ஒரு பண்ணைக்குட்டை
அறுபது லட்ச ரூபாய்
தண்ணீர் சேமிக்கும்
தண்ணீர் சேமிக்கும்
SAVESIXTY LAKH RUPEES
WATER
WATER
நட்சத்திரங்கள் - TIT BITS
100 சதுரமீட்டரில் பண்ணைகுட்டை போட்டால்
ஒரு மீட்டர் நீளம், ஒரு மீட்டர் அகலம், ஒரு மீட்டர் ஆழம் உள்ள பண்ணைக்குட்டை மழைக்காலத்தில் ஒரு முறை நிரம்பினால் 1000 லிட்டர் தண்ணீர் சேமிக்கலாம். ஆனால் மிகக் குறைவாக மழை பெய்யும் காலத்தில் கூட ஒரு பண்ணைக்குட்டை மூன்று முறை நிரம்பும். அப்படி என்றால் 100 சதுரமீட்டர் பரப்புள்ள நிலத்தில் ஒரு பண்ணைகுட்டை அமைத்தால் ஒரு ஆண்டில் மூன்று லட்சம் லிட்டர் நீரை நிலத்தடி நீராக சேமிக்க முடியும். இன்று ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை இருபது ரூபாய் . நீங்கள் 100 சதுரமீட்டரில் சேமிக்கும் நீரின் மதிப்பு ரூபாய் அ று ப து ல ட்ச ம்.
தீவன செலவை குறைக்கலாம்
பசும்புல் தட்டுப்பாடான கோடையி;ல் மர இலைகளை கறவை மாடுகளுக்கு தீவனமாக அளிக்கலாம். சூபாபுல், அகத்தி, இலைகளில் 30 சதம் வரை புரதச்சத்து உள்ளது. இதர மர இலைகளில் 18 சதம் வரை புரதம் அடங்கிஉள்ளது. வெள்வேல், கருவேல், வாகை, சிசு, ஆச்சா, சூபாபுல், வள்ளி, கொடுக்காபுளி, அகத்தி, கிளைரிசிடியா,கல்யாணமுருங்கை, உதியன், அத்தி, ஆலன், வேம்பு ஆகியவை அற்புதமான தீவன மரங்கள். இவற்றின் இலைகளை தினமும் தீவனமாகக் கொடுத்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம். அத்துடன் தீவனத்திற்கு ஆகும் செலவை வெகுவாகக் குறைக்கலாம்
‘பீரோ’ சைஸ் கவனத்திற்கு
பீரோ சைஸ் உடம்பை சீரோ சைஸ்’ க்கு குறைக்க அருமையான இயற்கை மருந்து கார்சீனியா பழங்கள் ! அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் மேற்கத்திய நாடுகளில் உடல் இரளைக்க விரும்புவோர் “கொண்டா ஒரு கார்சீனியா” என்கிறார்கள். ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம், குளுகோஜெனிஸ், குளுகுர்னியோஜெனிஸ் ஆகிய ரசாயன பொருட்கள் உடம்பு ஏறாமல் பார்த்துக் கொள்ளுகின்றன. கார்சீனியாவின் தமிழ் பெயர் குடம்புளி (அ) மலபார்புளி. கேரளா சரக்கு !
உடும்பு பிடிக்க வருகிறார்கள் !
“ மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் தரும் பட்டுவளர்ப்பையும் கற்றுக்கொள்ளலாம் அப்படியே பஞ்சாமிர்தமும் வாங்கி வரலாம் பழனிக்கு போனால்” என்கிறார்கள், அக்கம்பக்கத்து ஊர்க்காரர்கள். மாதம் ஒரு லட்சம் என்றால் ஒரு நாள் வருமானம் 3000 ரூபாய். ஒரு நாள் வருமானம் 3000 ருபாய் என்றால் அயல்நாட்டு வேலையை விட்டுவிட்டு அடுத்த பிளைட் ஏற தயார் ஆகி வருகிறார்கள் நம்ம ஊர் சாப்ட்வேர் இஞ்சினியர்கள். “அசலூரில் ஆனை பிடிப்பதைவிட உள்ளுரில் உடும்பு பிடிப்பது சுலபம் அல்லவா ?
இயுற்கைமுறை நூற்புழு கட்டுப்பாடு;
ஒரு சென்ட் நிலத்தில் 2 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இ;ட்டு பூப்பயிர்களில் நுர்ற்புழுக்களை கட்டுப்படுத்தலாம். மலர் பயிர்களில் பெருமளவு மகசூல் மற்றும் வருமான இழப்பை ஏற்படுத்துவதில் முக்கியமானவை நூற்புழுக்கள். வேர்ப்பகுதியில் முடிச்சுகள், வேரின் மேல் பகுதியில் கீரல்கள், வேர் அழுகல், இலைகள் மஞ்சள் நிறமாக மாறுதல், வளர்ச்சி குன்றுதல் போன்றவை நூற்புழுக்களை நமக்கு தெரிவிக்கும் அறிகுறிகள். வேர்முடிச்சு நூற்புழு, சுருள்வடிவ நூற்புழு, வேர் அழுகல் நூற்புழு, என 3 வகை நூற்புழுக்கள் மலர் பயிர்களை தாக்குகின்றன. ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், செம்பருத்தி, டாலியா, லில்லிரூபவ் கார்னேஷன், கிளாடியோலஸ் ஆகியவை தாக்கப்படுகின்றன.
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
கலப்பையும் மண்வெட்டியும்தான் உலகத்திற்கு சோறு போடுகின்றன
பல்கேரியன் பழமொழி
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////விவசாயி தத்துவ ஞானியாகவே பிறக்கிறான், பணக்காரன் தத்துவ ஞானியாக, தாடி தரையைத் தொடும்வரை படிக்க வேண்டும் -
ஈஸ்டோனியன் பழமொழி
/////////////////////////////////////////////////////////////////////////////////////////////
///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
2 comments:
ஆயிரம் சதுர அட குளம் வெட்டினால் 60 லட்சம் .....நம்பும்படி ஏதாவது சொல்லுங்கள்
பண்ணைகுட்டையின் நீளம் 10 மீட்டர் x பண்ணைகுட்டையின் அகலம் 10 மீட்டர் =
பண்ணைகுட்டையின் பரப்பு = 100 சதுர மீட்டர் x பண்ணைகுட்டையின் ஆழம் 1 மீட்டர் = பண்ணைகுட்டையின் அளவு கனமீட்டரில் = 100 கனமீட்டர்.
ஒரு கன மீட்டரின் கொள்ளளவு 1000 லிட்டர். பண்ணைகுட்டை ஒருமுறை நிரம்பினால் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்கும். ஒரு ஆண்டின் மழைக்கலத்தில் அது 3 முறை நிரம்பும். அப்படியென்றால் மூன்று லட்சம் லிட்டர் நீர் ஆகிறது. ஒரு லிட்டருக்கு 20 ரூபாய் மதிப்பு போட்டு பாருங்கள். நான் கொஞ்சம் கணக்கில் மண்டுதான். ஆனாலும் இந்த கணக்கு சரியாக இருக்கும் பாருங்கள். உங்கள் கருத்தை பதிவிட்டமைக்கு நன்றி.
Post a Comment