Sunday, January 26, 2014

‘ ஊதாக்கலரு ரிப்பன் ’‘ A TECHNOLOGY TO RETAIN AND ATTRACT YOUTH TO AGRICULTURE’ – THE HINDU



இளைஞர் பக்கம் 
EXCLUSIVE PAGE FOR YOUTH

‘ ஊதாக்கலரு ரிப்பன் ’

‘A TECHNOLOGY TO RETAIN AND ATTRACT
YOUTH TO AGRICULTURE’ – THE HINDU

“ஏ டெக்னாலஜி டு ரீடெய்ன் அண்ட் அட்ராக்ட் யூத் டு 

அக்ரிகல்ச்சர்”

இளைஞர் பக்கம் 
EXCLUSIVE PAGE FOR YOUTH



கம்ப்யூட்டரும் மவுசும் கலப்பை பிடிக்க
தொடங்கிவிட்டன !


“யார்ர்ர்ர்ர்ரு இந்த பாண்டியன் ?
போடுவோம் அவருக்கு ஒரு சலாம்”

இந்திய விவசாயம் இளைஞர்களிடம் கைமாறுகிறது !

வலைப்பூ
நேயர்களுக்கு
வணக்கம் !

எப்படி இருக்கிங்க ? சவுக்கியமா ?

இந்த வாரத்தில் புதுசா களஞ்சியம் அப்படீன்னு ஒருதொடர் உங்களுக்காக அறிமுகம் செஞ்சிருக்கோம்.

அடுத்தவாரம் ‘சாமக்கோடாங்கி சங்கரலிங்கம்’ விவசாய கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கும்.

நேயர்கள் கேள்விகளைகேட்கும் வரை சங்கரலிங்கம் கேள்வி கேட்பார், சாமக்கோடாங்கி பதில்சொல்லுவார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27 ம் தேதி நமது விவசாய பஞ்சாங்கத்தைத் தொடங்கினோம்.

நீங்கள் வீசும் வலைக்கு கிடைக்குமாறு இதுவரை ஏறத்தாழ 38 செய்திளை கடந்த 30 நாட்களில் தளம் இறக்கி உள்ளோம்.

900 முதல் 1000மில்லி மீட்டர்  மழை கிடைத்தும் வறட்சி நம்மை வாட்டி வதக்கு​ம் நிலை பற்றிய ஒருசெய்தி !

வெறும் 300 மில்லிமீட்டர் மழையை வைத்துக்கொண்டு உலகத்தில் விவசாய நாட்டாண்மை செய்யும் இஸ்ரேல் பற்றிய மயிர்கூச்செரியும் செய்தி !

ஆரம்ப காலத்தில் நாணயமாக முகம் காட்’டி இடைக்காலத்தில் வார்த்தை தவறிப்போன பருவமழை பற்றிய சோகக்கதை !

பதினான்காயிரம் மில்லிமீட்டர் ஆண்டுதோறும் பெறுவதற்காக உலக சாம்பியன் பட்டம் வென்றும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க முடியாமல் ட்ரக்குகளில் தண்ணீர்கொண்டு செல்லும் சிரபுஞ்சியின் கண்ணீர்க்கதை !

இப்படியாக நவரசம் ததும்பும் செய்திகள் நமது வலைத்தளம் நிறைய்ய...நி றை ய தொடர்ந்து கிடைக்கும்.

இனறைக்கு முக்கியமாக ‘இந்து’ ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த ஒருசெய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இந்திய விவசாயம் இளைஞர்ளை கவர்ந்து இழுக்கிறது !

‘வந்தே தீரும்’ என்று எதிர்பார்த்த தருணம் வந்துவிட்டது !

விவசாயம் கைமாறுகிறது !

படித்த பாட அறிவு, படிக்காமல்  படித்த பட்டறிவு,  

கணினியும வலைத்தளமும் வாரிக் கொடுக்கும் உலக அறிவு,  

பாரம்பரியமாய் குரோமோசோமில் சேமித்த அறிவு – இப்படி ஏகப்பட்ட 

தளவாடங்களுடன் இந்திய இளைஞர்கள் விவசாயத்தில் 

குதிக்கிறார்கள்.


அரசு வே​லையாக இருந்தாலும் சரி ! தனியார் கமபெனியாலும் சரி ! அயல்நாட்டில் அசுரச்சம்பளம் !

எது எப்படி இருந்தாலும், சொந்த நிலத்தில் அந்த வியர்வையை 

சிந்தினால் அதைவிட பலமடங்கு பணம் பார்க்கலாம் என்று 

முடிவெடுக்கத் தொடங்கிவிட்டார்கள் இந்திய இளைஞர்கள்.

சமீபத்தில் ‘இந்து’ ஆங்கில இதழில் வந்தசெய்தி இதனை உறுதி செய்கிறது.
மரக்காணம் கிராமத்தில் எம் பி ஏ பட்டதாரி கார்த்திகேயன் சொல்லுகிறார்

“எந்த வேலை செய்தாலும் அதிகபட்சமாக மாதம் 50000 ரூபாய் என்று 

வருஷத்தில் 6 லட்சம் பார்க்கலாம்”



“ஆனால் எனக்கு சொந்தமான நான்கு ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி 

போட்டு 12 லட்சம் சம்பாதிக்கிறேன்”



“அத்தோடு நான் டிரிப் இரிகேஷன்​ கம்பெனி ஒன்றையும் தொடங்கி

இருக்கிறேன்” என்றகிறார் நம்பிக்கையுடன் இந்த மரக்காணம் பட்டதாரி
  

இளைஞர் கார்த்திகேயன்.



அதுமட்டுமல்ல, தனக்குசொந்தமான 93சென்ட் நிலத்தில் 70 நாட்களில்

தர்ப்பூசணி போட்டு நா ன் கு ல ட் ச த் து  ப தி னா ன் கா யி ர ம்

 ரூபாய் சம்பாதித்த ஒரு பஸ் கண்டக்டர் தன் வேலைக்கு டபிள் விசில்

 கொடுத்து விட்டார் !

“ ஏ டெக்னாலஜி டு ரீடெய்ன் அண்ட் அடராக்ட் யூத் டு அக்ரிகல்ச்சர்” 

என்ற தலைப்பில் ‘இந்து’ வில் பொங்கல் வாரத்தில் 

சக்கரைப்பொங்கலாக வந்த அற்புதமான செய்தியை எழுதி இருப்பவர் 

எம் ஜே பிரபு ! அவருக்கு ‘விப’ தனது பாராட்டுகளைப் பதிவுசெய்கிறது.

பட்டதாரி இளைஞர்ளையும் வளைத்துப்போடும் இந்த ‘வல்லிய’ தொழில்நுட்பங்ளைத் தந்தது ‘அயம்வாம்’ தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக் கழக திட்டம் ! பாராட்டுக்கள் !

இந்தசெய்தி வரக் காரணமான அயம்வாம் திட்ட இயக்குநர் டாக்டர் பி 

ஜே பாண்டியன் அவர்களுக்கு ஒரு ‘ஓ’ போடலாம். ஆனால் அது 

கொஞ்சம் பழசு ! தூசு தட்டவேண்டும்.

அறுபது வயசுபெரிசுகள் கூட பலசெட்டில் முணுமுணுக்கும் பாட்டு

 ஊதாப்பூ ரிப்பன்’ தான் ரொம்பப் பிரபலம் !

“யார்ர்ர்ர்ர்ரு இந்த பாண்டியன் ?

போடுவோம் அவருக்கு ஒரு சலாம்”

என்று பாடத் தோன்றுகிறது.

வேறு என்ன ? விவசாயத்திற்கு இளைஞர்ளை வரவேற்போம் !

கணக்கு மட்டுமே போட்டு வந்த கம்ப்யூட்டரும் மவுசும் இன்று 

கலப்பை பிடிக்க வந்திவிட்டன !

இதைப் பார்க்கும் வலைப்பூநேயர்களே ! உங்கள் ஒவ்வொருவருக்கும்

 எனதுவேண்டுகோள் !

உங்கள் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், உறவினர்கள், உடன் வேலைபார்ப்பவர்கள் எல்லொருக்கும் அறிமுகம் செய்யுங்கள் !



செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

எஃகதனிற் கூரிய தில் – திருக்குறள் – 759 பொருள்செயல்வகை)


எந்த எதிரியும் எழுந்திருக்க மாட்டான்

நீ அடித்த ஆயுதம் பணம் என்றால் – ச கோ ச

                        


Saturday, January 25, 2014

பத்து மலர்ப்பயிர்களும் புதிய உயர்விளைச்சல் ரகங்களும் - TEN FLOWER CROPS & HIGH YEILDING VARITIES


பத்து  மலர்ப்பயிர்களும்  

புதிய உயர்விளைச்சல் 

ரகங்களும் 


TEN FLOWER CROPS &

HIGH YEILDING

VARITIES


   

10 பூப்பயிர்கள்
(TEN FLOWER CROPS)

மானாவாரி விவசாயிகள் ஒரு ஆண்டில் ஒருமுறைதான் வருமானம் பார்க்க முடியும்.

மழை ஏமாற்றிவிட்டால் அதுவும் கனவாகப்போய்விடும்.

அதையும் சமாளிக்கலாம், எப்படி ?


நல்லமழை என்றால் புஞ்சையில்கூட இரண்டுபோகம் எடுக்கமுடியும். தண்ணீர்போதுமானதாக இருந்தாலும் இரணடுபோகம் எடுக்கலாம்.
மிக அரிதாக மூன்று போகம் பார்க்கலாம்.
ஆனால், ஓரளவு தண்ணீர் வசதியும் வஇகால் வசதி உள்ள மண்ணும் குறைவான  குடும்ப நபர்களும்  இருந்தால் போதும், தினசரி வருமானம்தான்.
என்ன பயிர் என்று யோசிக்கிறீர்களா ?

பூப்பயிர்போட்டு காசுபார்த்தவர்கள் மற்ற பயிர்ளை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள்.


பூப்பயிர் போடும்போது உயர்விளைச்சல் தரும் ரகங்ளைப் போடவேண்டும்.

அந்த பயிர்களுக்கு ஏற்ற மண்கண்டம் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.

அதற்கு இந்த அட்டவணை உபயோகமாக இருக்கும்.​


தினசரி வருமானம் தரும்
மலர்ப் பயிர்கள்
மலர்ப் பயிர் ரகங்ளும் எற்ற மண்வகையும்
FLOWER CROPS – VARITIES & SOIL TYPE
வ.எண்
பயிர்
ரகங்கள்
மண்
1
2
3
4
1
ரோஜா
எட்வர்ட்ரோஸ், ஆந்திராரெட்ரோஸ்
வடிகால்வசதி + மணற்சாரியான இருமண்பாடு
2
ஹைப்ரிட்ரோஸ்
கிளேடியேட்டர்,பேபிபிங்க்,சோபியாலரென்ஸ், ஏற்காடு 1, ஏற்காடு 2, ஏற்காடு 3
கடல்மட்டத்திற்கு 1500 மீட்டருக்கு மேல்
3
மல்லிகை
ஓர்அடுக்கு, ,இரண்டு அடுக்கு, இருவாட்சி, ராமநாதபுரம்லோகல்
வடிகால்வசதி + அங்ககச்சத்து
4
முல்லை
கோ. 1,கோ. 2
வடிகால்வசதி + இருமண்பாட்டு செம்மண்
5
ஜாதிமல்லி (பிச்சிப்பூ)
கோ. 1,கோ. 2
வடிகால்வசதி + இருமண்பாட்டு செம்மண்
6
கனகாம்பரம்
ஆரஞ்சு, ரெட், டெல்லி கனகாம்பரம்
வடிகால்வசதி + இருமண்பாட்டு மணல்சாரி
7
மெரிகோல்ட்

மெரிகோல்ட், பூசாநாரங்கி, கெய்ண்டாபூசா,பாசந்தி கெய்ண்டா
வடிகால்வசதி + இருமண்பாட்டு  மணல்சாரி
8
சம்பங்கி
மெக்சிகன் சிங்கிள், ஶ்ரீநகர்பிரிஜ்வால், பூனா, கல்கத்தா,சுவாசினி,பேங்களூர்
வடிகால்வசதி + இருமண்பாட்டு  மணல்சாரி
9
துலுக்கசாமந்தி
கோ.1, கோ.2, எம்.டி.யு.1
வடிகால்வசதி உள்ள செம்மண்
9
அரளி
சிங்கிள்ரோஸ், சிங்கிள்ஒயிட், சிங்கிளரெட், டபிள்டைப் ரகங்கள்
செஞ்சளை, களிமண், இருமண்பாடு (வடிகால் வசதியுடன்)
10
மரிக்கொழுந்து
உள்ளூர்ரகம்
வடிகால் வசதி உள்ள இருமண்பாடு

  


ஒரு அழகிய பெண் தன் சீதனத்தை அவள் முகத்தில் சுமக்கிறாள் - ஜெர்மானிய பழமொழி 

அழகும் அறிவும் ஒரேதிசையில் பயணம் செய்யாது - சிரியோலி பழமொழி 

அழகிய பறவைதான் கூண்டில் அடைபடுகிறது - 
சீனப் பழமொழி 

வறுமை  அழகை சிதைக்காது - இத்தாலிய பழமொழி 

அழகு சோறு போடுமா ? அதிர்ஷ்டம் சோறுபோடுமா ? - 
தமிழ் பழமொழி


PLEASE
POST 
YOUR
COMMENTS
                                       gsbahavan@gmail.com                                                 

உடும்பு பிடிக்க வருகிறார்கள் - இளைஞர் பக்கம் EXCLUSIVE PAGE FOR YOUTH,



இளைஞர் பக்கம்
EXCLUSIVE PAGE FOR YOUTH, 


களஞ்சியம்


(பழங்குடி மக்களின் களஞ்சியம்  -ஜம்னாமரத்தூர்) 

உழவன் தத்துவ ஞானியாக பிறக்கிறான், 
பணக்காரன் தத்துவ ஞானியாக தாடி 
தரையைத் 
தொடும்வரை படிக்கவேண்டும் – 

ஈஸ்டோனியன் பழமொழி


1


உடும்பு பிடிக்க வருகிறார்கள்


பழனிக்கு போனால் பஞ்சாமிர்தமும் வாங்கி 

வரலாம், அப்படியே மாதம் ஒரு லட்சம் 

வருமானம் தரும் பட்டுவளர்ப்பையும் கற்றுக் 

கொள்ளலாம் என்கிறார்கள். மாதம் ஒரு லடசம் 

என்றால் ஒருநாள் வருமானம் 3000 ரூபாய். 

சேதியை தெரிந்துகொண்டு அயல்நாட்டு 

வேலையை உதறிவிட்டு அடுத்த பிளைட் 

பிடிக்க 

தயார், நம் ஊர் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள். 

“அசலூரில் ஆனை பிடிப்பதைவிட உள்ளூரில் 

உடும்பு பிடிப்பது மேல்” என்கிறார்கள். 

2

பீரோ சைஸ்


பீ ரோசைஸ்” ல் இருந்து  ஜீரோசைஸ்” க்கு 

குறைக்க கைகண்ட மருந்து கார்சீனியா பழங்கள் !

அமெரிக்கா,ஜப்பான், மற்றும் மேற்கத்திய 

நாடுகளில் உடல் இளைக்க விரும்பவோர் 

“கொண்டா ஒரு கார்சீனியா பழம்” என்கிறார்கள். 

ஹைட்ராக்சிசிட்ரிக்அமிலம்,குளுகோஜெனஸ்,

குளுகோநியோஜெனிசஸ் ஆகிய ரசாயன பொருட்கள் உடம்பை 

ஏற விடாது. 

கார்சீனியாவின்தமிழ்பெயர் குடம்புளி (அ) 

மலபார்புளி. கேரளா சரக்கு !

3

100 கன மீட்டர் 
பண்ணைகுட்டையின் மதிப்பு 
60 லட்ச ரூபாய்


10 மீட்டர் நீளம்,        10 மீட்டர் அகலம் 1 மீட்டர் ஆழம் உள்ள பண்ணைக்குட்டை மழைக்காலத்தில் ஒரு முறை நிரம்பினால் ஒரு லட்சம்  லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். மோசமான பருவத்தில் கூட 3 முறை நிரம்பும். ஆக மூன்று லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கலாம். ஒருலிட்டர் நீரின் விலை 20 ரூபாய் என்றால் மூன்று லட்சம் லிட்டரின் மதிப்பு 60 லட்ச ரூபாய். கனக்குப்   போட்டுப் பாருங்கள், தலைசுற்றும் ! 
4

நூற்புழு 



ஒருசென்ட்நிலத்தில் இரண்டு கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட்டால் 

நூற்புழு தாக்குதலைத் தடுக்கலாம். ரோஜா, மல்லிகை, கனாம்பரம், 

செம்பருத்தி, டேலியா, கிளாடியோலஸ், லில்லி, கார்னேஷன்  

ஆகிய எல்லா பயிர்களையும்  நூற்புழுக்கள்  தாக்கும். 

வேப்பம்பிண்ணாக்கைப்   பார்த்தால் நூற்புழுக்கள் காததூரம் 

ஓடிவிடும். 

5


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள் – திருக்குறள் (751)

பணம் முன்னால் வந்தால், தகுதிகள் தன்னால் வரும் 

PLEASE 
POST YOUR 
COMMENTS 
GSB
gsbahavan@gmail.com












ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...