Friday, January 3, 2014

9. மதிப்பு கூட்டி விற்பனை செய்யுங்கள் ADD VALUE AND SELL PROFITABLY




மதிப்பு கூட்டி விற்பனை

 செய்யுங்கள்

 

ADD VALUE AND SELL 

PROFITABLY

நம் நாட்டின் முக்கியமான தொழில்களில் 5 வது பெரிய தொழில் இது. நாம் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களில் நாம் மதிப்பு கூட்டி விற்னை செய்வது சுமார் 2 முதல் 3 சதம் மட்டுமே.

ஆனால் நெல் 73 சதம்ரூபவ் மக்காசோளம் 55 சதம்ரூபவ் பருப்பு வகைகள் 24 சதம்ரூபவ் எண்ணெய்வித்துக்கள் 45 சதம் என்ற அளவிலும் நவீன எந்திரங்கள் மூலம் மதிப்பு கூட்டி விற்பனை செய்யப் படுகின்றன.

இந்த தொழில் மூலம் வேலை வாய்ப்பு பெறுவோரின் அளவு சுமார் 18 முதல் 20 சதம் பேர். இந்தியாவில் மொத்த ஏற்றுமதியில் மதிப்பு கூட்டிய உணவுப் பொருட்களின் அளவு 13 சதம் மட்டுமே.

பதப்படுத்தும் தொழிலை நம் நாட்டில் 9000 தொழி;சாலைகள் செய்து வருகின்றன. இதில் காய்கறிகள் மற்றும் பழங்களை அடிப்படையாகக் கொண்டவை மட்டும் 5000. நம் நாட்டில் விரைவில் கெடாத தானியங்கள் மற்றும் எண்ணெய்வித்துக்களில் 5 முதல் 15 சதம் அறுவடை செய்த பின்னர் சேதாரம் ஆகின்றது என ஆய்வுகள் சொல்லுகின்றன.

நடுத்தரமான கால அவகாசத்தில் கெட்டுப்போகும் பழம்ரூபவ் காய்கறிகள்ரூபவ் பால்ரூபவ் முட்டைரூபவ் மீன் மற்றும் மாமிச வகைகளில் 30 முதல் 40 நஷ்டம் ஏற்படுகிறது.

மதிப்பு கூட்டிய பொருட்கள் என்றால் என்ன ?

அறுவடை செய்ததும் நெல்லாக விற்றால் லாபம் குறைவுரூபவ் அதையே அரிசியாக அரைத்து விற்றால் லாபம் அதிகம். அரிசியைப் பொரியாக்கலாம். ஒவ்வொரு முறை மதிப்பு கூட்டும் போதும் லாபம் கூடுதலாகக் கிடைக்;கும். இது ஒரு உதாரணம்தான். இப்படி ஒவ்வொரு பொருளாக விளை பொருளையும் மதிப்பு கூட்டி விற்பனை செய்ய முடியும்.



மதிப்பு கூட்டுவதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை

உணவுப் பொருட்களை மதிப்பு கூட்டும் போது முக்கியமான சிலவற்றை கவனிக்க வேண்டும்.

மூல உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள், மணம், ஆகியவை அப்படியே இருக்க வேண்டும்.

சாப்பிடுபவருக்கு பிடித்தமான சுவையுடன் தயாரிக்க வேண்டும்.

பதப்படுத்தும் உணவுப் பொருட்கள் சுத்தமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்க வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட பொருட்களை கவர்ச்சிகரமான பைகளில் டின்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

உற்பத்தி செய்யப்படும் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களுக்கு மிக அதகமான விலை இன்றி நியாயமான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

விவசாயிகள் தங்களால் முடிந்த சுலபமான முறையில் தங்கள் விளை பொருட்களை கிராமங்களிலேயே மதிப்பு கூட்டி விற்பனை செய்யலாம்.

தனிப்பட்ட விவசாயி அல்லது பலர் ஒன்று சேர்ந்தும் இதனைச் செய்யலாம்.

இதன் மூலம் வேலை வாய்ப்பையும் வருமானத்தையும் அதிகரிக்க முடியும்.

முக்கியமாக அறுவடைக் காலத்தில் அல்லது அதற்குப் பின்னர் ஏற்படும் சேதாரத்தை குறைக்கலாம்.

வாங்கி சாப்பிடும் மக்களுக்கு நல்ல தரமான உணவுப் பொருட்களை நியாயமான விலையில் கொடுக்க முடியும்.

பயிற்சிகள்

கீழ்கண்ட நிறுவனங்கள் மூலம் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

வேளாண்மை அறிவியல் மையங்கள்

இதர அரசு மற்றும் அரசு சாரா பயிற்சி மையங்கள்

நீங்களும் ஏற்றுமதி செய்யலாம்

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி மூலம் விற்பனை செய்யலாம். கவனமும்ரூபவ் அக்கறையும் இருந்தால் எந்த ஒரு விவசாயியும் ஏற்றுமதி செய்ய முடியும். இதற்கு படிப்பு அவசியம் இல்லை. பெரிய திறமையும் தேவை இல்லை. ஒரு சராசரி விவசாயி கூட தன்னுடைய விளைபொருட்களை உற்பத்தி செய்வது கூட மதிப்பு கூட்டிய பொருள் உற்பத்தி தொழில்தான்.

ஒரு நாட்டிற்கு தேவைப்படும் பொருள்ரூபவ் தெவைப்படும் தரம்ரூபவ் அளவுரூபவ் எடைரூபவ் ஆகியவற்றை தெரிந்துகொண்டு சுகாதாரமான சூழலில் பொருட்கனைத் தயாரித்து முறையாக பேக் செய்யத் தெரிந்து கொண்டால் போதும்ரூபவ் நீங்களும் ஒரு ஏற்றுமதியாளர்தான்.

உங்கள் விளை பொருட்களை மதிப்பூட்டப்பட்டஉணவுப் பொருளாகமாற்றி விற்பதால் உங்கள் வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்கும.;

1.  மதிப்பூட்டப்பட்டஉணவுப் பொருட்களைதயாரிப்பதால் கிராமங்களில் வேலைவாய்ப்பு கூடும்.
2.  அறுவடைசமயம் அல்லது அதற்குப் பின்னால் ஏற்படும் விளைபொருள் சேதாரம் குறையும்.

3.  வாங்கி சாப்பிடும் மக்களுக்கு நல்ல தரமான உணவுப் பொருட்கள் நியாயமான விலைக்குக் கிடைக்கும்.

4.  விவசாயிகள் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதால் அந்த லாபம் இடைத் தரகர்களுக்குப் போகாதுரூபவ் விவசாயிகளுக்கே சென்று சேரும்.

5.  மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் விவசாயிகள் சுலபமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

6.  அறுவடைக் காலங்களில் விளை பொருட்களின் விலை அடிமாட்டு விலைக்குப் போகாது.

7.  எல்லா கால கட்டத்திலும் விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

8.  விவசாயத்தின் மீது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை குறைந்து நம்பிக்கை ஏற்படும்.

9.  வுpவசாய நிலங்களை விற்று விட்டு நகரத் தொழில்களில் முதலீடு செய்வது தடுக்கப்படும்.

10. விவசாயிகளின் குடும்பவருமானம் உயர்வதுடன் அவர்களுடைய வாழ்க்கைத் தரம் உயரும.;

11. மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்களை கிராமங்களில் விவசாயிகளே தயாரிப்பதால் கிராமப்புற பொருளாதாரம் உயரும்.


தேவ.ஞானசூரிய பகவான், ஆசிரியர், விவசாயப் பஞ்சாங்கம்

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...