிலாக மாறும்

11. “விவசாயம் லாபகரமான தொழில் அல்ல” என்று சொல்வது பொய் என உறுதி ஆகும்

12. நேரடி விற்பனை,  மதிப்பு கூட்டிய பொருள் விற்பனை,  ஏற்றுமதி போன்றவை படிப்படியாக வந்து சேரும்

13. இயற்கை உரம்,  இயற்கை பூச்சி மருந்துரூபவ் சொட்டு நீர் பாசனம் போன்றவற்றால் சாகுபடி செலவு குறைந்து விவசாயம் லாபகரமானதாக மாறும்

14. “விவசாயம் ஒரு சூதாட்டம்” என்பது மூடநம்பிக்கை எனபதை உணருவோம்

15. .நிலவளம்,  நீர்வளம், பருவம், உள்ளுர் சந்தை வாய்ப்பு ஆகியவற்றைப் பொறுத்து நமது விவசாயத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம்.

16. வேலையாள் கிடைக்காத பிரச்சினையை சமாளிக்க முடியும்

17. விவசாயததை லாபகரமாக மாற்றுவதுதான் இரண்டாவது பசுமைபபுரட்சி


தேவ.ஞானசூரிய பகவான் ஆசிரியர், விவசாயப் பஞ்சாங்கம்.



No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...