Wednesday, January 22, 2014

நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டமும் மக்கள் மேம்பாடும் - HOW WATER CONSERVATION ENHANCES PEOPLE LIVELIHOOD ?




நீர்வடிப்பகுதி 

மேம்பாட்டுத் திட்டமும்

மக்கள் மேம்பாடும்

HOW WATER CONSERVATION

ENHANCES

PEOPLE'S LIVELIHOOD ?


மேல் கீழ் அணுகுமுறை   



NABARD’S 

WATERSHED'S

TOP DOWN APPROACH


திட்டவிளக்கம் (PROJECT DETAILS)


ஒருகுறிப்பிட்ட கிராமப்புற நிலப்பரப்பில் நீர்வளம், நிலவளம், 

வனவளம், பயிர்வளம் மற்றும் கால்நடைவளத்தைப் பாதுகாத்து 

மேம்படுத்துவதுடன் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் சமூக 

பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான திட்டம். 

நீர்வடிப்பகுதி என்பது பொதுவான வடிமுனை கொண்ட ஒரு 

நிலப்பகுதி என்று அர்த்தம்.


நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கியமான பணிகள் 

(WATERSHED TREATMENTS) 

1.  நில சீர்திருத்தப் பணிகள்

2.  வடிகால் சீர்திருத்தப் பணிகள்

3.  பாரம்பரிய நீர் ஆதாரங்ளை சீர்செய்தல்

4.  நிலமற்றோர் மற்றும் பெண்களுக்கான கடனுதவி

5.  பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள்

6.  பராமரிப்பு நிதி உதவி

மேல்கீழ் அணுகுமுறை (TOP DOWN APPROACH )


நீர்வடிப்பகுதி என்றால் நீர்வடியும் பகுதி என்று அர்த்தம். இதில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி என மூன்று பகுதிகள் உண்டு.

இதில் பிரச்சினைகள் அதிகம் உள்ளது மேல்பகுதி
நடுத்தரமான பிரச்சனைகள் உடையது நடுப்பகுதி
குறைவான பிரச்சனைகள் உடையது கீழ்ப்பகுதி
நீர்வடிப்பகுதி திட்டங்களை செயல்படுத்தும்போது இதனை கவனத்தில் கொள்ளவேண்டும்.

நிலச் சீர்திருத்தப் பணிகளை (AREA TREATMENT) கீழ்கண்டவாறு இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

அவை தனியார் நிலத்தில் அல்லது பட்டா நிலத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் மற்றும் பொதுநிலத்தில் செய்ய வேண்டிவை.

இந்த இரண்டு வகையான நிலங்களிலும் கீழ்கண்ட பலவேறு சீர்திருத்தங்ளை திட்டத்தின் உதவியுடன் செய்யமுடியும்.

தனியார் நிலத்தில் அல்லது பட்டா நிலத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்.(PRIVATE LAND TREATMENTS)

1.மண்வரப்பு
2.கல்வரப்பு
3.பண்ணைக்குட்டை
4.இறைவை நிலங்களில் பழக்கன்று வளர்ப்பு
5.விவசாய நிலங்களில் மரக்கன்று வளர்ப்பு

பொதுநிலத்தில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள்.(COMMONLAND TREATMENTS)

1.  நீர் உறிஞ்சு குழிகள்
2.  சம்மட்ட நீர் உறிஞ்சு குழிகள்
3.  கசிவுநீர்குட்டை
4.  பொதுநிலங்களில் மரக்கன்று வளர்ப்பு
5.  நீர் உறிஞ்சு குழிகளின்மேல் மரக்கன்று வளர்ப்பு
6.  தீவனப்புல் வளர்ப்பு

வடிகால் சீர்திருத்தப்பணிகள் (DRAINAGE  TREATMENT)

கீழ்கண்ட சீர்திருத்தப்பணிகளை திட்டத்தின் உதவியுடன் செய்யலாம்.

1.  சிறுகல் அடுக்குத்தடுப்பு
2.  பெருங்கல் அடுக்குத்தடுப்பு
3.  ஓடைகுட்டை
4.  தடுப்பணைகள்
5.  கோடிக்கரை கட்டுதல்

பாரம்பரிய நீர் ஆதாரங்களை சரிசெய்தல் (RENOVATION OF TRADITIONAL WATER BODIES)

குளங்கள் மற்றும் ஓடைகள்போன்ற நீர் ஆதாரங்களில் கீழ்கண்ட பலவேறு சீர்திருத்தங்களை திட்டத்தின் உதவியுடன் செய்யலாம்.

1.  ஓடைகளில் தூர் எடுத்தல்
2.  குளங்களில் தூர் எடுத்தல்
3.  ஏற்கவே உள்ள நீர்நிலைகளில் உள்ள தடுப்பணை, மதகுகள், மற்றும் கோடிக் கரைகளில் பழுது நீக்கம் அல்லது ரிப்பேர் செய்தல்.

நிலமற்றோர் மற்றும் பெண்களுக்கான வாழ்வாதார உதவி (LIVELIHOOD SUPPORT TO LANDLESS)

இதன் கீழ் 5 விதமான உதவிகள் செய்யப்படுகின்றன.
1.  புதிய மகளிர் குழுக்களை உருவாக்குதல்
2.  ஏற்கனவே செயல்படும் குழுக்களை வலிமை உடையதாக வளர்த்தல்
3.  செயல்படாத குழுக்களை செயல்பட ஊக்குவித்தல்
4.  குழுக்களுக்கு சிறுதொழில் தொடங்க பயிற்சி அளித்தல்
5.  சிறதொழில் தொடங்க சுழல்நிதி கடன் அளித்தல்

பயிற்சி மற்றும் செயல்விளக்கங்கள் (TRAINING AND DEMONSTRATIONS)

அந்த நீர்வடிப்பகுதியில் பயிரிடப்படும் பயிர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், கால்நடைகளின் உற்பத்தியை அதிகரித்தல், சிறுதொழில் தொடங்குவது தொடர்பான பயிற்சிகள் மற்றும் செயல்விளக்கங்ளை நடத்துதல்.

பராமரிப்பு நிதி (MAINTENANCE FUND)



திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் சொத்துக்களான தடுப்பணைகள், கோடிக்கரைகள் போன்றவற்றை பராமரிப்பதற்கான நிதி வழங்கப்படுகிறது. ஆனால் திட்டக்காலம் முடிடைந்த பின்னர்தான் இந்தத் தொகை​யை பயன்படுத்த முடியும்.

திட்டக்காலம் (PROJECT DURATION)

திறன் வளர்ப்புப்பகுதித் திட்டம் – 1 ஆண்டு
முழு செயலாக்கத் திட்டம் – 3 ஆண்டு
​மொத்தம் – 4 ஆண்டுகள்

மொத்த திட்டக் காலத்தில்  முதல் ஆண்டு திட்டத்திற்கு திறன் வளர்ப்புப் பகுதித் திட்டம் (Capacity Building Phase)  என்று பெயர். அடுத்த மூன்று ஆண்டு திட்டத்திற்கு முழு செயலாக்கத் திட்டம் என்று பெயர்.

திறன் வளர்ப்புப்பகுதி திட்ட காலத்தில் 100 எக்டர் பரப்பில் மட்டுமே செயல்படுத்த  அனுமதிக்கப்படுவர்.

திட்ட செயலாக்க முகமையுடன் அந்த கிராமத்து மக்களும் இணைந்து திறன் வளர்ப்புப் பகுதித் திட்டத்தை (CBP) செய்து முடித்த பின்னால், நபார்ட் வங்கி முழு செயலாக்கத்திட்டத்திற்கு (FULL IMPLEMENTATION PROJECT) அனுமதி வழங்கும்.

திட்ட செயலாக்க முமையுடன் இணைந்து திறன் வளர்ப்புப் பகுதித் திட்டத்தை செய்து முடித்த பின்னால், நபார்டு வங்கி முழசெயலாக்கத் திட்டத்திற்கு அனுமதி வழங்கும்.

திட்ட செயலாக்க முகமை அதற்கான திட்டத்தை தயாரித்து நபார்டு வங்கிக்கு சமர்ப்பிக்கும். இந்த திட்டத்திற்கான அனுமதி பெறப்பட்டதும் முழு செயலாக்கத் திட்டம் சுமார் 1000 எக்டர் பரப்பில் செயல்படத் தொடங்கும்.

பயனாளிகள் (BENEFICIARIES)

நீர்வடிப்பகுதியில் உள்ள அனைத்து நிலமுள்ள விவசாயிகளும் (LAND OWNED) நிலம் இல்லாதவர்களும் (LANDLESS) திட்டத்தின் பயனாளிகளாக இருப்பர்.

கிராம நீர்வடிப்பகுதி சங்கம் (VILLAGE WATERSHED COMMITTEE)

இந்தத் திட்டம் முழுமையாக மக்கள் பங்கேற்புடன் அதற்கு ஏற்ற வகையில் கிராம நீர்வடிப்பகுதி சங்கம் அமைக்கப்படும். இந்த சங்கத்தின் கீழ்கண்ட நிர்வாகிகள் செயல்படுவர்.

1.  தலைவர் - 1
2.  துணைத்தலைவர் – 1
3.  செயலாளர் – 1
4.  பொருளாளர் – 1
5.  நிர்வாக்க்குழு உறுப்பினர்கள் - 5

கிராம நீர்வடிப்பகுதி சங்கமும் திட்டசெயலாக்க முகமையும் இணைந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.

திட்டநிதி (PROJECT FUND)

திட்டத்திற்கான மொத்த நிதியில் 50 % நபார்டு வங்கியும் 50 % மாநில அரசும் அளிக்கிறது. திட்டநிதி கிராம நீர்வடிப்பகுதி சங்கக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். திட்டநிதி கணக்கை நீர்வடிப்பகுதி சங்கத் தலைவரும், திட்ட செயலாக்க முகமையின் பிரதிநிதி ஒருவரும் நிர்வகிப்பார்கள்.


திட்ட கண்காணிப்பு (MONITORING)

நபார்டு வங்கியைச் சேர்ந்த அலுவலர்களும் திட்டப்பணிகளை அவ்வப்போது கண்காணிப்பார்கள்.

குறிப்பு

நபார்டு நிதி உதவியுடன் வேலூர் மாவட்டத்தில் தும்பேரி, சிக்கனாங்குப்பம் கிராமங்களிலும் திருவள்ளூர் மாவட்டத்தில் சின்னகடம்பூர் பெரியகடம்பூர் கிராமத்திலும் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்டங்களை பூமி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

திட்டம் தொடர்பான சநதேகங்களுக்கு கீழ்கண்ட முகவரியில் உள்ள பூமி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.


பூமி

இயற்கைவளமேம்பாட்டு நிறுவனம் (பயிற்சி & ஆராய்ச்சி), எண் 3 / 265, மல்லகுண்டாரோடு, தெக்குப்பட்டு & அஞ்சல், வாணியம்பாடி வட்டம்,வேலூர் மாவட்டம், தமிழ்நாடு – பின் – 635801.

                                               










No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...