Saturday, January 11, 2014

அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி ? HOW TO PREPARE AMUTHAKKARAISAL ?



G.KALYANI



இயற்கை

விவசாயம் 

ORGANIC 

FARMING 

அமுதக்கரைசல் தயாரிப்பது எப்படி ?

HOW TO PREPARE 
ORGANIC MANURE
AMUTHAKKARAISAL



இனி காசு கொடுத்து உரம் வாங்க



வேண்டாம் ! 




அமுதக்கரைசல் வந்தாச்சி ! ரசாயன உரம் மூச் ! இனி தம்பிடி காசுகூட செலவில்ல ! சாகுபடி செலவு குறைஞ்சி போயிடும் ! இனி விவசாயம் லாபகரமாக மாறிவிடும் !

காசுகொடுத்து உரம் பூச்சிக்கொல்லி வாங்க வேண்டாம்.

உங்களுக்கு தேவை அமுதக்கரைசல்.


அமுதக்கரைசல் தயாரிக்க ஒரேஒரு நாட்டுமாடு போதும். 


பிறந்த குழந்தைகூட தயார் செய்துவிடும்.


ஏன் அமுதக்கரைசல் தேவை ?

1. தழைச்சத்தை கிரகித்து அளிக்க உதவுகிறது.

2. மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவற்றை பயிருக்கு கிடைக்கும் வகையில்      மாற்றித்தருகிறது

3. நுண்ணுாட்டச்சத்துக்களையும் அளிக்கிறது

4. பயிர்களின் வளர்ச்சியும் மகசூலும் அதிகரிக்கிறது

5. பூச்சி நோய் தாக்குதலை கணிசமாகக்குறைக்கிறது

6. உரம்,  பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு ஆகும் செலவைக் குறைக்கிறது

7. சாகுபடி செலவைக் குறைத்து விவசாயத்தை லாபகரமாக மாற்றுகிறது

8. விஷம் இல்லாத உணவை உற்பத்தி செய்ய உதவும்.

9. சுற்றுச்சூழல் மாசுபடாமல் விவசாயன் செய்ய முடியும்

10. இதைத்தயாரிப்பது மிகவும் சுலபம்  



நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகிய பஞ்சபூதங்கள் பயிர் வளர்ச்சிக்கு அடிப்படையான தேவைகள்

நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷ் ஆகிய முக்கிய ஊட்டச்சத்துக்கள்தான் இதில் அதிகம் உள்ளன.

நமது காற்று மண்டலமே ஒரு தழைச்சத்து கடல் 

இவற்றை நிலை நிறுத்தும் பாக்டீரியாக்கள் அசட்டோபேக்டர் ரைசோபியம்  ஆகியவை நட்டுமாட்டு குடலில் உள்ளன.

நாட்டு மாட்டு சாணத்தில் தயாரித்த ஜீவாமிர்தத்தை பயன்படுத்தினால் பாக்டீரியாக்கள் நம் நிலத்தில் பெருகும்.

பாஸ்பேட் சத்தும் மண்ணில் அதிகம் உள்ளது. ஆனால் பயிர்கள் எடுத்துக்கொள்ள முடியாத வடிவில் உள்ளது.

இதனை பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவும் பாஸ்பேட் சால்யுபலைசிங் பாக்டீரியாவும் (} அமுதக்கரைசலைப்  பயன்படுத்தினால் பெருமளவில் நிலத்தில் பெருகும்.

பொட்டாஷ் சத்தும் பயிர்களுக்கு கிடைக்காத வடிவில் உள்ளது. இதனை பயிர்கள் எடுத்துக்கொள்ள உதவும் பேசில்லஸ் சிலிகேட் பேக்டீரியாவும் (SOLUBALISING BACTERIA) அமுதக்கரைசலை தெளித்தால் மிகுதியாக உற்பத்தி ஆகும்.

நுண்ணூட்டச் சத்துக்களும் (MICRO NUTRIENTS) அமுதக்கரைசலில் அடங்கி உள்ளன. இதனை பயன்படுத்தும்போது பூச்சி நோய்களும் கட்டுப்படும். மட்டுப்படும்.

அமுதக்கரைசலை பயன்படுத்தினால் எந்த காலத்திலும் நீங்கள் கனத்த காசுகொடுத்து உரம் பூச்சிக்கொல்லி வாங்க வேண்டாம் 

தேவைப்படும் பொருட்கள் 

1. அன்று இட்ட பசும் சாணம் 
2. அன்று சேகரித்த பசுங்கோமியம் 
3. கருப்பட்டி (அ) கருப்பு வெல்லம் 
4. கடுக்காய்த்தூள் 
5. பயறு மாவு 
6. புளித்த தயிர் 

இந்த ஆறு பொருட்கள் கைவசம் இருந்தால் அமுதக்கரைசல் தயார் செய்துவிடலாம்.

தயாரிக்கும் முறை 

மேலே குறித்த பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக கலந்து கரைத்துக்கொள்ள வேண்டும்.

அந்தக்கரைசலை மூன்று நாட்கள் நிழலில் வைத்திருக்கவும்.

நான்காவது நாள் அமுதக்கரைசல் ரெடி 

ஒரு பங்கு கரைசலுடன் 19 மடங்கு நீர் கலந்து தெளிக்கலாம் அல்லது பாசன நீரில் கலந்துவிடலாம். ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் அமுதக்கரைசலை கைத்தேளிப்பானால் தெளிக்கலாம்.

இது குறித்த விளக்கம் அல்லது விவரம் பெற கீழ்கண்ட முகவரியை அணுகவும் தொடர்பு கொள்ளவும்.

பூமி இயற்கைவள ஆய்வு மற்றும் பயிற்சி மையம், தெக்குப்பட்டு, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு - பின்; 635 801, தொலைபேசி: 8526195370

இமெயில் :bhumii.trust@gmail.com, gsbahavan@gmail.com
1.
4.  




5

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...