Saturday, January 25, 2014

உடும்பு பிடிக்க வருகிறார்கள் - இளைஞர் பக்கம் EXCLUSIVE PAGE FOR YOUTH,



இளைஞர் பக்கம்
EXCLUSIVE PAGE FOR YOUTH, 


களஞ்சியம்


(பழங்குடி மக்களின் களஞ்சியம்  -ஜம்னாமரத்தூர்) 

உழவன் தத்துவ ஞானியாக பிறக்கிறான், 
பணக்காரன் தத்துவ ஞானியாக தாடி 
தரையைத் 
தொடும்வரை படிக்கவேண்டும் – 

ஈஸ்டோனியன் பழமொழி


1


உடும்பு பிடிக்க வருகிறார்கள்


பழனிக்கு போனால் பஞ்சாமிர்தமும் வாங்கி 

வரலாம், அப்படியே மாதம் ஒரு லட்சம் 

வருமானம் தரும் பட்டுவளர்ப்பையும் கற்றுக் 

கொள்ளலாம் என்கிறார்கள். மாதம் ஒரு லடசம் 

என்றால் ஒருநாள் வருமானம் 3000 ரூபாய். 

சேதியை தெரிந்துகொண்டு அயல்நாட்டு 

வேலையை உதறிவிட்டு அடுத்த பிளைட் 

பிடிக்க 

தயார், நம் ஊர் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள். 

“அசலூரில் ஆனை பிடிப்பதைவிட உள்ளூரில் 

உடும்பு பிடிப்பது மேல்” என்கிறார்கள். 

2

பீரோ சைஸ்


பீ ரோசைஸ்” ல் இருந்து  ஜீரோசைஸ்” க்கு 

குறைக்க கைகண்ட மருந்து கார்சீனியா பழங்கள் !

அமெரிக்கா,ஜப்பான், மற்றும் மேற்கத்திய 

நாடுகளில் உடல் இளைக்க விரும்பவோர் 

“கொண்டா ஒரு கார்சீனியா பழம்” என்கிறார்கள். 

ஹைட்ராக்சிசிட்ரிக்அமிலம்,குளுகோஜெனஸ்,

குளுகோநியோஜெனிசஸ் ஆகிய ரசாயன பொருட்கள் உடம்பை 

ஏற விடாது. 

கார்சீனியாவின்தமிழ்பெயர் குடம்புளி (அ) 

மலபார்புளி. கேரளா சரக்கு !

3

100 கன மீட்டர் 
பண்ணைகுட்டையின் மதிப்பு 
60 லட்ச ரூபாய்


10 மீட்டர் நீளம்,        10 மீட்டர் அகலம் 1 மீட்டர் ஆழம் உள்ள பண்ணைக்குட்டை மழைக்காலத்தில் ஒரு முறை நிரம்பினால் ஒரு லட்சம்  லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். மோசமான பருவத்தில் கூட 3 முறை நிரம்பும். ஆக மூன்று லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். ஒருலிட்டர் நீரின் விலை 20 ரூபாய் என்றால் மூன்று லட்சம் லிட்டரின் மதிப்பு 60 லட்ச ரூபாய். கனக்குப்   போட்டுப் பாருங்கள், தலைசுற்றும் ! 
4

நூற்புழு 



ஒருசென்ட்நிலத்தில் இரண்டு கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டால் 

நூற்புழு தாக்குதலைத் தடுக்கலாம். ரோஜா, மல்லிகை, கனாம்பரம், 

செம்பருத்தி, டேலியா, கிளாடியோலஸ், லில்லி, கார்னேஷன்  

ஆகிய எல்லா பயிர்களையும்  நூற்புழுக்கள்  தாக்கும். 

வேப்பம்பிண்ணாக்கைப்   பார்த்தால் நூற்புழுக்கள் காததூரம் 

ஓடிவிடும். 

5


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – திருக்குறள் (751)

பணம் முன்னால் வந்தால், தகுதிகள் தன்னால் வரும் 

PLEASE 
POST YOUR 
COMMENTS 
GSB
gsbahavan@gmail.com












No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...