Friday, January 3, 2014

ஒற்றை நெல் நாற்று நடவு முறை லாபகரமானது SRI METHOD BRINGS PROFIT IN RICE




ஒற்றை நெல் நாற்று
நடவு முறை
லாபகரமானது 
 

 SRI METHOD

BRINGS PROFIT IN RICE

(SRI)

'அந்த காலத்துலயே நாங்க அப்பிடிங்க'

திருந்திய நெல் சாகுபடி 

இந்திய துணைக்கண்டத்தில் நெல் நாற்று நடவு செய்யும் மாநிலங்களில் இன்று சக்கைப்போடு போடுவது ஒற்றை நாற்று நடவுப் புரட்சி. இதற்குக் காரணம் சாபடி செலவு குறைவு ! வருமானமும் லாபமும் அதிகம் !

திருந்திய நெல் சாகுபடியின் அடிப்படை ஒற்றை நாற்று நடவு. ஓற்றை நாற்று நடவு பற்றி மடகாஸ்கர் என்னும் நாட்டில் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து அதை உலகுக்கு அறிமுகம் செய்தவர் பிரஞ்சு நாட்டு பாதிரியார் ஹென்றி டி லாலேனி என்பது நாம் அறிந்த செய்தி.

ஆனால் 1904 – 05 ம் ஆண்டிலேயே இந்த ஒற்றை நாற்று நடவுப் புரட்சியை முதன் முதலில் கண்டுபிடித்து பிரபலப்படுத்தியவர் தமிழ்நாட்டைச் செர்ந்தவர், கடலூர் மாவட்டம் சிதம்பரத்துக்கு பக்கத்து ஊரக்காரர்;. அவர் பெயர் ஆபரணம் பிள்ளை என்பதெல்லாம் நமக்கு தெரியாத சேதி.

ஆபரணம்பிள்ளை கண்டுபிடித்த ஒற்றை நாற்று நடவு பற்றி 1915 ம் ஆண்டு வாக்கில்பிழைக்கும் வழி என்னும் பத்ரிக்கையில் பல கட்டுரைகள் பிரசுரம் ஆயின. 1908 முதல் 1915 வரை இந்த ஒற்றை நாற்று நடவு முறை சென்னை மாகாணம், மைசூர், திருவாங்கூர் சமஸ்தானங்களில் பரவலாக பரவி இருந்தது.

1900 ம் ஆண்டு வாக்கில் தமிழ்நாட்டில் ஏக்கருக்கு 60 முதல் 80 கிலோ விதை நெல் பயன்படுத்தப்பட்டது. ஒற்றை நாற்று நடவு முறையின் பயனாக 1920 ல் 30 முதல் 40 கிலோ என விதை நெல்லின் அளவு பாதியாக குறைந்தது.

இதன் மூலம் மட்டும் சென்னை மாகாணத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய் மிச்சம் பிடித்தனர். 1908 முதல் 1915 வரையான காலகட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி முதல்வர்செசில்வுட்'  வேளாண்மைத்துறை இயக்குநர்கள்கூச்மேன்ஸ்டுவர்ட்சாட்விக் மற்றும துணை இயக்குநர் சாம்சன் ஆய்வாளர்கள் சுப்பிரமணி ஐயர், நாராயணசாமி ஐயர், முன்னோடி விவசாயிகள், தர்மலிங்கராஜு, குழந்தைவேலு உடையார் ஆகியோரின் பெரு முயற்சியால் ஒற்றை நாற்று நடவு முறை பிரபலமானது.

போனஸ் செய்தி: ஆபரணம் பிள்ளை 1915 ம் ஆண்டுநூதன சாகுபடி நூல் என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

( ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மைஜனவரி 2010)


'குறைவான முள் இருப்பதால் அது நல்ல ரோஜா செடி ஆகாது, அதில் நிறைய பூக்கள் இருக்க வேண்டும்'

 ஹென்றி வான் டைக்

=================================================


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...