Thursday, January 2, 2014

2014 (புத்தாண்டு தீர்மானம்) -4





ஆசிரியர் பக்கம் 
EDITOR'S PAGE, 


2014

 புத்தாண்டு 

தீர்மானம்


லாபகரமான 
விவசாயம் 
நமது லட்சியம் 


புத்தாண்டை நாம் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

விவசாயிகளாகிய நாம் இதுரைக்கும் புதிய ரகங்கள், ரசாயன உரங்கள், பூச்சிமருந்துகள், அதிக மகசூல் இதுபற்றித்தான் அதிகம் பேசிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இப்போது சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இருந்தைவிட விவசாயத்தின்மீது இருந்த நம்பிக்கயை நாம்  கொஞ்சம்கொஞ்சமாக இழந்து வருகிறோம். அதன் விளைவாக இன்று பட்டிதொட்டிகளிலெல்லாம் கூட ரியல் எஸ்டேட் வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது.

இதுரை நமது வாழ்க்கையின் வழியாக இருந்த விவசாயத்தை லாபகரமானத் தொழிலாக மாற்றிக்காட்டுவோம்.

முதல் பசமைப்புரட்சியில் புதிய ரகங்கள் நமது தாரக மந்திரமாக இருந்த்து. இரண்டாவது பசமைப்புரட்சிக்கு லாபகரமான விவசாயம் என்தை நமது ‘குறி’ யாகக் கொள்ளவேண்டும்.

முடியும் என்ற நம்பிக்கையோடு காலம் கருதிச்செய்தால் ,இந்த உலகம்கூட நம் மடியில் வந்து விழும் என்ற நம் திருக்குறள் தாத்தா, வௌளத்னைய மலர் நீட்டம் என்றுசொல்லி ‘நீ என் நினைக்கின்றாயோ அது நடக்கும் என்றும் சொல்லுகிறார்.

மாற்றம் என்றசொல்லைத் தவிர மற்ற எல்லாம் மாறிவிடும். மாற்றம் இல்லை என்றால் இந்த வாழ்க்கை வாட்டம்தான் தரும், ஓட்டம் இல்லாத நீர் போல.

வெளிநாடுகளில் வேலைபார்க்கும் மென்பொருள்பொறியாளர்கள்கூட இன்று விவசாயத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இனறைய விவசாயம் படித்த இளைஞர்களின் கையில் பாதுகாப்பாக மாறி வருகிறது.

மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி, இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பயன்பாடு, திருந்திய சாகுபடிமுறை, துல்லிய பண்ணைத் தொழில்நுட்பங்கள், சொட்டுநீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம்        கம்ப்யூட்டர், இன்டரநெட், வெப்சைட், போன்ற  சக்தி வாய்ந்த தளவாடங்களுடன் இரண்டாவது பசுமைப்புரட்சி வெற்றிநடைபோட்டு விரைந்து வருகிறது.

இனிவரும் காலத்தில் ‘ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர். என்ற திருவள்ளுவரின் வாக்கு மெய்ப்படும். விவசாயம் லாபகரமானதாக மாறும்.

இடைக்காலத்தில்   இழந்துபோன சமூக அந்தஸ்தை மீட்டு லாபம் ஈட்டுவதிலும் விவசாயத்தை முன்வரசையில் உயர்த்திக் காட்டுவோம் என்பதை புத்தாண்டு  சூளுரையாக ஏற்போம்.

லாபகரமான விவசாயம் என்பதை  நமது 2014 ம் ஆண்டின் லட்சியமாகக் கொள்வோம். உங்கள் லட்சியப் பயணத்திற்கு விவசாயப் பஞ்சாங்கம் உறுதுணையாக இருக்கும்.

தேவ. ஞானசூரியபகவான்
ஆசிரியர், விவசாய பஞ்சாங்கம்



ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...