Saturday, January 25, 2014

பத்து மலர்ப்பயிர்களும் புதிய உயர்விளைச்சல் ரகங்களும் - TEN FLOWER CROPS & HIGH YEILDING VARITIES


பத்து  மலர்ப்பயிர்களும்  

புதிய உயர்விளைச்சல் 

ரகங்களும் 


TEN FLOWER CROPS &

HIGH YEILDING

VARITIES


   

10 பூப்பயிர்கள்
(TEN FLOWER CROPS)

மானாவாரி விவசாயிகள் ஒரு ஆண்டில் ஒருமுறைதான் வருமானம் பார்க்க முடியும்.

மழை ஏமாற்றிவிட்டால் அதுவும் கனவாகப்போய்விடும்.

அதையும் சமாளிக்கலாம், எப்படி ?


நல்லமழை என்றால் புஞ்சையில்கூட இரண்டுபோகம் எடுக்கமுடியும். தண்ணீர்போதுமானதாக இருந்தாலும் இரணடுபோகம் எடுக்கலாம்.
மிக அரிதாக மூன்று போகம் பார்க்கலாம்.
ஆனால், ஓரளவு தண்ணீர் வசதியும் வஇகால் வசதி உள்ள மண்ணும் குறைவான  குடும்ப நபர்களும்  இருந்தால் போதும், தினசரி வருமானம்தான்.
என்ன பயிர் என்று யோசிக்கிறீர்களா ?

பூப்பயிர்போட்டு காசுபார்த்தவர்கள் மற்ற பயிர்ளை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.


பூப்பயிர் போடும்போது உயர்விளைச்சல் தரும் ரகங்ளைப் போடவேண்டும்.

அந்த பயிர்களுக்கு ஏற்ற மண்கண்டம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

அதற்கு இந்த அட்டவணை உபயோகமாக இருக்கும்.​


தினசரி வருமானம் தரும்
மலர்ப் பயிர்கள்
மலர்ப் பயிர் ரகங்ளும் எற்ற மண்வகையும்
FLOWER CROPS – VARITIES & SOIL TYPE
வ.எண்
பயிர்
ரகங்கள்
மண்
1
2
3
4
1
ரோஜா
எட்வர்ட்ரோஸ், ஆந்திராரெட்ரோஸ்
வடிகால்வசதி + மணற்சாரியான இருமண்பாடு
2
ஹைப்ரிட்ரோஸ்
கிளேடியேட்டர்,பேபிபிங்க்,சோபியாலரென்ஸ், ஏற்காடு 1, ஏற்காடு 2, ஏற்காடு 3
கடல்மட்டத்திற்கு 1500 மீட்டருக்கு மேல்
3
மல்லிகை
ஓர்அடுக்கு, ,இரண்டு அடுக்கு, இருவாட்சி, ராமநாதபுரம்லோகல்
வடிகால்வசதி + அங்ககச்சத்து
4
முல்லை
கோ. 1,கோ. 2
வடிகால்வசதி + இருமண்பாட்டு செம்மண்
5
ஜாதிமல்லி (பிச்சிப்பூ)
கோ. 1,கோ. 2
வடிகால்வசதி + இருமண்பாட்டு செம்மண்
6
கனகாம்பரம்
ஆரஞ்சு, ரெட், டெல்லி கனகாம்பரம்
வடிகால்வசதி + இருமண்பாட்டு மணல்சாரி
7
மெரிகோல்ட்

மெரிகோல்ட், பூசாநாரங்கி, கெய்ண்டாபூசா,பாசந்தி கெய்ண்டா
வடிகால்வசதி + இருமண்பாட்டு  மணல்சாரி
8
சம்பங்கி
மெக்சிகன் சிங்கிள், ஶ்ரீநகர்பிரிஜ்வால், பூனா, கல்கத்தா,சுவாசினி,பேங்களூர்
வடிகால்வசதி + இருமண்பாட்டு  மணல்சாரி
9
துலுக்கசாமந்தி
கோ.1, கோ.2, எம்.டி.யு.1
வடிகால்வசதி உள்ள செம்மண்
9
அரளி
சிங்கிள்ரோஸ், சிங்கிள்ஒயிட், சிங்கிளரெட், டபிள்டைப் ரகங்கள்
செஞ்சளை, களிமண், இருமண்பாடு (வடிகால் வசதியுடன்)
10
மரிக்கொழுந்து
உள்ளூர்ரகம்
வடிகால் வசதி உள்ள இருமண்பாடு

  


ஒரு அழகிய பெண் தன் சீதனத்தை அவள் முகத்தில் சுமக்கிறாள் - ஜெர்மானிய பழமொழி 

அழகும் அறிவும் ஒரேதிசையில் பயணம் செய்யாது - சிரியோலி பழமொழி 

அழகிய பறவைதான் கூண்டில் அடைபடுகிறது - 
சீனப் பழமொழி 

வறுமை  அழகை சிதைக்காது - இத்தாலிய பழமொழி 

அழகு சோறு போடுமா ? அதிர்ஷ்டம் சோறுபோடுமா ? - 
தமிழ் பழமொழி


PLEASE
POST 
YOUR
COMMENTS
                                       gsbahavan@gmail.com                                                 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...